twitter
    bredcrumb

    யானை வெற்றிக்காக முருகனிடம் வேண்டிய அருண் விஜய்...மலேசியாவில் சாமி தரிசனம் செய்த அருண் விஜய்

    By Mohana Priya
    | Published: Monday, June 27, 2022, 18:24 [IST]
    யானை படம் வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக மலேசியாவில் உள்ள புகழ்பெற்ற பத்துமலை முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் அருண் விஜய்.
    யானை வெற்றிக்காக முருகனிடம் வேண்டிய அருண் விஜய்...மலேசியாவில் சாமி தரிசனம் செய்த அருண் விஜய்
    1/10
    நடிகர் விஜய்குமாரின் மகனான அருண் விஜய், அருண்குமார் என்ற பெயரில் பிரியம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அருண்குமார் என்ற பெயரிலேயே பல படங்களில் நடித்தார். ஆனால் அவர் ஆரம்ப காலத்தில் அவர் நடித்த எந்த படங்களும் பேசப்படவில்லை.
    யானை வெற்றிக்காக முருகனிடம் வேண்டிய அருண் விஜய்...மலேசியாவில் சாமி தரிசனம் செய்த அருண் விஜய்
    2/10
    கிட்டதட்ட தோல்வி படங்களாகவே அமைந்தது. இதனால் கன்னடம் உள்ளிட்ட பிற மொழிகளில் வில்லன் உள்ளிட்ட ரோல்களில் நடித்து வந்தார். பிறகு தனது பெயரை அருண் விஜய் என மாற்றிக் கொண்டார்.
    யானை வெற்றிக்காக முருகனிடம் வேண்டிய அருண் விஜய்...மலேசியாவில் சாமி தரிசனம் செய்த அருண் விஜய்
    3/10
    பெயரை மாற்றிய பிறகு தமிழ் டைரக்டர்களின் பார்வை அருண் விஜய் மேல் படத் துவங்கியது. அஜித் நடித்த உன்னை அறிந்தால் படத்தில் விக்டர் என்ற வில்லன் ரோலில் நடித்து தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார் அருண் விஜய்.
    யானை வெற்றிக்காக முருகனிடம் வேண்டிய அருண் விஜய்...மலேசியாவில் சாமி தரிசனம் செய்த அருண் விஜய்
    4/10
    அதுவும் சாதாரண வில்லன் கிடையாது. ஹீரோவுக்கு இணையாக, அதாரு அதாரு பாடலில் தனது முழு நடன திறமையையும் காட்டி, படத்தில் நடிப்பு திறமையையும் காட்டி அனைவரையும் அசர வைத்தார். தொடர்ந்து வில்லன் ரோல்களில் நடிக்கவே வாய்ப்புக்கள் வந்ததால், வில்லன் முத்திரை குத்தப்பட்டு விடுமோ என பயந்து தயக்கம் காட்டினார்.
    யானை வெற்றிக்காக முருகனிடம் வேண்டிய அருண் விஜய்...மலேசியாவில் சாமி தரிசனம் செய்த அருண் விஜய்
    5/10
    பிறகு தடம், குற்றம் 23 போன்ற படங்களின் மூலம் அதிரடி ஆக்ஷன் ஹீரோ ஆனார் அருண் விஜய். சமீபத்தில் தனது மகன் அர்னவ் விஜய் அறிமுகமான ஓ மை டாக் படத்தில் அழகான அப்பா ரோலில் அசத்தி இருந்தார் அருண் விஜய்.
    யானை வெற்றிக்காக முருகனிடம் வேண்டிய அருண் விஜய்...மலேசியாவில் சாமி தரிசனம் செய்த அருண் விஜய்
    6/10
    இந்த படத்தில் அப்பா விஜய்குமார், மகன் அர்னவ் ஆகியோருடன் இணைந்து நடித்திருந்தார். மூன்று தலைமுறை நடிகர்கள் ஒரே படத்தில் இணைந்து நடித்து அனைவரையும் கவர்ந்து விட்டனர்.
    யானை வெற்றிக்காக முருகனிடம் வேண்டிய அருண் விஜய்...மலேசியாவில் சாமி தரிசனம் செய்த அருண் விஜய்
    7/10
    தற்போது தனது மச்சான் டைரக்டர் ஹரி இயக்கி உள்ள யானை படத்தில் நடத்து முடித்துள்ளார் அருண் விஜய். ஜுன் 18 ம் தேதி ரிலீசாகும் என முதலில் அறிவிக்கப்பட்ட இந்த படத்தின் ரிலீஸ், கமலின் விக்ரம் படத்திற்காக இரண்டு வாரங்கள் தள்ளி வைக்கப்பட்டது. ஜுலை 1 ம் தேதி யானை ரிலீசாக உள்ளது.
    யானை வெற்றிக்காக முருகனிடம் வேண்டிய அருண் விஜய்...மலேசியாவில் சாமி தரிசனம் செய்த அருண் விஜய்
    8/10
    பிரியா பவானிசங்கர், ராதிகா சரத்குமார், பிரகாஷ்ராஜ், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ள யானை படம் கிராமத்து, குடும்ப சென்டிமென்ட், ஆக்ஷன் படமாக எடுக்கப்பட்டுள்ளது. இதில் தூத்துக்குடி தமிழில் பேசி நடித்துள்ளார் அருண் விஜய்.
    யானை வெற்றிக்காக முருகனிடம் வேண்டிய அருண் விஜய்...மலேசியாவில் சாமி தரிசனம் செய்த அருண் விஜய்
    9/10
    யானை படத்தின் ப்ரொமோஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. படத்தின் ப்ரோமோஷனுக்காக அருண் விஜய் தற்போது மலேசியா சென்றுள்ளார். அங்கு ரசிகர்களுக்கு வழங்குவதற்காக தான் கையெழுதிட்ட யானை படத்தின் போஸ்டர்களின் வீடியோவை அவரை வெளியிட்டிருந்தார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X