twitter
    bredcrumb

    காதல் – கல்யாணம் – கர்ப்பம்...ஆலியா பட் – ரன்பீர் கபூரின் சுவாரஸ்ய காதல் பயணம்

    By Mohana Priya
    | Updated: Monday, June 27, 2022, 13:12 [IST]
    காதல் திருமணம் செய்து கொண்ட ஆலியா பட் – ரன்பீர் கபூர் விரைவில் பெற்றோர் ஆக போகிறார்கள். இவர்களின் சுவாரஸ்யமான காதல் பயணம் பற்றி இங்கே பார்க்கலாம்.
    காதல் – கல்யாணம் – கர்ப்பம்...ஆலியா பட் – ரன்பீர் கபூரின் சுவாரஸ்ய காதல் பயணம்
    1/14
    பாலிவுட்டின் பிரபலமான காதல் ஜோடி / காதல் தம்பதியான ஆலியா பட் – ரன்பீர் கபூர் ஏப்ரல் 14 ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம், ரன்பீரின் மும்பை வீட்டில் நண்பர்கள், குடும்பத்தினர்கள் மட்டுமே கலந்து கொள்ள நடைபெற்றது.
    காதல் – கல்யாணம் – கர்ப்பம்...ஆலியா பட் – ரன்பீர் கபூரின் சுவாரஸ்ய காதல் பயணம்
    2/14
    இவர்களின் காதல் கதை மிகவும் சுவாரஸ்யமானது. ஆரம்பத்தில் ரன்பீர் கபூரும், தீபிகா படுகோனும் தான் காதலித்து வந்தனர். ஆனால் திடீரென இவர்களின் காதல் பிரேக் அப் ஆனதால், மற்றொரு பிரபல நடிகையான கத்ரீனா கைஃபுடன் ரன்பீருக்கு காதல் ஏற்பட்டது.
    காதல் – கல்யாணம் – கர்ப்பம்...ஆலியா பட் – ரன்பீர் கபூரின் சுவாரஸ்ய காதல் பயணம்
    3/14
    ஆனால் ரன்பீர் கபூர் காதலித்த இரண்டு நடிகைகளுமே வேறு வேறு பிரபல ஹீரோக்களை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்டனர். இதனால் தனது காதல் விவகாரங்கள் குறித்து ரன்பீர் மிகவும் தயங்கி உள்ளார்.
    காதல் – கல்யாணம் – கர்ப்பம்...ஆலியா பட் – ரன்பீர் கபூரின் சுவாரஸ்ய காதல் பயணம்
    4/14
    ஆனால் சிறு வயதில் இருந்தே ரன்பீரின் தீவிர ரசிகையாக இருந்துள்ளார் ஆலியா பட். 11 வயதிலேயே ரன்பீரை மிகவும் பிடிக்கும் என ஆலியா பட்டே பல முறை பேட்டிகளில் சொல்லி உள்ளார். 
    காதல் – கல்யாணம் – கர்ப்பம்...ஆலியா பட் – ரன்பீர் கபூரின் சுவாரஸ்ய காதல் பயணம்
    5/14
    ரன்பீர், டைரக்டர் சஞ்சய் லீலா பன்சாலியிடம் அசிஸ்டென்டாக இருந்துள்ளார். அப்போது பிளாக் படத்தின் நடிகர், நடிகை தேர்வு நடைபெற்ற போது தான் தனது ஃபேவரைட்டான ரன்பீரை ஆலியா முதல் முறையாக நேரில் சந்தித்துள்ளார். முதல் சந்திப்பிலேயே இவர்களுக்குள் நட்பு மலர்ந்துள்ளது.
    காதல் – கல்யாணம் – கர்ப்பம்...ஆலியா பட் – ரன்பீர் கபூரின் சுவாரஸ்ய காதல் பயணம்
    6/14
    ஆரம்பத்தில் ஃபிரண்ட்சாக இருந்த இவர்கள் பிரம்மாஸ்திரா படத்தில் ஒன்றாக சேர்ந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியானதால் இருவரும் காதலிப்பதாக வதந்தி பரவியது. ஆலியாவை பிடிக்கும் என்றாலும், ஏற்கனவே 2 காதல் தோல்விகள் காரணமாக ரன்பீர் எதையும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் இருந்துள்ளார்.
    காதல் – கல்யாணம் – கர்ப்பம்...ஆலியா பட் – ரன்பீர் கபூரின் சுவாரஸ்ய காதல் பயணம்
    7/14
    ஆனால் ஆலியா பட் நடித்த ஹை வே படத்தின் ப்ரொமோஷனுக்கு ரன்பீர் – ஆலியா இருவரும் ஒன்றாக வந்ததால் இவர்களின் காதல் ஏறக்குறைய மீடியாக்களால் கன்ஃபார்ம் செய்யப்பட்டது. அதற்கு பிறகு பல பிரபலங்களின் திருமண விழாக்களிலும் இவர்கள் ஒன்றாகவே கலந்து கொண்டனர்.
    காதல் – கல்யாணம் – கர்ப்பம்...ஆலியா பட் – ரன்பீர் கபூரின் சுவாரஸ்ய காதல் பயணம்
    8/14
    தனது காதலை ஆலியா பட்டிடம் சொல்வதற்கு முன் ப்ரஸ்மீட்டில் தான் ரன்பீர் முதல் முறையாக அறிவித்தார். அதே சமயம், தனது காதல் புதியது. அது தவிர மேற்கொண்டு பேச எதுவும் இல்லை என கூறி கடந்த கால வாழ்க்கை பற்றி பேச்சுக்களுக்கு ஃபுல்ஸ்டாப் வைத்தார்.
    காதல் – கல்யாணம் – கர்ப்பம்...ஆலியா பட் – ரன்பீர் கபூரின் சுவாரஸ்ய காதல் பயணம்
    9/14
    ரன்பீர் ஓப்பனாக சொன்ன பிறகு தான் ஆலியாவும் தனது காதலை வெளிப்படையாக சொன்னார். எங்களுக்கு இடையே உள்ளது உறவு கிடையாது. அழகான நட்பு. இது ஆழமானது. இப்போது வானத்தில் மிதப்பதை போல் உணர்வதாக, காதல் உணர்வை மிக அழகாக ப்ரஸ்மீட்டில் சொன்னார் ஆலியா.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X