twitter
    bredcrumb

    அனல் பறக்கும் ஆக்ஷன், பைக் ரேஸ்...மாஸ் காட்டிய அஜித்தின் வலிமை மோஷன் போஸ்டர்

    By Mohana Priya
    | Published: Sunday, July 11, 2021, 18:31 [IST]
    அஜித் நடிக்கும் வலிமை படத்தின் ஃபஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டரை தயாரிப்பாளர் போனி கபூர் இன்று வெளியிட்டார்.
    அனல் பறக்கும் ஆக்ஷன், பைக் ரேஸ்...மாஸ் காட்டிய அஜித்தின் வலிமை மோஷன் போஸ்டர்
    1/6
    ஹச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். கடந்த 2 ஆண்டுகளாக அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வரும் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது.
    அனல் பறக்கும் ஆக்ஷன், பைக் ரேஸ்...மாஸ் காட்டிய அஜித்தின் வலிமை மோஷன் போஸ்டர்
    2/6
    இதில் அஜித் மீண்டும் இளமை தோற்றத்திற்கு மாறி, பைக் ரேஸில் மிரட்டும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார்.
    அனல் பறக்கும் ஆக்ஷன், பைக் ரேஸ்...மாஸ் காட்டிய அஜித்தின் வலிமை மோஷன் போஸ்டர்
    3/6
    Power is in the state of mind என்ற வாசகத்துடன் மோஷன் போஸ்டரை, தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டுள்ளார். 
    அனல் பறக்கும் ஆக்ஷன், பைக் ரேஸ்...மாஸ் காட்டிய அஜித்தின் வலிமை மோஷன் போஸ்டர்
    4/6
    பைக் ரேஸ், ஆக்ஷன், அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்ததாக வலிமை படம் அமைந்திருக்கும் என்பதை மோஷன் போஸ்டர் காட்டுகிறது.
    அனல் பறக்கும் ஆக்ஷன், பைக் ரேஸ்...மாஸ் காட்டிய அஜித்தின் வலிமை மோஷன் போஸ்டர்
    5/6
    மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்ட 10 நிமிடங்களிலேயே 15,000 க்கும் அதிகமான பார்வைகளை இது பெற்றுள்ளது. படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    அனல் பறக்கும் ஆக்ஷன், பைக் ரேஸ்...மாஸ் காட்டிய அஜித்தின் வலிமை மோஷன் போஸ்டர்
    6/6
    மோஷன் போஸ்டரில், வலிமை படம் 2021 ல் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விரைவில் படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என்பது உறுதியாகி உள்ளது. 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X