கணவன் மனைவி பிரச்சனையா? மன அழுத்தம்.. ஸ்ரீகாந்திற்கு புத்தி எங்க போச்சு.. கே.ராஜன் பேட்டி!

சென்னை: போதைப்பொருளை பயன்படுத்தியதாக பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஸ்ரீகாந்த் கொடுத்த தகவல் அடிப்படையில் நடிகர் ஸ்ரீகிருண்ணா கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தயாரிப்பாளர் கே ராஜன் IndiaGlitz Tamil யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், பல ஆண்டு முயற்சிக்க பிறகு நடிக்க ஸ்ரீகாந்த் நடித்த ரோஜா கூட்டம் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த பாடத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தார் ஸ்ரீகாந்த். அப்போது நடிகர்கள் அனைவரும் நண்பர்கள் சிலருடன் இணைந்து ஜாலிக்காக குடிக்க ஆரம்பிக்கிறார்கள். இன்னும், ஒரு சிலர் இருக்கிறார்கள் கேரவனில் குடித்துவிட்டு வந்து பின்பு நடிப்பவர்களும் இருக்கிறார்கள். புகழின் உச்சியில் இருந்தபோது ஜாலிக்காக குடித்து பழகிய இவர்கள் பட வாய்ப்பு இல்லாமல் போன பிறகு மனவிரத்தியால் அதற்கு அடிமையாகி விடுகிறார்கள்.

Srikanth Sri krishna Producer K Rajan
Photo Credit:

நடிகர் ஸ்ரீகாந்த்: நடிகர்கள் மட்டும் தான் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. பல நடிகைகளும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருக்கிறார்கள். படத்தின் சக்ஸஸ் மீட், சினிமா பார்ட்டி என நடிகைகள் குடிப்பது அதிகரித்துவிட்டது. அதில், இப்போது ஸ்ரீகாந்தம், கிருஷ்ணாவும் பிரச்சனைகள் சிக்கி கைதாகி இருக்கிறார்கள். வீட்டில் கணவன் மனைவி இருவருக்குமே இடையே ஏதோ சில பிரச்சனைகள் இருந்திருக்கிறது. அது மட்டுமில்லாமல் ஸ்ரீகாந்திற்கு பட வாய்ப்பு இல்லாததால் இருக்கிற பணத்தை வைத்து கடனை வாங்கி ஒரு படத்தை எடுத்து இருக்கிறார்.

மன உளைச்சல்: ஆனால், அந்த படம் வெளியில் வராமல் போனதால் பிரச்சனையில் சிக்கி இருக்கிறார். ஒரு பக்கம் குடும்ப பிரச்சனை, ஒரு பக்கம் பண பிரச்சனை என்ன மன உளைச்சலுக்கு ஆளானதால் ஸ்ரீகாந்த் மதுவிற்கு அடிமையாகி இருக்கிறார். பிரசாத் என்பவரிடம் படம் எடுக்க 10 லட்சத்தை கொடுத்தேன், அவர் பணத்தை எடுக்காததால், பணத்தை கேட்டேன் அவர் எனக்கு போதை பொருளை கொடுத்தார் என்று சொல்லி இருக்கிறார். அவர் கொடுத்தால் ஸ்ரீகாந்திற்கு புத்தி எங்கே சென்றது? உடனே இது குறித்து காவல் நிலையத்தில் அவர் புகார் கொடுத்து இருக்க வேண்டும். அதை செய்யாமல் அதை பயன்படுத்தி இப்போது பிரச்சனையில் சிக்கி இருக்கிறார்.

கேவலமான விஷயம்: போதை பொருள் பழக்கம் என்பது சினிமாவில் மட்டுமல்ல, தற்போது பள்ளி கல்லூரிகளிலும் அது அதிகரித்து இருக்கிறது. அதை தடுக்க அரசாங்கம் தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்பெல்லாம் படங்களில் மதுவை குடிப்பது போன்ற காட்சிகளை அதிகமாக வைக்க மாட்டார்கள். ஆனால், இப்போது வருகின்ற அனைத்து படங்களிலும் மது குடிக்கும் காட்சி கட்டாயம் இருக்கிறது. அதுவும் பெண்கள் குடிப்பது போல காட்சியை வைக்கிறார்கள், இது மிகவும் கேவலமான, தமிழ் பண்பாட்டை சீரழிக்கும் விஷயம். இப்படி ஒரு காட்சியை வைக்க இயக்குநர்கள் வெட்கப்பட வேண்டமு. இது எவ்வளவு பெரிய தவறான விஷயம். அதேபோல சினிமாவில் போதை பொருள் பயன்படுத்துவதை தடுக்க நடிகர் சங்கம் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் கே ராஜன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X