twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நஞ்சுபுரம் - விமர்சனம்

    By Shankar
    |

    நடிகர்கள்: ராகவ், மோனிகா
    பிஆர்ஓ: கிளாமர் சத்யா
    இசை: ராகவ்
    இயக்கம்: சார்லஸ்
    தயாரிப்பு: ப்ரீதா ராகவ்
    வெளியீடு: தேனான்டாள் பிக்சர்ஸ்

    கிராமங்களின் சாதீய மூடத்தனத்தைக் கண்டிக்க, ஒரு மூடப் பழக்கத்தை மையமாகக் கொண்ட கதையையே கையிலெடுத்திருக்கிறார்கள். பாம்புக் கதைதான் என்றாலும் அதன் மீது ஒரு சமூகக் கொடுமைக்கு எதிரான கருத்தை பயணிக்க வைத்திருக்கும் தயாரிப்பாளர் - நடிகர் ராகவை பாராட்டத்தான் வேண்டும்.

    நஞ்சுபுரம் பாம்புகளால் சூழப்பட்ட மலைக்கிராமம். அங்குள்ள மக்களின் பயமே பாம்புதான். ஆனால் பயப்படாத ராகவ் மட்டும் பாம்புகளை தைரியமாக டீல் பண்ணுகிறார். அப்படியே தாழ்த்தப்பட்ட மோனிகாவிடம் காதலிலும் விழுகிறார் (ஒரு பாம்பிடமிருந்து காப்பாற்றிதான்!).

    காதலுக்கு நஞ்சுபுரத்தின் பாம்புகளின் நஞ்சு பிரச்சனையா அல்லது உயர்வகுப்பின் சாதி நஞ்சு பிரச்சனையா என்பதை மீதிக் கதை சொல்கிறது.

    கதையின் கரு ஓகே ரகம்தான் என்றாலும், அனகோண்டாவையெல்லாம் பார்த்துவிட்ட காலத்தில் நல்ல பாம்பை பார்த்து பயப்பட முடியாதது நமது குற்றமில்லை. பாம்பு கடித்துவிட்ட ஒரு பெண்ணை காப்பாற்ற மலைப்பாதை வழியாக போனால் எப்படியும் காப்பாற்றிவிடலாம் என முடிவு செய்யும் ராகவை, அந்த வழியாகப் போனால் பாம்புகள் உயிரோடு விடாது என ஊர் மக்கள் பயமுறுத்த நாமும் பயந்துதான் போகிறோம். ஆனால் கடினமாக ஆரம்பத்தில் கடக்கும் மலையில் ஒரு திருடன் சாவகாசமாய் பாறையின்மீது படுத்துக் கிடக்க சப்பென்றாகிவிடுகிறது..

    ஒளிப்பதிவையும், கிளைமாக்சையும் தெளிவாகக் கையாண்டவர்கள் கதையை பழைய ராமநாராயணன் பாணியிலே எடுக்காமல் இன்னும் அழுத்தமாக இந்த காலத்திற்கேற்ப எடுத்திருந்தால் போட்டிருக்கும் உழைப்பிற்கு மிகப் பெரிய மரியாதை கிடைத்திருக்கும்.

    ஹீரோவாக ராகவ் உணர்ந்து நடித்துள்ளார். வெறும் பாட்டு, டான்ஸ் என்று இல்லாமல் நடிக்கக் கிடைத்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டுள்ளார் மோனிகா.

    ராகவ் இசையில் புஷ்பவனம் குப்புசாமியின் பாடல் காதைக் கவர்கிறது.

    நாற்பதுநாள் காத்திருந்து பாம்பு கொத்தும்.., உயர்சாதிப் பண்ணையார் தாழ்த்தப்பட்ட பெண்ணை வைப்பாட்டியாக வைப்பது போன்ற பழைய பஞ்சாங்கத்திலிருந்து மொதல்ல வெளியில வாங்கப்பான்னு கூவத் தோணுது.

    ஆனால், அந்த கடைசிக் கிளைமாக்ஸில் வரும் ஒரு வரி வசனம் 'நச்'! சொல்ல வந்த அழுத்தமான கருத்தை சமூகத்துக்கு ஒரு பாடமாகச் சொல்கிறது.

    நஞ்சுபுரம்- இன்னும் நச்சுன்னு சொல்லியிருக்கலாம்!

    English summary
    Nanjupuram is a film based on castism that still prevailing in Villages. Actor Ragav turned full fledged hero, musician and producer through this flick.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X