For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

100 Review: தமிழில் மற்றுமொரு போலீஸ் படம் 100... ஆனா இது கொஞ்சம் புதுசு! விமர்சனம்

|
Rating:
2.5/5
சென்னை: காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் வேலை பார்க்கும் ஒரு சாதாரண உதவி ஆய்வாளர், சாகசகாரராக மாறி நாட்டில் நடக்கும் குற்றங்களை எப்படி தடுக்கிறார், குற்றவாளிகளை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே 100 திரைப்படத்தின் ஒன்லைன்.

போலீஸ் வேலைக்காக காத்திருக்கும் அதர்வா, சரியான அடாவடி பார்ட்டி. தனது உயிருக்கு உயிரான போலீஸ் நண்பனின் தங்கையிடம் சில்மிஷம் செய்த பையனை கல்லூரிக்குள்ளே நுழைந்து அடித்து துவைத்து துவம்சம் செய்கிறார். ஆனால் நண்பனின் தங்கையும், அந்த பையனும் காதலர்கள் என்பது பிறகு தான் தெரிய வருகிறது அதர்வாவுக்கு.

100 review: A crime thriller that will satisfy audience

அந்த பையனின் அக்கா ஹன்சிகாவை காதலிக்கிறார் நம்ம ஹீரோ. ஒரு ஐந்து நிமிட மெனக்கெடலில் ஹன்சிகாவும் அதர்வாவின் காதலை ஏற்க, பிறகு என்ன டூயட் தான். அதோடு தனது கடமை முடிந்தது என கிளம்பும் ஹன்சிகா, பழைய பட க்ளைமாக்சில் போலீஸ் வருவது போல், கடைசியில் ரீஎண்ட்ரிக் கொடுக்கிறார்.

இந்த கேப்பில் ஹன்சிகா தந்தையிடம் டியூஷன் படிக்கும் ஒரு பள்ளி மாணவி கொலை செய்யப்படுகிறார். தன்னை காதலித்துவிட்டு ஏமாற்றியதால் கொலை செய்தேன் என ஒரு மைனர் பையன் போலீசில் சரணடைகிறான்.

இது ஒருபுறம் இருக்க, உதவி ஆய்வாளர் வேலைக்கான பணியில் சேரும் அதர்வாவுக்கு செம ஷாக். சாகசங்கள் நிறைந்த போலீஸ் வேலையை எதிர்பார்த்து வந்தவருக்கு, காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் போன் அட்டண்ட் செய்யும் பணி தரப்படுகிறது. வேண்டா வெறுப்பாய் வேலையில் சேரும் அதர்வாவுக்கு, அவர் அட்டண்ட் செய்யும் 100வது தொலைபேசி அழைப்பு, ஒரு திருப்புமுனையை ஏற்படுத்துகிறது. அதன் பின்னர் குற்றங்களை கண்டுபிடிக்கும் சாகசங்களை செய்ய ஆரம்பிக்கிறார். அதுவும் ஒரு டீ குடிக்கும் கேப்பில். அது என்ன என்பது தான் முழு படமும்.

தமிழில் இதுவரை பல நூறு போலீஸ் படங்கள் வந்திருத்தாலும், காவல் கட்டுப்பாட்டு அறையில் வேலை பார்க்கும் போலீஸ் அதிகாரிகள் சம்மந்தப்பட்ட காட்சிகள் திரைக்கு புதுசு. அந்த வகையில் கவனம் ஈர்க்கிறார் இயக்குனர் சாம் ஆண்டன்.

முழுக்க முழக்க ஒரு கமர்ஷியல் படத்தை கொடுத்து, அதர்வாவை மாஸ் ஹீரோவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் இயக்குனர். ஆனால் அது எந்த அளவுக்கு ஒர்க்கவுட் ஆகிறது என்பது படத்தின் ரிசல்ட்டில் தான் தெரியும்.

100 review: A crime thriller that will satisfy audience

படத்தில் காட்டப்படும் குற்ற செயல்கள் பொள்ளாச்சி சம்பவத்தை நினைவுப்படுத்துகிறது. அதேபோல் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் பற்றியும் படத்தில் பேசியுள்ளார் இயக்குனர்.

தொடர்ந்து பெர்பாமன்ஸ் படங்களில் நடித்து வந்த அதர்வாவுக்கு ஒரு பக்கா கமர்ஷியல் படமாக அமைந்திருக்கிறது 100. ஒரு துடுப்பான போலீஸ் அதிகாரிக்கான பிட்டான உடல்மொழியுடன் அசத்துகிறார். பாசம், காதல், காமெடி, ஆக்ஷன், சென்டிமெண்ட் என அனைத்து காட்சிகளிலும் கலவையாக நடித்து ஸ்கோர் செய்கிறார்.

படத்தில் ஹன்சிகாவுக்கு மொத்தம் ஐந்து காட்சிகள் தான். ஏதோ ஜூனியர் ஆர்டிஸ்ட் போல் வந்து போகிறார். ஸ்லிம் ஆகிறேன் என நினைத்து, பழைய பொலிவை இழந்துவிட்டார். பார்ப்போம் அடுத்தடுத்த படங்களில் எப்படி தோன்றுகிறார் என்று.

நடுவில் வந்த பல படங்களை காட்டிலும், இதில் அதிக காட்சிகளில் வருகிறார் யோகி பாபு. போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் அவர் செய்யும் சேட்டைகள், கிச்சுகிச்சு மூட்டுகிறது. சில நிமிடங்கள் மட்டுமே வந்தாலும், படத்தை கலகலப்பாக்குகிறார் மனிதர்.

படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கும் தயாரிப்பாளர் மகேஷ், சோகமே உருவாய் தெரிகிறார். அந்த கதாபாத்திரத்தின் மீது இயல்பாகவே பரிதாபம் ஏற்பட்டுவிடுகிறது. வில்லனாக நடித்துள்ள ராகுல், பிஸ்டல் பெருமாளாக வரும் ராதாரவி, மைம் கோபி,மறைந்த நடிகர் சீனு மோகன், மைம் கோபி என அனைவருமே அவரவர் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

100 review: A crime thriller that will satisfy audience

படத்துக்கு இசை சாம்.சி.எஸ். என சொன்னால் தான் தெரிகிறது. பாடல்கள் எல்லாம் சுமார் ரகம் தான். ஏற்கனவே பல மாஸ் கமர்ஷியல் படங்களில் கேட்ட அதே இசை தான் பின்னணியில் ஒலிக்கிறது.

ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் தனது வழக்கமான ஸ்டைலில் இருந்து சிறிது விலகி வித்தியாசம் காட்டியிருக்கிறார். படத்தின் வேகத்தை சீராக வைத்திருக்க உதவியிருக்கிறார் எடிட்டர் பிரவீன் கே.எல்.

மிடில் கிளாஸ் பையனை பணக்காரப் பள்ளியில் சேர்த்தால், அவனது ஏக்கம் அவனை தவறான வழியில் கொண்டு சென்றுவிடும் என்கிறார் இயக்குனர். அதே போல் ஒரு போலீஸ் அதிகாரி, நேர்மையானவனாக இருந்தால், அவர் கடன்காரராகி, அவரது குடும்பமே நடுத்தெருவுக்கு வந்துவிடும் என்பது போன்ற மெசேஜ்களும் சொல்லாமல் சொல்லப்பட்டிருக்கிறது படத்தில்.

அவசரப்பட்டு 100க்கு டயல் செய்துவிட்டால், எப்படி மாட்டிக்கொள்வோமோ அப்படி தான் இருக்கிறது படமும். முதல் பாதி படம் ஏனோ தானோவென நகர்கிறது. இரண்டாம் பாதிக்கு பிறகு தான் படமே ஆரம்பமாகிறது. திரைக்கதையில் அதிக கவனம் செலுத்திய இயக்குனர், கதையிலும், லாஜிக் விஷயங்களிலும் அதேபோல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

மூளைக்கு வேலை கொடுக்காமல் படம் பார்த்தால், '100' படத்தை என்ஜாய் செய்யலாம்.

English summary
The tamil movie, 100 is a action film written and directed by Sam Anton.The film features Atharvaa and Hansika Motwani in the lead roles, while Yogi Babu portrays a supporting role. Its a commercial crime thriller film that will satisfy the audience.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more