twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    12.12.1950 விமர்சனம் #12121950Review

    By Shankar
    |

    எஸ் ஷங்கர்

    Rating:
    2.0/5
    Star Cast: கபாலி செல்வா, தம்பி ராமய்யா, ராஜ் திலக்
    Director: கபாலி செல்வா

    நடிகர்கள்: கபாலி செல்வா, தம்பி ராமய்யா, ராஜ் திலக், எம்எஸ் பாஸ்கர், ரிஷா, யோகி பாபு, ஜான்

    விஜய்

    ஒளிப்பதிவு: விஷ்ணு ஸ்ரீ

    இசை: ஆதித்யா - சூர்யா

    தயாரிப்பு: ஜியோஸ்டார்

    இயக்கம்: கபாலி செல்வா

    12.12.1950 Review

    (இடம்: பேலஸோ, ஃபோரம் மால், வடபழனி)

    ரஜினி கார்த்திக்: வணக்கம் பிரதர்.... எங்க இந்தப் பக்கம்.. எப்படி இருக்கீங்க... நாலு நாள்ல தலைவர் பிறந்த நாள் வருது... ஏற்பாடெல்லாம் எப்டி இருக்கு... இந்த வாட்டி தலைவரை பாக்க வாய்ப்பிருக்கா?

    ரஜினி முருகன்: வணக்கம்... சிறப்பா போயிட்டிருக்கு. இதுவரைக்கும் இல்லாத அளவு பிரமாண்டமா கொண்டாட தயாராகிட்டிருக்கோம். தலைவரை பார்க்க முடியுமா தெரியல... ஆனா, நம்ம தலைவர் பிறந்த தேதியையே தலைப்பா வச்சி ஒரு படம் வந்திருக்குன்னாங்க பசங்க... சரி, பார்த்துடுவோம்னு பேலஸோவுக்கு வந்தேன். சாயங்காலம்தான் படமாம்.

    ரஜினி கார்த்திக்: நான் இப்பதான் ஜாஸ் சினிமால பாத்துட்டு வரேன். அடுத்த ஷோ சத்யா பாக்கணும்...

    ரஜினி முருகன்: படம் எப்டி இருக்கு பிரதர்... நம்ம தலைவர் பேர காப்பாத்தற மாதிரி இருக்கா? அட்லீஸ்ட் அவரை சங்கடப்படுத்தாத மாதிரியாவது இருக்கா? என்ன கதை? தலைவரோட கபாலி கெட்டப்ல எதுக்கு வரார் இந்த செல்வா?

    ரஜினி கார்த்திக்: ஹலோ... இருங்க பிரதர்... இவ்ளோ கேள்விகளை ஒரே நேரத்துல கேட்டா எப்டி? படம் தலைவரை பெருமைப்படுத்துதோ இல்லையோ, அவரை சங்கடப்படுத்தற மாதிரி இல்லை என்பதே பெரிய விஷயம்தானே... ஆனா, காமெடி காட்சிகளுக்கு இவ்வளவு மெனக்கெட்ட செல்வா, கபாலி ரஜினி கெட்டப்ல வர்ற காட்சிகளை இன்னும் சிறப்பா பண்ணிருக்கலாம். முக்கியமா அந்த கெட்டப்பையே தவிர்த்திருக்கலாம்.

    கதை ஒவ்வொரு ரஜினி ரசிகரும் ஏதோ கட்டத்துல சந்திச்சதுதான். தீவிர ரசிகனான செல்வா, ஒரு குங்ஃபூ மாஸ்டர். ஒரு ராத்திரியில் தலைவர் போஸ்டரை ஒட்டிக்கிட்டிருக்கான். அப்போ, அந்த ஏரியா கவுன்சிலர் தலைவர் போஸ்டரை அசிங்கப்படுத்த முயற்சிக்கிறான். அதுல ரெண்டு பேருக்கும் செம ஃபைட். அதுல கம்பில குத்தி செத்துப்போறான் கவுன்சிலர். நம்மாளுக்கு ஆயுள் தண்டனை கிடைக்குது.

    செல்வா ஜெயில்ல இருக்கும்போது, தலைவரோட கபாலி ரிலீசாகுது. படத்தோட முதல் நாள் முதல் காட்சியை செல்வாவைப் பார்க்க வைக்கணும்னு பெயிலுக்கு அப்ளை பண்றாங்க, செல்வாவோட சிஷ்யனுங்க நாலுபேர். இதுக்கெல்லாம் பெயிலான்னு கடுப்பாகுது ஜெயில். அப்போதான் ஒரு காட்டேஜ்ல கவர்ச்சி ஐட்டம் ரிஷாவோட கும்மாளம் போட்டுக்கிட்டிருக்கிற சிறைத்துறை ஐஜி தம்பி ராமய்யா சிக்குறாரு. அவரை ப்ளாக்மெயில் பண்ணி பெயில் வாங்கிடறாங்க.

    ஸ்வீட் சர்ப்ரைசா, தலைவரைச் சந்திக்கவும் ஜான் விஜய் மூலம் அப்பாயின்மென்ட் கூட வாங்கிடறாங்க. செல்வா கபாலி எஃப்டிஎஃப்எஸ் (முதல் நாள் முதல் காட்சி) பாத்தாரா... தலைவரைச் சந்திச்சாரா? என்பதெல்லாம் மீதி.

    ரஜினி முருகன்: கதை கேக்க நல்லாதான் இருக்கு. ஏற்கெனவே கோல்மால்னு ஒரு நல்ல காமெடி படம் தந்தவராச்சே செல்வா? இதுல ஒரு டைரக்டரா எப்படி பண்ணிருக்காரு?

    ரஜினி கார்த்திக்: செல்வாவோட ஸ்பெஷலே காமெடிதான். ராஜ் திலக், யோகி பாபு, தம்பி ராமய்யா, ரிஷா அந்த ஹனி மூன் காட்டேஜ்ல அடிக்கிற லூட்டி செம. கமல் ரசிகரா வர்ற தம்பி ராமய்யா கலகலக்க வைக்கிறாரு. ஆனா செல்வா வர்ற சீரியஸ் காட்சிகள் இன்னும் நல்லா எடுத்திருக்க வேண்டியவை.

    ஜெயில்லயே ரொம்ப நாள் இருக்கிறதால, கபாலி கெட்டப்ல அவர் வர்றதா சொலறதைக் கூட ஏத்துக்கலாம். ஆனா கபாலி படம் பார்க்கிறதுக்கு முன்பே, கபாலில வர்ற தலைவர் இன்ட்ரோ சீன், கெட் அப்பெல்லாம் செல்வா போடறது ஒட்டல. தலைவரை இமிடேட் பண்றதும் கொஞ்சம் நெருடலா இருக்கு ப்ரோ. நம்மாளுங்க பிரச்சினையே இதுதான்!

    ரஜினி முருகன்: ஹீரோயின் யாரு... அதைப் பத்தி ஒண்ணும் சொல்லலயே?

    ரஜினி கார்த்திக்: நீங்க வேற ப்ரோ... குத்தாட்ட பார்ட்டி ரிஷாதான் கிட்டத்தட்ட ஹீரோயின். வேற யாரும் தனியா இல்ல.

    ரஜினி முருகன்: வேற என்ன ஸ்பெஷல்.. கமலை எதோ கிண்டலடிச்சிருக்காங்களாமே?

    ரஜினி கார்த்திக்: வேற... வேற... ஹாங்... ஒரே ஒரு சீன்ல தம்பி ராமய்யா, 'கமல் பேசறது புரியலன்னாலும் பிடிவாதமா தொடர்ந்து கேப்பேன்னு' சொன்னப்போ, சிலர் லேசா முணுமுணுத்தாங்க. அதைத் தவிர்த்திருக்கலாம். நம்ம தலைவர் அதையெல்லாம் விரும்ப மாட்டார். மத்தபடி கமல் பாடல்கள், கெட்டப்களை வைத்து மிக நாகரீகமாகவே காட்சிகள் வைத்திருக்கிறார் செல்வா. சிரிப்புக்கும் பஞ்சமில்லை. ரஜினி ரசிகர்கள் பெருந்தன்மை, எந்த சூழல்லயும் தலைவரை தொந்தரவு செய்யக் கூடாதுங்கற அவங்க மனப்பான்மையைச் சொல்லியிருக்கார். ஆனா அவங்க எந்த அளவுக்குப் பொறுப்பானவங்கன்னு காட்டவும் சில காட்சிகள் வச்சிருக்கலாம். என்னடா.. போயும் போயும் ஒரு போஸ்டர் சமாச்சாரம் கொல கேசு வரைக்கும் போக விடலாமா-ன்னு சிலர் கமெண்ட் அடிக்கவும் வாய்ப்பிருக்கு.

    12.12.1950 Review

    ரஜினி முருகன்: பாட்டு, ஒளிப்பதிவுன்னு டெக்னிக்கல் சமாச்சாரம் பத்தி?

    ரஜினி கார்த்திக்: மியூசிக் ஒண்ணும் பெரிசா இல்ல. செல்வா வர்ற சீன்லெல்லாம் தலைவர் பட நெருப்புடா மாதிரி ஏதோ பிஜிஎம் ஓடுது. இரைச்சலா இருக்கு. ஒளிப்பதிவு ஓகே.

    இருவரின் பேச்சையும் கவனித்துக் கொண்டிருந்த இன்னொரு ரசிகர் ரஜினி பாபு: சரி சரி... தலைவர் டயலாக் மாதிரி ஷார்ப்பா சொல்லுங்க சகோ... படம் பாக்கலாமா வேணாமா?

    ரஜினி கார்த்திக்: ஒரு சக தலைவர் ஃபேன் படம். அந்த மரியாதைக்கு நாம ஒரு வாட்டி பாக்கலாம் சகோ. மத்தவங்களைப் பொருத்தவரை அவரவர் விருப்பம்.

    English summary
    Review of Kabali Selva's directorial 12.12.1950
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X