twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    12th Man movie Review...மோகன்லாலின் மிரட்டல் நடிப்பில் 12th man எப்படி இருக்கு?

    |

    Rating:
    4.0/5

    நடிகர்கள் : மோகன்லால், உன்னி முகுந்த், அனுஸ்ரீ, அனு சித்தாரா, சைஜு குருப், ராகுல் மாதவ், அதிதி ரவி, பிரியங்கா நாயர், லியோனா லிசோய், அனு மோகன்

    இயக்கம் : ஜீத்து ஜோசப்

    இசை : அனில் ஜான்சன்

    சென்னை : த்ரிஷ்யம் படத்திற்கு பிறகு ஜீத்து ஜோசப் - ஆன்டஜி பெரும்பாவூர் கூட்டணியில் உருவாகி உள்ள மர்மங்கள் நிறைந்த த்ரில்லர் படம் 12th Man. மலையாளத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான 12th Man, த்ரிஷ்யம் 2 படத்தை போலவே ஓடிடி.,யில் நேரடியாக ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

    டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் மே 20 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. ஆசிர்வாத் சினிமாஸ் பேனரில் ஆன்டனி பெரும்பாவூர் தயாரித்துள்ளார். 163 நிமிடங்களைக் கொண்ட இந்த படத்திற்கு சென்சார் போர்டு யுஏ சான்று வழங்கி இருந்தது.

    12th man பட கதை என்ன

    12th man பட கதை என்ன

    சினிமாவில் பல காலமாக பார்த்து பழக்கப்பட்ட கதை, மிக சாதாரண கதைக்களம் என்றாமல் ஜீத்து ஜோசப் தனக்கே உரிய மிரட்டலான த்ரில்லர் ஸ்டையிலில் கூறி உள்ளார். ஒரு பெண் கர்ப்பமாக இருப்பதை டாக்டர் உறுதி செய்வது, தீபாவளி கொண்டாட்டம் என பாசிடிவ் வைப்போடு படம் துவங்குகிறது. தீபாவளி கொண்டாடிய அடுத்த நாளே கல்லூரி கால நண்பர்கள் தங்களின் மனைவி, காதலி ஆகியோருடன் சுற்றுலா செல்கின்றனர். Annie கேரக்டரில் நடித்திருக்கும் பிரியங்கா நாயர் கர்ப்பமாக இருக்கும் சந்தோஷத்தை தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, இடுக்கி மாவட்டம் குலமாவு பகுதியில் உள்ள ஒரு ரிசாட்டிற்கு சுற்றுலா செல்கின்றனர்.

    யார் அந்த 12thMan

    யார் அந்த 12thMan

    6 பெண்கள், 5 ஆண்கள் என் மொத்தம் 11 பேர் செல்கின்றனர். ரிசார்டில் இவர்கள் 11 பேர் மட்டும் தங்குகிறார்கள். அங்கு குடிக்காரராக காட்டப்படும் மோகன்லால், ரிசார்ட் எம்.டி.,யில் நண்பராக தங்கி இருக்கிறார். ஜாலியாக பொழுதை கழிக்கும் நண்பர்களுக்கு அவ்வப்போது வந்து இடைஞ்சல் தருகிறார் மோகன்லால். 12th Man ஆக தானும் பார்டியில் கலந்து கொள்ளவா என கேட்கும் மோகன்லாலை துரத்தி விடுகிறார்கள். பிறகு நண்பர்கள் 11 பேரும் ஜாலியாக போனை வைத்து ஒரு விளையாட்டு விளையாடுகிறார்கள்.

    போலீஸ் அதிகாரியாக மோகன்லால்

    போலீஸ் அதிகாரியாக மோகன்லால்

    ஒரு மணி நேரத்திற்கு யாருடைய போனிற்கு கால் அல்லது மெசேஜ் வந்தாலும் அதை அனைவருக்கும் தெரியும் படி பேசவும், படிக்கவும் வேண்டும் என்று. இந்த விளையாட்டில் வரும் போன் கால் ஒன்றால் அவர்களுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. பிறகு மழையும் வருவதால் அனைவரும் அவரவர் அறைக்கு சென்று விட, திடீரென ரிசார்ட் வியூ பாயின்ட் பாறையில், சுற்றுலா வந்த பெண்களில் Shiney கேரக்டரில் வரும் அனுஸ்ரீ மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். போலீசார் வந்து விசாரிக்கும் போது தான் மோகன்லாலும் ஒரு போலீஸ் அதிகாரி என தெரிய வருகிறது.

    செம த்ரில்லிங் கதை

    செம த்ரில்லிங் கதை

    நண்பர் 10 பேரையும் தனியாக அழைத்து விசாரிக்கும் போது பல உண்மைகள் வெளியே வருகிறது. இவர்களில் யார் கொலையாளி, அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா, அவர் மரணத்திற்கு முன் என்னவெல்லாம் நடந்தது யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பதை போலீஸ் அதிகாரியான மோகன்லால் எப்படி கண்டுபிடித்து, உண்மையை வெளியே கொண்டு வருகிறார் என்பது தான் 12th Man படத்தின் மீதி கதை.

    மிரள வைத்த ஜீத்து ஜோசப்

    மிரள வைத்த ஜீத்து ஜோசப்

    படத்தின் முதல் 20 நிமிடங்கள் மட்டுமே வழக்கமான கதையாக உள்ளது. பிறகு நடக்கும் அத்தனையும் த்ரில்லிங் தான். ஒரு பெரிய டைனிங் டேபிளில் 10 பேரையும் உட்கார வைத்து மோகன்லால் விசாரணை நடத்தும் போது, அடுத்தடுத்த ஷாட்களில் இவர் தான் கொலையாளியா, இவரா என அனைவரையும் சந்தேகப்பட வைத்திருக்கிறார் ஜீத்து ஜோசப். முதல் ஷாட்டில் இவர் தான் கொலையாளியா என்றும், அடுத்த ஷாட்டில் அப்போ இவர் இல்லையா என அனைவரையும் சஸ்பென்சின் உச்சிற்கே கொண்டு சென்றுள்ளார். மிக அற்புதமாக திரைக்கதையை அமைத்துள்ளார் கே.ஆர்.கிருஷ்ண குமார். நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு முழுமையான த்ரில்லிங் படத்தை பார்த்த அனுபவம் ஏற்படுகிறது.

    த்ரிஷ்யம் கதையையே மிஞ்சிடுச்சே

    த்ரிஷ்யம் கதையையே மிஞ்சிடுச்சே

    அடுத்து என்ன நடக்கும் என கடைசி வரை சுவாரஸ்யம் குறையாமல் கதையை கொண்டு சென்றுள்ளனர். ஆடியன்சை சீட் நுனியில் அமர வைத்து, பார்வையை அங்கும் இங்கும் விலக்க முடியாதபடி, அனைவரையும் கதைக்கும் இழுத்து சென்றதற்கே டைரக்டர் ஜீத்து ஜோசப்பிற்கு ஒரு சபாஷ் போடலாம். த்ரிஷ்யம் படத்தையே மிஞ்சும் அளவிற்கு, கொலையாளி யார் என்பதை கடைசி வரை யூகிக்க முடியாத படி, கொஞ்சுமும் சஸ்பென்ஸ் குறையாமல் படத்தை இயக்கி உள்ளார்.

    மீண்டும் வெற்றி பெற்ற கூட்டணி

    மீண்டும் வெற்றி பெற்ற கூட்டணி

    ஜீத்து ஜோசப் - ஆன்டனி பெரும்பாவூர் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. அனில் ஜான்சனின் இசை படத்திற்கு மற்றொரு ப்ளஸ் பாடல்கள் ஆங்கிலத்தில் அமைக்கப்பட்டிருந்தாலும் காதிற்கு இரைத்தல் தராத வகையில் உள்ளது. படத்தில் நடித்த ஒவ்வொருவரும் தங்களின் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். ஆரம்பத்தில் தீபாளி கொண்டாட்டம் துவங்கி, க்ளைமாக்ஸ் வரை வாவ் சொல்ல வைத்துள்ளது சதீஷ் குரூப்பின் ஒளிப்பதிவு.

    12thMan ரேட்டிங் என்ன

    கேரக்டர்கள் தேர்வு, பின்னணி இசை, டைரக்ஷன், கதை - திரைக்கதை என எதிலும் குறை வைக்காமல் மிக கச்சிதமாக ஒரு படத்தை தந்துள்ளார் ஜீத்து ஜோசப். லால் ஏட்டன் வழக்கம் போல் அலட்டிக் கொள்ளாமல் நடிப்பில் பட்டையை கிளப்பி உள்ளார். மோகன்லால் என்பதையே மறந்து, ஆடியன்ஸ் மனதில் போலீஸ் அதிகாரி சந்திரசேகராகவே தடம் பதித்துள்ளார். ரசிகர்கள் இந்த படத்திற்கு 5 க்கு 4 என ரேட்டிங் கொடுத்துள்ளனர்.

    English summary
    Mohanlal starred 12th Man movie released May 20th in disney plus hotstar. Mystery thriller film directed by Jethu joseph and produced by Antony Perumbavoor. Perfect screeplay, excellent direction, Lalettan as usual is terrific. 12th Man got 4 out off 5 rating.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X