நேபாளி- பட விமர்சனம்

By Staff

Meera and Bharath
பரத், வி.இசட்.துரை இணைந்து கொடுத்திருக்கும் வித்தியாசமான முயற்சி நேபாளி. ஆனால் பரத்தின் கடின உழைப்பையும், வித்தியாசமான முயற்சியையும் வீணடிக்கும் வகையிலான திரைக்கதையால் நேபாளி - நோயாளி ரேஞ்சுக்கு போயிருக்கிறது.

மன்மதன், கஜினி என சில படங்களின் கதைகளை நினைவுபடுத்துவது போன்ற தோற்றம் ஏற்படுவதை படம் பார்க்கும்போது தவிர்க்க முடியவில்லை. அறுதப் பழசான பழிவாங்கும் கதைதான். ஆனால் சற்று வித்தியாசமாக கொடுக்க முயன்றிருக்கிறார் துரை.

கார்த்திக் (பரத்) ஒரு சாப்ட்வேர் என்ஜீனியர். ஊட்டியில் பிரியாவை (மீரா ஜாஸ்மின்) சந்திக்கிறார். வழக்கம் போல கண்டதும் காதல். குடும்பம் எதிர்க்கிறது. வீட்டை விட்டு வெளியேறி கல்யாணம் செய்து கொள்கிறார்கள்.

ஆனால் போலீஸ் அதிகாரி ராஜா ரவீந்தர், பிரியாவை கற்பழிக்க முயலுகிறார். அந்த முயற்சியில் பிரியா கொல்லப்படுகிறார்.

வெகுண்டெழும் கார்த்திக், போலீஸ் அதிகாரியைக் கொன்று தீர்க்கிறார். சிறைக்குச் செல்கிறார்.

6 வருட சிறைவாசம். முடிந்து வெளியே வரும் கார்த்திக், சீரியல் கில்லராக மாறுகிறார். அலுவலகங்களில் பெண்களை டார்ச்சர் செய்பவர்களைக் குறி வைத்துக் கொல்கிறார். கொன்று முடித்த பின்னர் மரணம் எப்படி நிகழ்ந்தது என்பதை விளக்கி குறிப்பும் வைத்து விட்டுப் போகிறார்.

சீரியல் கொலைகாரனைப் பிடிக்கும் பொறுப்பு போலீஸ் அதிகாரியான கெளதமிடம் (பிரேம்) கொடுக்கப்படுகிறது. கொலைகாரனைப் பிடிக்க கடுமையாக முயலுகிறார் கெளதம். அவர் பிடித்தாரா, பரத்தின் வெறி அடங்கியது, கடைசியல் என்ன ஆகிறார் பரத் என்பதுதான் படத்தின் மீதக் கதை.

மூன்று விதமான கெட்டப்களில் கலக்கியுள்ளார் பரத். கொடுத்த வேடத்தை சிறப்பாக செயதிருக்கிறார். இருப்பினும் சில இடங்களில் அவரது நடிப்பில் ஆழம் இல்லாததால் கவரத் தவறி விட்டார். படத்திற்கு முக்கிய வில்லனே திரைக்கததைதான். படு வீக் ஆன கதையால், படத்தின் வேகம் விறுவிறுப்பாக இல்லை.

பரத்துக்கு வேடப் பொருத்தங்கள் நன்றாகவே உள்ளது. ஆனால் நேபாளி வேடம்தான் படு செயற்கையாகத் தோன்றுகிறது. எனக்குள் ஒருவன் கமலை மாடலாக வைத்து மேக்கப் போட்டுள்ளனர் போல, ஆனால் பரத்துக்குத்தான் அது ஒட்டவில்லை.

மீராவும், பரத்தும் இடம் பெறும் காதல் காட்சிகள் படு ஹாட். ஆனால் சில இடங்களில் பரத்துக்கு அக்கா போல தென்படுகிறார் மீரா.

பிரேம், கோவிந்த் நாம்தேவின் நடிப்பு நிறைவாக உள்ளது.

ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசையில் சத்தம் ஜாஸ்தி (சவுண்டை குறைங்க வாத்தியாரே!) பின்னணி இசை, பல இடங்களில் 7ஜி ரெயின்போ காலனியை ஞாபகப்படுத்துகிறது.

கேமராமேன் மதி, கவிதை பாடியுள்ளார். கதையின் மூடுக்கேற்றார் போல அவரது கேமராவும் கூடவே போயிருக்கிறது.

படத்தில் உள்ல பாசிட்டிவான விஷயங்களில் ஒன்று கிளைமாக்ஸ். வித்தியாசமாக இருக்கிறது, நன்றாகவும் இருக்கிறது.

சரியில்லாத கதையுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள வித்தியாசமான முயற்சி நேபாளி.

பரத்தின் வித்தியாசமான நடிப்புக்காக பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X