twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சித்து ப்ளஸ் டூ - விமர்சனம்

    By Chakra
    |

    Shanthanu, Chandini  and Rati Agnihotri
    Rating
    நடிகர்கள்: சாந்தனு, சாந்தினி, கஞ்சா கருப்பு, சீதா

    ஒளிப்பதிவு: ராசாமதி

    இசை: தரன்

    இயக்கம்: கே பாக்யராஜ்

    தயாரிப்பு: கேபிஆர் மீடியா, மோசர் பேர்

    பிஆர்ஓ: நிகில்

    5 ஆண்டுகளுக்குப் பின் வரும் பாக்யராஜ் படம்... பெரிய எதிர்ப்பார்ப்புகளுடன் பார்க்க வரும் ரசிகர்களை திருப்திப் படுத்துகிறதா?

    பார்க்கலாம்.

    ப்ளஸ் டூ தேர்வில் தோற்றுப் போய், பெற்றோருக்குப் பயந்து வீட்டைவிட்டு ஓடும் சாந்தனுவும் சாந்தினியும் சென்னை சென்ட்ரலில் எதேச்சையாய் சந்திக்கிறார்கள். தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் வரும் சாந்தனுவின் மனதை சாந்தினியின் காதல் மாற்றுகிறது.

    இருவரும் நல்ல ஜோடியாகி, புதுவசந்தம் ஸ்டைலில் வீடு எடுத்து தங்குகிறார்கள். சாந்தனு நடைபாதைக் கடையில் பிளேட் கழுவி முன்னேறப் பார்க்கிறார். ஹீரோயின் தன் படிப்பைத் தொடர முயற்சிக்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில் போலீஸ்காரர் ஒருவரால் சாந்தனு துரத்தப்படுகிறார். திரும்பி வந்து பார்த்தால் சாந்தினியைக் காணவில்லை. ஊருக்குப் போய்விட்டதாய் அறிகிறார்.

    காதலியைத் தேடி அவளது ஊருக்குப் போகிறார். அங்கே சாந்தினி வீட்டுக்கு எதில் கஞ்சா கருப்புவின் சலூனில் டெண்ட் போடுகிறார். காதலி ஏறிட்டும் பார்க்க மறுக்கிறாள். காதலியின் தந்தை மகா முரடன், தாய் மாமனே சரியான செமி கிராக் முரடன். இவர்களைத் தாண்டி சாந்தினியை எப்படி தன் பக்கம் திருப்புகிறார் சாந்தனு... காதலில் ஜெயித்து ஒன்று சேருகிறார் என்பது மீதி க்ளைமாக்ஸ்.

    2 மணி நேரம் 45 நிமிடம் நீளும் இந்தக் கதையின் திரைக்கதை... நிஜமாக பாக்யராஜ் எழுதியதுதானா என்பது சந்தேகமாகவே உள்ளது. அத்தனை அலுத்துப்போன சமாச்சாரங்கள் படம் முழுக்க. பல காட்சிகளில் அதன் தொடர்ச்சி என்னவாக இருக்கும் என்று நமக்கே நன்றாகத் தெரிகிறது.

    பாரிஜாதம் வரை நல்லாத்தானே போய்க்கிட்டிருந்தது... பாக்யராஜிடம் ஏன் இந்த தடுமாற்றம்? மகனை மாஸ் ஹீரோவாகக் காட்டும் ஆர்வத்தில், தன் பாணியையே முற்றாக இழந்துவிட்டாரே இந்தப் படத்தில்.

    ஒன்று, இனி பாக்யராஜ் தன் ஸ்டைலில் படமெடுக்க வேண்டும்... அல்லது இன்றைய ட்ரெண்டுக்கு ஏற்ற மாதிரியாவது மாறிக் கொள்ள வேண்டும்.

    ஹீரோ சாந்தனுவின் நடிப்பில், காமெடியில், சண்டையில், ரொமான்சில் செயற்கை இழையோடுகிறது. அப்பாவின் பாணியை கிண்டலடிப்பதெல்லாம் இருக்கட்டும்... உங்களுக்கென்று என்ன பாணி இருக்கிறது...?

    ஹீரோயின் பரவாயில்லை... வாயைத் திறக்கும் வரை. வசனம் பேச ஆரம்பித்தாலோ... கஷ்ஷ்ஷ்ட்டம்! அதைவிட அந்த மார்வாடி பார்ட்டி ஓகே.

    பாக்யராஜும், செந்திலும் தோன்றும் அந்த ஒரு காட்சியில் மட்டும் பாக்யராஜின் பழைய டச் தெரிகிறது.

    ராசாமதியின் கேமரா பரவாயில்லை.

    சித்து ப்ளஸ் டூ... பெட்டர் லக் இன் நெக்ஸ் அட்டம்ட்!

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X