twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒரு ட்வீட்டில் அடங்கும் கதை.. சொன்ன விதத்தில், டீட்டெய்லில், மேக்கிங்கில் ரசனையாக மிரட்டுகிறது 1917

    By
    |

    Rating:
    4.0/5
    Star Cast: ஜார்ஜ் மேக்கே, லான்ஸ் கார்போரல்
    Director: சாம் மென்டஸ்

    நடிகர்கள்: ஜார்ஜ் மேக்கே, லான்ஸ் கார்போரல்

    இயக்கம்: சாம் மென்டஸ்

    சென்னை: போர் பற்றிய படங்கள் என்றாலே, ஹாலிவுட்காரர்களுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி அவ்வளவு ஆனந்தம். எத்தனை படம் எடுத்தாலும் அத்தனையிலும் மிரட்டுகிறார்கள்.

    கடந்த சில வருடங்களுக்கு முன் வந்த டன்கிர்க், டார்க்கஸ்ட் ஹவர், த கிங், எ ஹிடன் லைப் உட்பட எந்த போர் படமும் சலிப்பை தந்ததில்லை. வியப்பையே தந்திருக்கின்றன. அந்த வரிசையில் அசத்தலாக அடுத்து வந்து அமர்ந்திருக்கிறது சாம் மெண்டஸின் 1917.

    1917 dazzles with its craft while underlining the human dimension of war

    இரண்டாம் உலகப் போர் நேரத்தில், தகவல்களை கொண்டு சேர்க்கும் பணியில் இருந்த தனது தாத்தா சொன்ன கதையில் இருந்து, இந்தப் படத்தை எடுத்திருக்கிறாராம் மெண்டஸ்.

    1917 ஆம் ஆண்டில் பிரான்சின் ஒரு பகுதியில் முகாமிட்டிருந்த ஜெர்மன் படைகள், திடீரென பின் வாங்குகின்றன. அங்கு முகாமிட்டிருக்கும் பிரிட்டீஷ் ராணுவம், தனக்கான வெற்றி என நினைத்து முன்னேற முயற்சிக்கிறது. ஆனால், இது அவர்களின் தந்திரம் என்பது மற்றொரு பகுதியில் இருக்கும் பிரிட்டீஸ் ஜெனரலுக்கு தெரிய வர, இந்த தகவலை அங்கு கொண்டு சேர்க்க வேண்டும். முன்னேற வேண்டாம் என்பதை பிரிட்டீஸ் ராணுவ தளபதி மெக்கன்ஸியிடம் சொல்ல வேண்டும். இந்த தகவல் சேரவில்லை என்றால் 1600 வீரர்கள் பரிதாபமாக உயிரிழப்பார்கள். இதற்காக, டாம் பிளேக், வில் ஸ்காஃபீல்ட் என்ற இரண்டு வீரர்களை அனுப்புகிறார், ராணுவ ஜெனரல்.

    டாம் பிளேக் செல்ல காரணம், அந்த 1600 பேரில் அவரது அண்ணன் லெப்டினன்ட் ஜோசப் பிளேக்கும் ஒருவர்.

    இருப்பதோ குறைவான கால அளவு. அதற்குள் அந்த முனைக்குச் செல்ல வேண்டும். இடையில் விமானங்கள் பறக்கிறது. துப்பாக்கிக் குண்டுகள் பாய்கின்றன. இந்த சவால்களைத் தாண்டி, தகவலை கொண்டு சேர்த்தார்களா, இல்லையா என்பதுதான் கதை.

    1917 dazzles with its craft while underlining the human dimension of war

    ஒரு ட்வீட் போடும் அளவுக்கான கதைதான். சொன்ன விதத்தில், டீட்டெய்லில், காட்சிப்படுத்தலில், மேக்கிங்கில் என ஒவ்வொன்றிலும் ரசனையாக மிரட்டியிருக்கிறார்கள்.

    படத்தின் ஆரம்பத்திலேயே, பேசியபடி செல்லும் டாம் பிளேக், வில் ஸ்காஃபீல்ட் ஆகியோரின் பின்னால் விரட்டிக்கொண்டு செல்கிறது ஒளிப்பதிவாளர் ரோஜர் டீக்கின்ஸின் கேமரா. அப்போது தொடங்கும் விரட்டல், எல்லாவற்றையும் ஒரே ஷாட்டில் எடுத்திருப்பார்களோ என்கிற பிரமையை அனாயசமாகத் தருகிறது.

    தேவையான இடத்தில் ஓங்கி, சில இடங்களில் அடங்கி, கதையோடு நம்மை அழகாக அழைத்துச் செல்கிறது தாமஸ் நியூமேனின் இசை.

    முள்வேலிக்குள் முதுகை நுழைத்து, குண்டும் குழியுமான குட்டைகளில் விழுந்து புரண்டு, சிதைந்தும் புதைந்தும் மிதந்தபடியும் கிடக்கும் சிப்பாய்களின் உடல்களின் மீதேறி அவர்கள் நடக்கும்போதே போர் பயங்கரம் நம் கண்களுக்குள் விரிகிறது. எதிரி படையை சேர்ந்தவர் விமான விபத்தில் உயிருக்குப் போராட, காப்பாற்றும் வீரரையே கொல்லும் ஜெர்மன் வீரனின் பகை, சிதிலமடைந்து கிடக்கும் கட்டிட இடிபாடுகளுக்குள்ளும் உயிரோடிருக்கும் ஒன்றிரண்டு வீர்ர்கள், வெறிகொண்டு நடத்தும் துப்பாக்கிச்சூடு, காட்டாற்றில் மிதக்கும் பிணக்குவியல்கள் என மொத்த படமும் மிரட்டுகிறது.

    இடிந்த தேவாலயத்துக்குள், பெற்றோர் யார் என தெரியாத கைக்குழந்தையை சுமந்தபடி பயத்தில் நடுங்கும் பெண், போகாதே என வீரனைத் தடுக்கும் காட்சி, சொன்னதை விட சொல்லாதது இன்னும் பயங்கரம்.

    1917 dazzles with its craft while underlining the human dimension of war

    இளம் ராணுவ வீரர்களாக வரும் ஜார்ஜ் மேக்கே, டீன் சார்லஸ் சாப்மேன் இருவரும் யதார்த்தமாக நடித்துள்ளனர். படத்தின் தொடக்கத்தில் இருந்து கொஞ்சம் கூட கவனத்தைத் திசைத் திருப்ப விடாமல் நம்மை கட்டிப்போட்டிருக்கிறது படக்குழுவின் உழைப்பு. அதுதான் இந்த படத்தின் வெற்றியும்.

    ஆஸ்கர் விருதுக்கு 10 பரிந்துரைகளுடன் முதலிடத்தில் இருக்கிறது இந்தப் படம். கண்டிப்பாக சில விருதுகளை வெல்லும் என்பது ரசிகர்களின் கணிப்பு.

    English summary
    Sam Mendes film 1917 is dazzles with its craft while underlining the human dimension of war
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X