twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    2.0 படம் எப்படி இருக்கு?, நிஜமாகவே மைண்ட் புளோயிங்கா?: விமர்சனம் #2point0Review

    By Siva
    |

    Recommended Video

    ரஜினி 2.0 விமர்சனம்- வீடியோ

    சென்னை: 2.0 படத்தில் ஒரு சில மைனஸ் இருந்தாலும் ரசிகர்களை திருப்தியடைய வைத்துள்ளது.

    ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் உள்ளிட்டோர் நடிப்பால் மிரட்டியுள்ள 2.0 படம் இன்று ரிலீஸாகியுள்ளது. 2.0 படம் ஓடும் தியேட்டர்களில் எல்லாம் விசில் சத்தம் காதை கிழிக்கிறது.

    ரசிகர்களுக்கு படம் மிகவும் பிடித்துள்ளது. இந்நிலையில் படம் குறித்த விபரங்களை பார்ப்போம்.

    அக்ஷய் குமார்

    அக்ஷய் குமார்

    படம் துவங்கியதில் இருந்தே பிரமாண்டமாக உள்ளது. கிரெடிட் கூட 3டியில் பார்க்கும் போது அழகாக இருந்தது. எடுத்த எடுப்பில் அக்ஷய் குமார் வந்து மிரட்டுகிறார். நகரத்தில் உள்ள அனைத்து செல்போன்களும் பறக்கின்றன. சிட்டியை வரவழைக்க வேண்டும் என்று வசீகரன் முடிவு செய்ய அதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இப்படி போகிறது கதை.

    வில்லன்

    வில்லன்

    முதல் பாதியை அக்ஷய் குமார் தாங்கிச் செல்கிறார். இந்த படத்தின் வில்லனும் சரி, ஹீரோவும் சரி அது அக்ஷய் தான் என்று ரஜினி கூறியதன் அர்த்தம் புரிகிறது. பறவை மனிதரான அக்ஷய் செய்யும் அட்டகாசங்களை பார்த்துவிட்டு படத்தில் உள்ளவர்கள் மட்டும் அல்ல தியேட்டரில் உள்ளவர்களும் சிட்டியை கூப்பிடுங்கப்பா, இவன் தொல்லை தாங்க முடியல. இவனை அடக்க சிட்டி தான் சரியான ஆள் என்று கூறவதை கேட்க முடிகிறது.

    மாஸ்

    மாஸ்

    சிட்டியின் என்ட்ரி அசத்தலாக உள்ளது. சிட்டிக்கும், பறவை மனிதருக்கும் இடையே நடக்கும் மோதல் தான் முதல் பாதியின் அருமையான காட்சி. முதல் பாதியில் வி.எஃப்.எக்ஸ். பிரமிக்க வைத்தாலும் கதை வேகம் பிடிக்கவில்லை. சிட்டி வந்த பிறகே கதையும், தியேட்டரும் களைகட்டியது. டாக்டர் வசீகரனின் கதாபாத்திரம் பெரிய அளவில் மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை. ஏமி ரோபோவாக நடிக்கச் சொன்னால் அப்படியே மாறிவிட்டார்.

    திருப்தி

    திருப்தி

    இரண்டாம் பாதி விறுவிறுப்பாக உள்ளது. அதிலும் குறிப்பாக கடைசி அரை மணிநேரம் ரசிகர்களை அந்த பக்கம் இந்த பக்கம் திரும்பவிடாமல் திரையையே பார்க்க வைத்துள்ளனர். கிராபிக்ஸ் பெரும்பாலான இடங்களில் யோசித்து கூட பார்க்க முடியாத அளவுக்கு இருந்தாலும் ஒரு சில இடத்தில் கை விட்டு விடுகிறது. மொத்தத்தில் 2.0 பிரமாண்டம், புது அனுபவம்.

    English summary
    Rajinikanth starrer 2.0 has given a new experience to cinema lovers inspite of few minuses. But Shankar has managed to emerge as victor again.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X