twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரிப்பீட் மோடில் ராஜாளி நீ காலி..., இந்திர லோகத்து சுந்தரியே..! #Epic2PointOAudioLaunch

    By Shankar
    |

    Rating:
    3.5/5

    இசை: ஏஆர் ரஹ்மான்
    பாடல்கள்: மதன் கார்க்கி

    பொதுவாக ரஹ்மான் இசை மற்றும் பாடல்களை ஸ்லோ பாய்ஸன் என்பார்கள். மெதுவாகத்தான் ஆரம்பிக்கும்... அப்புறம் வெறி ஏற்றிவிடும் அவரது பாடல்கள்.

    எந்திரன் படத்தின் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இதே அக்டோபர் மாதத்தில் வெளியானபோது 'கிளிமாஞ்சரோ...' மட்டும்தான் நல்லா இருக்கு என்றார்கள். ஆனால் அந்தப் படத்தில் டாப் பாடலாக மாறியது 'இரும்பிலே ஒரு இருதயமிருக்குதோ...' பாடல்.

    ஷங்கர் பட பாணி

    ஷங்கர் பட பாணி

    நேற்று 2.ஓ படத்தின் பாடல்கள் துபாயில் வெளியாகின. அதற்கு முன்பே இணையத்தில் கசிந்து சமூக வலைத் தளங்களில் பகிரப்பட்டது. ஷங்கர் படங்களில் வழக்கமாக நடக்கும் சமாச்சாரம் இது என்பதால் பெரிதாக பரபரப்பு கிளம்பவில்லை.

    முதலில் சுமார்தான்

    முதலில் சுமார்தான்

    சரி, ரஹ்மானின் இசையில் பாடல்கள் எப்படி உள்ளன? ஆரம்பத்தில் கேட்டபோது சுமாராகத்தான் இருந்தன ராஜாளி நீ காலி மற்றும் இந்திர லோகத்து சுந்தரி பாடல்கள். இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி ட்யூன்தான். பின்னணி இசையும் தாளக்கட்டும் மட்டும்தான் இரண்டையும் வேறுபடுத்திக் காட்டுகின்றன.

    கிறுக்குப் பிடிக்க வைக்கின்றன

    கிறுக்குப் பிடிக்க வைக்கின்றன

    ஆனால் இரண்டு பாடல்களையும் இரண்டு மூன்று முறை கேட்டபிறகுதான் மெல்ல கிறுக்குப் பிடிக்க ஆரம்பிக்கிறது. அடுத்த முறை கேட்கும்போது இரு பாடல்களும் மொத்தமாகப் பிடித்துப் போகின்றன.

    வில்லத்தனம்

    வில்லத்தனம்

    இரண்டு பாடல்களையும் எழுதியிருப்பவர் மதன் கார்க்கி. ராஜாளி நீ காலியில் வில்லத்தனம் தெரிகிறது.

    இந்திரலோகத்து சுந்தரி

    இந்திரலோகத்து சுந்தரி

    இந்திரலோகத்து சுந்தரியில் இரு ரோபோக்களின் காதல் இது என்பதைக் குறிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார். குறிப்பாக இந்தப் பாடலைப் பாடிய சித் ஸ்ரீராம், சாஷா திருப்பதி செம ஸ்டைலிஷாகப் பாடியிருக்கிறார்கள்.

    ராஜாளி நீ காலி...

    ராஜாளி நீ காலி...

    ராஜாளி பாடலைக் கேட்கும்போதே மனதில் அந்த அரிமா அரிமா...(எந்திரன்) பாடலின் பிரமாண்ட விஷுவல்கள் கண்முன் விரிகின்றன. இரண்டு பாடல்களையும் இன்றைய தலைமுறையின் இசை ரசனையை மையமாக வைத்து உருவாக்கி இருக்கிறார் ரஹ்மான். இசை, ஒலியில் அத்தனை வித்தியாசம்.

    ரஹ்மான் மகன்

    ரஹ்மான் மகன்

    படத்தில் மூன்றாவது பாடல் ஒன்றும் உண்டு. அதை பின்னர் வெளியிடுவதாகக் கூறினாலும், நேற்றைய இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் ரஹ்மானின் மகனை வைத்துப் பாடவைத்தார்கள். இந்த இரு பாடல்களைவிட அது இன்னும் வித்தியாசமாக இருந்தது. பாடலை எழுதியவர் நா முத்துக்குமார்.

    ஏழு ஆண்டுகளுக்கு முன்பே எந்திரன் பாடல்களை அப்படி எடுத்திருப்பார் ஷங்கர். இப்போது கேட்க வேண்டுமா... வெயிட்டிங் ஈகர்லி!

    English summary
    Rajinikanth's AR Rahman Musical 2.O's audio review
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X