சீடன் - பட விமர்சனம்

By Shankar

நடிப்பு: கிருஷ்ணா, தனுஷ், அனன்யா, ஷீலா
இசை: தினா
இயக்கம்: சுப்பிரமணியம் சிவா
தயாரிப்பு: அமித் மோகன்

எப்போதோ வந்திருக்க வேண்டிய ஒரு கதை, மிகக் காலம் கடந்து இப்போது வந்திருக்கிறது. பத்தாண்டுகளுக்கு முன் மலையாளத்தில் வெளியான நந்தனம் படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்த சீடன். கதையை மட்டும் மலையாளத்திலிருந்து எடுத்துக் கொண்டு, தமிழ்நாட்டு சூழலுக்கேற்ப திரைக்கதை அமைத்திருந்தால் ஒரு வேளை பார்க்கும்படி இருந்திருக்குமோ என்னவோ....

பழனியில் பெரிய அரண்மனை வீட்டில் ஒரேயொரு பாட்டி. அவருக்கு வேலைக்காரியாக இருக்கிறார் அனன்யா. பக்கா முருக பக்தை. ஆனால் பழனி முருகனைக் கூட பார்க்க முடியாத அளவுக்கு வீட்டில் வேலை அவரை அழுத்துகிறது.

அப்போது அந்த வீட்டுக்கு வருகிறான், பாட்டியின் பேரன் கிருஷ்ணா. வழக்கம்போல வேலைக்காரிக்கும் பேரனுக்கும் காதல். இந்தக் காதல் தெரிந்ததும், கிருஷ்ணாவின் அம்மா அவனை தன் தோழியின் மகளுக்கு கட்டி வைக்க திட்டம் போடுகிறார்.

அனன்யாவின் வாழ்க்கை சோகமாக, 'முருகா காப்பாத்து' என அவர் உருகுகிறார். சரியாக அந்த நேரத்தில் வீட்டுக்குள் நுழைகிறார் சமையல்காரர் சரவணன் ( தனுஷ்). அதன் பிறகு எல்லாமே மாறுகிறது. இதில் அனன்யா - கிருஷ்ணா காதல் என்னாகிறது... தனுஷால் அந்தக் காதல் கைகூடுகிறதா என்பது மீதிக் கதை.

படம் முழுக்க மலையாள வாடை. வசனங்களில் கூட அப்படியே. காட்சிகள் ஒவ்வொன்றும் சவசவவென வந்து போகின்றன. "அடுத்த காட்சி இதுதான்... இந்த இடத்தில் காதலைச் சொல்லப் போகிறார்கள். இதோ இப்போது காதல் பிரியப் போகிறது... அடுத்த சீனில் தனுஷ் வருவார் பார்..." என மகா சுலபத்தில் ஊகிக்க முடிகிற திரைக்கதை, பொறுமையைச் சோதிக்கிறது. இத்தனைக்கும் இரண்டு மணி நேரமே ஓடும் படம் இது!

வசனங்களாவது கொஞ்சம் ஷார்ப்பாக உள்ளதா என்றால், ம்ஹூம்... மெகா சீரியல் தோற்றது போங்கள்!

எதற்காக தனுஷுக்கு இத்தனை மகா ஆர்ப்பாட்டமான விளம்பரம் என்று தெரியவில்லை. அவர் வருவது கொஞ்ச நேரம்தான். அதிலும் சமையல் பற்றி படு சுமாரான ஒரு பாட்டைப் பாடிவிட்டு, எப்போது சீனிலிருந்து போனார் என்பதே தெரியாமல் போகிறார்.

ஹீரோவாக கிருஷ்ணா என்பவர் நடித்திருக்கிறார். இப்படி ஒரு பாத்திரத்தில் வந்து போகிறார் என்பதைத் தவிர பெரிதாக சொல்ல ஏதுமில்லை.

அனன்யா பரவாயில்லை... முகமும் நடிப்பும் பார்க்கும்படி உள்ளது. விவேக்கின் போலிச்சாமியார் கெட்டப்பும், தினாவின் இசையும் சகிக்கலை!

சுகாசினி, ஷீலா, இன்னொரு பாட்டி என படம் முழுக்க 'கிழவிகள்' மயம். கடுப்பாக உள்ளது. இன்னொன்று, அவ்வப்போது வரும் குட்நைட் காயில் விளம்பரங்கள். விளம்பரப் படத்துக்கு நடுநடுவே படத்தை ஓட்டுகிறார்களோ என்ற பிரமையைத் தவிர்க்க முடியவில்லை. என்னதான் தயாரிப்பாளர் குட்நைட் கம்பெனி உரிமையாளர் என்றாலும் இத்தனை.. இத்தனை விளம்பரம் ஆகாது!

திருடா திருடி என்ற ஒரேயொரு 'விசிட்டிங் கார்டு' திரையுலக வாழ்க்கை முழுவதற்கும் கூட வராது என்பதை இயக்குநர் சுப்பிரமணிய சிவா புரிந்துகொண்டால் சரி!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X