For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  தூண்டில்- பட விமர்சனம்

  By Staff
  |

  Sandhya with Shaam
  நீண்ட இடைவெளிக்குப் பிறகு கோலிவுட்டுக்குத் திரும்பியுள்ள கே.எஸ்.அதியமான், மீண்டும் ஒரு சென்டிமென்ட் கதையுடன் களம் இறங்கியுள்ளார். ஆனால் திரைக்கதை என்ற ஏணி சரியாக இல்லாததால் சறுக்கியிருக்கிறார்.

  அழகிய லண்டன் நகரப் பின்னணியில் கதை நகருகிறது. அழகான மனைவிக்கும், முன்னாள் காதலிக்கும் இடையே சிக்கி தவிக்கும் நாயகனாக ஷாம். அழகிய மனைவியாக சந்தியா, முன்னாள் காதலியாக குத்து ரம்யா.

  லண்டன் நகரின் இளம் மாடல் அழகிகளில் ஒருவர்தான் குத்து ரம்யா. எதேச்சயாக சாப்ட்வேர் என்ஜீனியரான ஷாமை சந்திக்கிறார். காதல் கொள்கிறார். உலகின் நம்பர் ஒன் மாடலாக வர வேண்டும் என்பதே குத்து ரம்யாவின் லட்சியம்.

  அந்த லட்சியம் நிறைவேறும் வாய்ப்பும் வருகிறது. ஆனால் அதற்கு ரம்யாவின் காதல் தடையாக உருவெடுக்கிறது. காதலைக் கைவிட்டால்தான் நீ விரும்புவது போல உலகின் நம்பர் ஒன் மாடல் அழகியாக முடியும் என்று நிபந்தனை போடுகிறது ஒரு நிறுவனம்.

  காதலா, புகழா என்ற கேள்வி வரும்போது காதல் பக்கம் சாய்கிறார் ரம்யா. ஆனால் ரம்யா உலகப் புகழ் பெற வேண்டும் என்று கூறும் ஷாம், காதலைக் கை கழுவுகிறார் - காதலியின் நலனுக்காக.

  ஆனால் இதை பெரும் துரோகமாக கருதும் ரம்யா, ஷாமை பழி தீர்க்க முடிவெடுக்கிறார். வாழ்க்கையில் சந்தோஷமே இல்லாமல் ஷாம் துன்புற வேண்டும் என வெறி கொள்கிறார்.

  ஷாமையும், அவரது மனைவி சந்தியாவையும் பிரிக்க, நிம்மதியில்லாமல் தவிக்க விட திட்டமிடுகிறார். சந்தியாவுக்கு கர்ப்பம் தரிப்பதில் பிரச்சினை இருப்பதை அறிந்து அவருக்கு உதவுவது போல, தனது கரு முட்டைகளை சந்தியாவுக்கு தானமாக தருகிறார்.

  சந்தியாவுக்குப் பெண் குழந்தை பிறக்கிறது. ஆனால் குழந்தை பிறந்ததும் அதை கடத்திச் செல்கிறார் ரம்யா. அதன் பிறகு என்ன நடக்கிறது, குழந்தை என்னவாகிறது, ரம்யாவின் வெறி தணிகிறதா, ஷாம், சந்தியா வாழ்க்கையில் நிம்மதி மலருகிறதா என்பது மீதிக் கதை.

  காட்சிகளில் பல இடங்களில் படு சொதப்பலாக இருக்கிறது. வசனங்கள் முதிர்ச்சியில்லாமல் இருக்கின்றன. கற்பனைக்கு எட்ட முடியாத அளவுக்கு காட்சி அமைப்புகள் இருப்பதால் எரிச்சல் ஏற்படுகிறது.

  படத்தைக் கொடுத்துள்ள பாணியும் நாடகத்தனமாக இருக்கிறது. குழந்தைத்தனமாக வருகின்றன காட்சிகள். இருந்தாலும் சில காட்சிகளில் இவற்றையும் தாண்டி சஸ்பென்ஸை அழகாக மெயின்டெய்ன் செய்திருக்கிறார் அதியமான்.

  படத்தில் குத்து ரம்யாவை முடிந்த வரை கிளாமராக காட்டியிருக்கிறார்கள். அவரும் வரைமுறையின்றி தனது வாளிப்பான தேகத்தை ரசிகர்கள் பார்வைக்கு விருந்தாக்கியுள்ளார். குறிப்பாக பீச் காட்சிகளில் செக்ஸ் வரைமுறையின்றி கரைபுரண்டோடியிருக்கிறது.

  ஸ்ரீராம் என்ற கேரக்டரில் வரும் ஷாம் நிறைவாகச் செய்திருக்கிறார். குத்து ரம்யா சம்பந்தப்பட்ட காட்சிகளில் நடிப்பில் மிளிருகிறார். அடக்கம் ஒடுக்கமான மனைவியாக சந்தியா. வயதைத் தாண்டிய கேரக்டர் என்பதால் பெரிய அளவில் அழுத்தம் இல்லை. சில இடங்களில் அவரது நடிப்பு நாடகத்தனமாக இருக்கிறது.

  விேவக்கின் காமெடி சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இன்னும் எத்தனை நாளைக்கு ரஜினி ஸ்டைலப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கப் போகிறாரோ விவேக்.

  இசை - புதுமுகம் அபிஷேக். சொல்லிக் கொள்ளும்படி இல்லை.

  பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X