29 Review: 29 விமர்சனம்.. இந்த வயசு தாண்டினாதான் வாழ்க்கை புரியும்.. ரத்னகுமார் படம் பாஸா? ஃபெயிலா?

Rating:
3.0/5
Star Cast: விது, ப்ரீத்தி அஸ்ரானி
Director: ரத்னகுமார்

சென்னை: கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் மற்றும் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் இணைந்து தயாரித்துள்ள '29' படத்தை மேயாத மான், ஆடை, குலு குலு இயக்கிய ரத்னகுமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ரெட்ரோ பட வில்லன் விது, அயோத்தி ஹீரோயின் ப்ரீத்தி அஸ்ரானி மற்றும் மாஸ்டர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

'29' என்கிற டைட்டிலில் ஹீரோவின் வயதை தான் குறிக்கிறது. இளைஞர்கள் பெரும்பாலும் 29 வயது வரை பெரிதாக பொறுப்பு இல்லாமலும் ஒரு இலக்கு இல்லாமலும் காதல் தான் முக்கியம் என சுற்றிக் கொண்டிருப்பார்கள். ஆனால், அந்த வயதை கடந்து 30 வயதுக்குள் செல்லும் போது தான் உலகமும் வாழ்க்கையும் புரியும் என்பது தான் படத்தின் மையக்கருவே.

29 Movie Review in Tamil  Rathnakumar passed with his Love and Goal Story
Photo Credit:

சமீபத்தில் கென் இயக்கி நடித்து வெளியான யூத் படத்திலும் ஹீரோ படம் முழுக்க பல பெண்களை காதலிப்பார். கடைசியில், +2 முடிப்பதற்கு முன்பாகவே லவ் முக்கியம் இல்லை லைஃப் தான் முக்கியம் என்பதை உணர்வார். அதே பாணி கதையை 90ஸ் கிட்ஸ் டச்சுடன் கொடுத்துள்ள ரத்னகுமார் இந்த படத்தில் பாஸ் ஆகியுள்ளாரா? ஃபெயில் ஆகியுள்ளாரா? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம் வாங்க..

29 படத்தின் கதை: விவசாயம் தொடர்பாக படித்து விட்டு கோவையில் இருந்து சென்னைக்கு வந்து ஐடி வேலை செய்யும் ஹீரோ சத்யாவுக்கும் (விது) கலெக்டர் ஆகவேண்டும் என்கிற கனவுடன் அதே வேலைக்கு வரும் ஹீரோயின் ப்ரீத்தி அஸ்ரானிக்கும் இடையே காதல் மலர்கிறது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே எதிர்காலத்தில் என்ன பண்ணப் போகிறோம் என்கிற கேள்வி எழ அது ஈகோ மோதலாக வெடிக்கிறது. அதன் பின்னர், இருவரும் அவரவர் விரும்பியதை சாதித்தார்களா? காதலில் இணைந்தார்களா? என்பதை ஒரு சின்ன டிராக் ட்விஸ்ட் உடன் கொடுத்துள்ள படம் தான் இந்த 29.

பிளஸ்: மேயாத மான் படத்துக்குப் பிறகு பல வித்தியாசமான முயற்சிகளை எடுத்து ரிஸ்க்கில் சிக்கினார் ரத்னகுமார். இந்த முறை கண்டிப்பாக கம்பேக் கொடுக்க வேண்டும் என 90ஸ் கிட்ஸை டார்கெட் செய்து ஒரு அழகான காதல் படத்தையும் வாழ்க்கைக்கு தேவையான லட்சியத் தேடலை நோக்கி ஓட வேண்டும் என்கிற நம்பிக்கை விதையையும் விதைத்து பாஸ் ஆகியுள்ளார். விது வில்லனாக அறிமுகம் ஆன நிலையில், ஹீரோவாக இடம் பிடிக்க ரொம்பவே டைம் எடுக்கிறார். நடிப்பில் அவர் ஜஸ்ட் பாஸே ஆகிறார். ப்ரீத்தி அஸ்ரானி அழகாக நடித்து படத்திற்கு பலம் சேர்த்துள்ளார். ஷான் ரோல்டனின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் படத்திற்கு பெரிய பலமாக உள்ளது. 2010 காலக்கட்டத்தை மாதேஷ் மாணிக்கத்தின் கேமரா கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.

மைனஸ்: முதல் பாதி கொஞ்சம் ஸ்லோவாகவே நகர்வது கண்டிப்பாக ஜென்ஸி ரசிகர்களை கவருமா என்கிற சந்தேகத்தை எழுப்புகிறது. ஆனால், 90ஸ் கிட்ஸுக்கு பிடிக்கும் அளவுக்கு படம் உள்ள நிலையில், தப்பித்து விடும் என்றே தெரிகிறது. காதல் மட்டுமே வாழ்க்கை இல்லை அதையும் தாண்டிய வாழ்க்கை உள்ளது என்றும் நமக்கான வாழ்க்கையை வாழும் பயணத்தை இளைஞர்களும் பெண்களும் நோக்கி நகர வேண்டும் என்கிற கருத்து படத்தை காப்பாற்றுகிறது. என்ன இருந்தாலும் விஜய் அரசியல் பஞ்சாயத்துக் காரணமாக இந்த வாரம் இந்த படம் பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை பெறுமா என்பது பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X