twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜகன்மோகினி - விமர்சனம்

    |

    Jagan Mohini
    நடிப்பு: நமீதா, நிலா, ராஜா, வடிவேலு
    இசை: இளையராஜா
    இயக்கம்: என்கே விஸ்வநாதன்
    தயாரி்ப்பு: எச் முரளி

    விட்டலாச்சார்யா இயக்கத்தில் 80களில் ஜெயமாலினி நடித்து வெளிவந்த ஜெகன்மோகினியை, நமீதாவை வைத்து ரீமேக்கியிருக்கிறார்கள்.

    'ஓல்ட் எப்பவுமே கோல்ட்' என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார்கள்.

    கதை எல்லோருக்குமே தெரிந்த சமாச்சாரம்.

    காதலித்து துரோகம் செய்துவிட்டு வேறு ஒரு பெண்ணை மணப்பவனை மயக்கி எடுத்துச் செல்லும் மோகினி, அவளிடமிருந்து கணவனை மறுபடியும் மீட்கப் போராடும் மனைவி என்ற கான்செப்டை விறுவிறு பொழுதுபோக்காகத் தர முடியாமல் போரடித்திருக்கிறார்கள்.

    நமீதாவை எப்போது துகிலுரியலாம் எனக் காமிரா காத்திருப்பது போன்ற காட்சியமைப்புகள், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரின் நோக்கத்தைத் தெளிவுபடுத்தி விடுகிறது.

    கொடுமை என்னவென்றால்... நமீதாவின் கவர்ச்சியைக் கூட பார்க்க அலுப்புத் தட்டும் அளவுக்கு படமாக்கியிருக்கிறார் இயக்குநர் என் கே விஸ்வநாதன்.

    வசனங்கள் என்ற பெயரில் கொல்லுகிறார்கள். ஐந்து நிமிடங்கள் தொடர்ந்து இந்த வசனங்களைக் கேட்டால், குறட்டை விட்டுத் தூங்கியே விடுவார்கள் ரசிகர்கள்.

    நமீதாவுக்கு நடிக்க வேண்டிய கஷ்டமெல்லாம் இல்லை. அவரிடமிருந்து யாரும் நடிப்பை எதிர்ப்பார்க்கவும் இல்லை எனப் புரிந்து அதற்கேற்ற வேலையைச் செய்திருக்கிறார்.

    நிலா சும்மா வந்து போகிறார். மற்றவர்கள் யாரும் சொல்லிக் கொள்கிற மாதிரியில்லை. வடிவேலு இருந்தும் சிரிப்பில்லை.

    இசைக்கு இளையராஜா. ஆனால் அவர் ஏதாவது புதிதாக செய்வதற்கு ஸ்கோப் இருந்தால்தானே. அப்படியும் இரண்டு பாடல்கள் ஓகே.

    ஒளிப்பதிவு, இயக்கம் இரண்டிலுமே கோட்டை விட்டு விட்டார் என் கே விஸ்வநாதன்.

    நமீதாவின் பெரிய உடம்பை மட்டும் காட்டி மக்களை ஏமாற்ற முடியாது என்பது, வந்த ரசிகர்களில் முக்கால்வாசிப்பேர் இடைவேளையின்போது காணாமல் போவதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X