For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  Movie Review : 1983 கிரிக்கெட் உலகக்கோப்பையை நினைவூட்டும் "83" எப்படி இருக்கு ?

  |

  சென்னை: 1983ஆம் ஆண்டு இந்திய மக்களால் மறக்கமுடியாத உலக கோப்பை கிரிக்கெட் பந்தயம் பற்றியும் அந்த மாபெரும் வெற்றியடைந்த தருணத்தையும், கிரிக்கெட் ரசிகன் ஒவ்வொருத்தரும் இன்று வரை திரும்ப திரும்ப நினைத்து பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.

  அப்படிப்பட்ட தருணத்தை பொக்கிஷமான அனுபவத்தை வீடியோ காட்சிகளாக அதிகமான பதிவுகள் இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. இதை மூலக் கருவாக கொண்டு 83 என்கின்ற இந்த திரைப்படம் 1983ஆம் ஆண்டு எவ்வளவு கஷ்டப்பட்டு உலகக்கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி கபில்தேவ் தலைமையில் வென்றது என்பது தான் படத்தின் ஒட்டுமொத்த கதை.

  கபில்தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் ஏற்று நடிக்க பல முக்கியமான கதாபாத்திரத்தில் இந்திய கிரிக்கெட் அணியை மீண்டும் ஒருமுறை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் இயக்குநர் கபீர் கான். நடிகர் ஜீவா மிக முக்கியமான ஒரு கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் செய்கின்ற, செய்துவந்த பல குறும்புகளையும் சாதனைகளையும் அழகாகப் புரிந்துகொண்டு "ஷிகா" என்னும் ஸ்ரீகாந்த்தின் கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடித்துள்ளார்.

  Rating:
  3.5/5

  பல உண்மை சம்பவங்களை

  பல உண்மை சம்பவங்களை

  படத்தின் முதல் பாதியில் இந்திய அணி 1983ஆம் ஆண்டு சந்தித்து வந்த பல சோதனைகளையும், வலியையும், வேதனையையும் சொல்லப்படாத பல விஷயங்களை மக்களுக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார் இயக்குனர். பல உண்மை சம்பவங்களை மிக அழகாக சேகறித்து அதை காட்சிப்படுத்திய விதத்தில் மிகப்பெரிய பாராட்டுகளை ஒட்டு மொத்த குழுவும் பெறுகிறது. இந்திய அணி உலகத்தில் உள்ள மற்ற கிரிக்கெட் அணிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது மிகப்பெரிய போட்டியாளராக மற்றவர்களுக்கு மத்தியில் சரிசமமான திறமைசாலிகளாக வருவார்களா,மிளுருவார்களா? என்ற கேள்வி எழுந்து கொண்டே இருந்தது. தடைகள் அனைத்தையும் தகர்த்தெரிந்து உடைத்தெறிந்து படிப்படியாக எப்படி முன்னுக்கு வந்தார்கள் என்பதை பிரம்மாண்டமான விஷுவல்ஸ் மூலம் மிகவும் நேர்த்தியாக கதை சொல்லி உள்ளார் இயக்குனர் கபீர் கான்.

  தேசப்பற்றை மிக ஆழமாக

  தேசப்பற்றை மிக ஆழமாக

  83 என்கின்ற இந்த படத்தை தமிழ் டப்பிங் வர்ஷன் பார்க்கும்பொழுது கபில்தேவ் கதாபாத்திரத்திற்கு டப்பிங் செய்த சேகர், மிகவும் பாராட்டியாக வேண்டும். ரன்வீர் சிங் கபில்தேவ்வுடைய அத்தனை உடல் அசைவுகளையும் முகபாவங்களையும் புரிந்து அற்புதமாக நடித்திருந்தார். அந்த கதாபாத்திரத்திற்கு மிகவும் அழகாக சேகர் டப்பிங் செய்திருந்தார். இன்னொரு பக்கம் தமிழ்மொழிக்கு ஏற்றவாறு மிக அற்புதமான வார்த்தைகளில் உன்னதமான சொற்களைப் பயன்படுத்தி விஜயகுமார் வசனங்களை எழுதியிருந்தார். இந்தியாவில் இருக்கக்கூடிய பல பிரபலங்கள் 83 என்கின்ற இந்த படத்தை திரையரங்கம் சென்று பார்த்து ஒருவருக்கொருவர் கைதட்டி விசிலடித்து பாராட்டி வருகின்றனர். கிரிக்கெட் ரசிகர்கள் என்பது மட்டுமல்லாமல் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த இந்த உன்னத தருணத்தை திரும்பத் திரும்ப பார்க்கும் ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படும் விதமாக 83 என்கின்ற இந்த படம் தேசப்பற்றை மிக ஆழமாக பதிய வைக்கிறது.

  மைதானத்திற்கு அழைத்து சென்ற இசையாக

  மைதானத்திற்கு அழைத்து சென்ற இசையாக

  1983 என்கின்ற அந்த ஆண்டில் கிரிக்கெட் என்கின்ற இந்த விளையாட்டு எத்தனை மக்களுக்கு தெரிந்திருந்தது? அப்போதைய சூழலில் இந்திய மக்கள் மனநிலை என்ன? அரசியல் ரீதியான பிரச்சனைகள் என்ன என்பதை மிகவும் தெளிவாக "R & D" செய்து ஒவ்வொரு காட்சியையும் மிகவும் ரசிக்கும் படி எடுத்திருந்தார் இயக்குனர் . படத்தின் ஒளிப்பதிவு கலை மற்றும் எடிட்டிங் அனைத்தும் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக்கொண்டு கதைக்கு வலு சேர்க்கும் விதமாக அமைந்திருந்தது. இசையமைப்பாளர்கள் ஜூலியஸ் பாக்கியம் மற்றும் பிரீதம் சக்கரபோர்த்தி கிரிக்கெட் விளையாட்டின் மைதானத்திற்கு ஏற்ப ரசிகர்களின் ஆரவாரத்திற்கு நடுவே என்னென்ன இசைக்கருவிகளை பயன்படுத்தலாம் என்பதை மிகவும் அழகாக பீஜிஎம் மூலம் மெருகேற்றி விளையாட்டின் தன்மையை எங்கும் போரடிக்காமல் நம்மை மைதானத்திற்குள் அழைத்துச் செல்கின்ற ஒரு இசையாக காட்சிகள் ஒவ்வொன்றும் அமைந்திருந்தது.

  மக்களின் உணர்வை பிரதிபலிக்கும்

  மக்களின் உணர்வை பிரதிபலிக்கும்

  கிரிக்கெட் ரசிகர்கள் பலவிதம் அதில் ஒவ்வொருவரும் புதுவிதம் என்பதுபோல கிரிக்கெட்டை மிக ஆழமாகவும், வாழ்வோடு சம்பந்தப்படுத்திக் கொள்ளும் மனிதர்களுடைய மனப்பான்மையை புரிந்துகொண்டு இந்திய தேசத்தின் கௌரவம் கிரிக்கெட் விளையாட்டுகுள் எப்படி அடங்கியிருக்கிறது என்பதை ஒவ்வொரு காட்சியும் மிகவும் அற்புதமாக விளக்குகிறது.இந்திரா காந்தியாக நடித்த பெண்மணி, இந்திய கிரிக்கெட்டை உற்சாகப்படுத்தும் வயதான தாத்தா, கிரிக்கெட் அணிக்கு மிகவும் ஊக்கமளிக்கும் விதமாக கமெண்டரி செய்யும் பொம்மன் இரானி, கபில்தேவ் மனைவியாக நடித்த தீபிகா படுகோன், அன்றைய சூழலில் ஏற்பட்ட பாகிஸ்தான் பாடர் பிரச்சினைகள், சிறுவயது சச்சின் கிரிக்கெட்டை டிவியில் பார்த்து ரசிப்பது, என்று பல விஷயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். எல்லா தரப்பிலிருந்தும் 83 என்கின்ற இந்த படம் மிகப்பெரிய மெனக்கெடல். இப்படிப்பட்ட ஒரு பயோபிக் அதுவும் குறிப்பாக ஒரு விளையாட்டின் வெற்றியை தேசத்தோடு ஒப்பிட்டு மக்களின் உணர்வை பிரதிபலிக்கும் ஒரு படமாக இந்த படத்தின் குழு மிகப்பெரிய வெற்றி அடைந்திருக்கிறது.

   கிரிக்கெட் வரலாற்றில்

  கிரிக்கெட் வரலாற்றில்

  படத்தின் மைனஸ் என்னவென்று பார்க்கும் பொழுது ஒவ்வொரு காட்சிக்கு பிறகும் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை 100% நம்மால் யூகிக்க முடிகிறது. காரணம் பல வருடங்களுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவம் என்பதனால் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பதை ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகனும் சராசரி சினிமா ரசிகனும் எளிதில் புரிந்து கொள்ளும் படியாக இருக்கிறது. இவை அனைத்தையும் தாண்டி 1983ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி செய்த மாபெரும் சாதனையையும், அதற்குப் பின்னால் நடந்த சொல்லப்படாத பல அரிய பொக்கிஷமான விஷயங்களை தெரிந்துகொள்ள கண்டிப்பாக இந்த படத்தை குடும்பத்துடன் கண்டுகளிக்கலாம். 1983 ஆம் ஆண்டு கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் முக்கியமான ஒரு ஆண்டாகும். அப்படிப்பட்ட அந்த ஆண்டில் உலக கோப்பையை கபில்தேவ் கையில் வைத்துக்கொண்டு இருக்கும் பல போட்டோகிராபஸ் இன்றுவரை இணையதளத்தில் பிரபலமானது. அதற்கு பின்னால் இருக்கும் இந்திய அணியின் முயற்சியும் அதற்கு கொடுக்கப்பட்ட பயிற்சியும் கடந்து வந்த பாதையையும் மிகவும் சுவாரசியமான திரைக்கதை மூலம் ஒரு திரைப்படமாக 83 என்கின்ற இந்த படம் காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல மிக அவசியமும் கூட . இப்படிப்பட்ட பதிவுகள் நல்ல படங்கள் மீண்டும் எடுக்கப்பட வேண்டும் என்பதுதான் பலருடைய ஆசை. சிக்ஸர், 4 , என்று பந்து ஒவ்வொரு முறையும் பவுண்டரி லைனை தாண்டும்போது உண்மையான ஒரு கிரிக்கெட் மேட்ச் பார்த்த அனுபவம் மற்றும் இந்திய அணி வெற்றி பெறும் பொழுது திரையரங்கில் வரக்கூடிய கைதட்டல்கள் சின்ன சின்ன அழகான நகைச்சுவை காட்சிகள் அனைத்தும் கலந்த ஒரு காவிய கிரிக்கெட் படமாக 83 அமைந்திருக்கிறது.

  English summary
  The life journey of Indian cricket team towards 1983 world cup is the movie "83" which is a long time wait got released today and many cricket fans enjoying this movie and its a rewind button pressed with lots of memoirs with great emotion of Indian cricket and love towards the game cricket- by Indians all over the world. The movie is directed by kabir khan and ranveer sing has done the main lead role as kapil dev who was the captain of 1983 world cup.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X