For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

90 ml Review: தான் கெட்ட குரங்கு வனத்தையே கெடுக்கும்... 90 எம் எல் பத்தி வேற என்ன சொல்ல?- விமர்சனம்

|
90 ML Audience Review: 90 ML மட்டமான சரக்கு ரசிகர்கள் விமர்சனம்- Filmibeat Tamil

Rating:
2.0/5

சென்னை: ஐந்து பெண்கள் சேர்ந்து குடித்து, கும்மாளம் அடிக்கும் வாழ்க்கையை கண்களும், காதுகளும் கூசும் அளவிற்கு ஆபாசம் கலந்து சொல்லுகிறது 90 எம்எல்.

இது ஒரு முழுமையான 'ஏ' படம். அதனால் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இந்த விமர்சனத்தைப் படியுங்கள் என்ற எச்சரிக்கையுடன் தான் இந்த விமர்சனத்தை ஆரம்பிக்க வேண்டி இருக்கிறது.

90 ML review: Will Oviyas basic instinct win in theatres?

இந்த படத்துக்கு விமர்சனம் தேவையா என்ற கேள்வி டிரெய்லர் மற்றும் ஸ்னீக்பீக் பார்த்த எல்லோருக்குமே இருக்கும். அதனால் தானோ என்னமோ தெரியவில்லை, வழக்கமா ஊடகவியளாளர்களுக்காக திரையிடப்படும் பிரஸ் ஷோ கூட இந்த படத்துக்கு போடப்படவில்லை. இருந்தாலும் நாடு இன்றைக்கு இருக்கக் கூடிய சூழ்நிலையில், இந்த படம் தேவைதானா என்பதை ரசிகர்கள் அறிந்தது கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த விமர்சனத்தை எழுதுகிறோம்.

90 எம்.எல். பார்த்துவிட்டு முகத்தை மூடிக் கொண்டு எஸ்கேப் ஆன ரசிகர்கள்

படத்தில் பூதக்கண்ணாடி வைத்து தேடினால்கூட கதை என்ற ஒன்று எங்கேயும் கிடைக்கவில்லை. 'என் வாழ்க்கை, என் இஷ்டம்' என்ற கேரக்டர் ஓவியா. அன்சன் பாலுடன் லிவ்விங் டுகெதர் முறையில் வாழ்க்கை நடத்துகிறார். இருவரும் ஒன்றாக தம்மடித்து, தண்ணியடித்து, செக்ஸ் வைத்துக்கொண்ட நேரம் போக, கொஞ்சம் வேலைக்கும் போகிறார்கள். இப்படிப்பட்ட இந்த ஜோடி, ஒரு அப்பார்ட்மெண்டுக்கு குடியேறுகிறது. அங்கு ஏற்கனவே குடியிருக்கும் நான்கு பெண்களுடன் நட்பாகிறார் ஓவியா. அந்த நால்வரில் மூவர் திருமணமானவர்கள், ஒருவர் மட்டும் வேலைக்கு போகும் இளம்பெண். இந்த ஐவர் கூட்டணி ஒன்றாக சேர்ந்து, தம்மடித்து, தண்ணியடித்து, கஞ்சா இழுத்து, செக்ஸ் கதை பேசி பொழுதை கழிப்பது தான் முழுபடமும்.

90 ML review: Will Oviyas basic instinct win in theatres?

'ஆண்கள் செய்யும் அத்தனை விஷயங்களையும் பெண்களாலும் செய்ய முடியும். ஏன் பொண்ணுங்க தம்மடிக்கக் கூடாதா, தண்ணியடிக்கக் கூடாதா, செக்ஸ் பற்றி பேசக்கூடதா' என்று கேட்கும் பெண்ணியவாதிகள் கூட இந்த படத்தை பார்த்தால் நிச்சயம் ஷாக் ஆவார்கள். அந்தளவிற்கு படத்தில் எல்லா விசயங்களுமே படுதூக்கலாக இருக்கிறது. படம் முழுக்க அந்த ஐந்து பெண்களும் போதையிலேயே மிதக்கிறார்கள். இது ஒன்றே படம் யதார்த்த வாழ்வில் இருந்து எத்தனை தூரம் தள்ளி நிற்கிறது என்பதற்கு உதாரணம்.

Thadam Review: ஒரு கொலை.. ஓர் உரு இரட்டையர்.. போலீஸ்.. ஆடுபுலி ஆட்டம் ஆடும் 'தடம்'! - விமர்சனம்

இந்த படம் மூலமாக இயக்குனர் என்ன சொல்ல வர்றாங்க என்பதே புரியவில்லை. அது ஓவியாக்களுக்கு மட்டுமே வெளிச்சம். ஒரு பெண் இயக்குனர் இவ்வளவு ஓப்பனாக இருப்பது, சுதந்திரமாக தனக்கு பிடித்த படத்தை எடுப்பது சந்தோஷமான விஷயம் தான். ஆனால் இப்போது இந்த படத்துக்கு தமிழ் சினிமாவில் என்ன தேவை என்பது தான் கேள்விக்குறி.

90 ML review: Will Oviyas basic instinct win in theatres?

நாட்டில் மதுவிலக்கு கொண்டு வரவேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வரும் இன்றைய காலகட்டத்தில், பெண்களையும் போதைக்கு அடிமையாக்கிவிட நினைப்பது என்ன மாதிரியான மனநிலை என்றே தெரியவில்லை. போதை மட்டுமல்ல, படத்தில் இல்லாத கெட்ட விஷயங்களே இல்லை. சிகரெட், மது, கஞ்சா, லிப்லாக், படுக்கையறை காட்சி, லெஸ்பியன் செக்ஸ் என ஒரே படத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோர் மனதை சஞ்சலப்படுத்தும் அத்தனையும் இருக்கிறது.

எல்லாத்தையும் காட்டிவிட்டு, அடிக்காத கூத்தெல்லாம் அடித்துவிட்டு, கடைசியில் நாங்கள் நல்ல பிள்ளையாகிவிட்டோம் எனக் கூறுவது சினிமாத்தனமாக இருக்கிறது. மது அருந்தும் காட்சியில் குடி குடியைக் கெடுக்கும் என்பது மாதிரி தான் இதுவும். இதே படத்தை ஆண்களை வைத்து எடுத்திருந்தால் ஓகேவா எனக் கேட்பவர்களுக்கு, விஷம் யார் சாப்பிட்டாலும் ஆபத்து தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

90 ML review: Will Oviyas basic instinct win in theatres?

பிக் பாஸ் மூலம் கிடைத்த நல்ல பெயரை வீணாக கெடுத்துக் கொண்டிருக்கிறார் ஓவியா. கட்டாயத்தின் பேரில், ஏதோ டிரஸ் போட வேண்டும் என்பதற்காகவே மேலும், கீழும் கொஞ்சமாக ஆடை அணிந்திருக்கிறார். எதுக்கு ஓவியா இந்த ரிஸ்க். நிஜ வாழ்க்கையில் நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஒரு திரையில் வரும் போது அப்படியே இருப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியது இல்லை. நீங்க ஹேர் ஸ்டைலை மாத்துனதைப் பார்த்தே எத்தனை பேர் அந்த ஹேர் ஸ்டைலுக்கு மாறினாங்கங்கறது உங்களுக்கு ஞாபகம் இல்லையா? மக்கள் உங்கள் மீது வைத்துள்ள அன்பிற்கு நீங்கள் தரும் கைமாறு இதுதானா?

Dhadha 87 Review: காதல்... 'அதை'யும் தாண்டி புனிதமானது... மிரட்டி சொல்லும் தாதா 87! விமர்சனம்

ஓவியாவுடன் சேர்ந்து லூட்டியடிக்கும் மற்ற பெண்களும், இயக்குனர் சொல்வதைக் கேட்டு அப்படியே நடந்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட காட்சிகள்ல நடிக்கறதுக்கு முன்னாடி, 'இந்த படத்த நம்ம குடும்பத்தோட சேர்ந்து தியேட்டர்ல உட்கார்ந்து பார்க்க முடியுமா'ன்னு கண்ணாடி முன்னாடி நின்னு கேட்டுப் பார்த்திருக்க வேணாமா கேர்ள்ஸ். அப்படி செஞ்சிருந்தீங்கண்ணா கோடி ரூபாய் கொடுத்திருந்தாலும் இந்தப் படத்துல நடிக்க யோசிச்சிருப்பீங்க.

90 ML review: Will Oviyas basic instinct win in theatres?

படத்துல மொக்கை வாங்குவதற்கு என்றே சில ஆண்கள் வருகிறார்கள். அதுவும் அப்பார்ட்மெண்ட் குடியிருப்பு வாசிகளாக வரும் அந்த இரண்டு பசங்க... ரொம்ப பாவம் பாஸ் அவங்க நிலைமை.

படத்துல ஆறுதலான ஒரே விஷயம் எஸ்டிஆரின் இசை தான். பாடல்கள் எல்லாமே செம துள்ளலாக இருக்கின்றன. பீர் பிரயாணி பாட்டு செம மெட்டு. பின்னணி இசை தான் படத்தை சலிப்படையாம கொண்டு போகுது. சிறப்பு தோற்றமா கடைசி ஐந்து நிமிஷம் மட்டுமே வந்தாலும், சிறப்பு சிம்பு.

தொழில்நுட்ப ரீதியாக படம் நன்றாகவே இருக்கிறது. அரவிந்த் கிருஷ்ணாவோட ஒளிப்பதிவாக இருக்கட்டும், ஆண்டனியோட படத்தொகுப்பாக இருக்கட்டும், எல்லாமே சூப்பராக இருக்கிறது. ஆனால் படத்தின் கரு தான் கடுப்பேற்றுகிறது.

90 ML review: Will Oviyas basic instinct win in theatres?

இந்த படத்தின் டிரெய்லரையோ, காட்சிகளையோ கூட நம் பிள்ளை பார்த்துவிடக் கூடாது என்பது தான் ஒவ்வொரு பெற்றோர்களின் மனதிலும் ஓடும். தியேட்டருக்கும் வரும் அத்தனை கூட்டமும் பள்ளி, கல்லூரி படிக்கும் மாணவர்கள் தான். அவர்களும் இதுபோல் நடக்க ஆரம்பித்துவிட்டால் நம் வீடு தான் என்னாவது, இல்லை நாடு தான் என்ன கதியாகும். இப்படியான படங்களையும் தந்து, பெண்களுக்கு தவறான வழியைக் காட்டி விட்டு, அப்புறம் நீங்க இப்டி நடக்கறதுனால தான் நாட்டுல பாலியல் தொந்தரவுகள் அதிகமாகுதுனு சொல்றதெல்லாம் வேஸ்ட்.

இதுபோன்ற படங்கள் நல்லா கல்லா கட்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஏற்கனவே தறிக்கெட்டுபோயிருக்கும் இளைஞர்களை நல்வழிப்படுத்துவதை விட்டுவிட்டு, இப்படி படம் எடுத்து அவர்களை அதிகாலை 5 மணி காட்சிக்கு அலைமோத வைப்பது எந்தவிதத்தில் நியாயம்.

சமுதாயத்த மனசுல வெச்சு யோசிச்சு, பார்த்து படம் எடுங்க அழகிய அசுரா. இல்ல தயவு செஞ்சி படமே எடுக்காதீங்க ப்ளீஸ். சினிமா என்பது மிகப்பெரிய ஆயுதம். அதை நம்ம சமூகத்துக்கு எதிரா மாத்திடாம இருக்கறது ஒவ்வொரு கலைஞர்கள் கையிலுமே இருக்கிறது. இனிமேலாவது பொறுப்புடன் செயல்பட்டால் 90 எம் எல் போன்ற மட்டமான சரக்குகளை கையில் தொட வேண்டிய நிலைமை ஏற்படாது.

English summary
90ml is a comedy drama film written and directed by Anita Udeep. The film stars Oviya, in lead role. The film is produced by Udeep under Nviz Entertainment. The film's soundtrack was composed by Silambarasan.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more