A History of Violence Review: இதுதான் லியோ படத்தின் கதையா? ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் விமர்சனம் இதோ!
நடிகர்கள்: விக்கோ மார்டென்சன், எட் ஹாரிஸ், மரியா பெல்லோ
இசை: ஹாவர்ட் ஷோர்
இயக்கம்: டேவிட் கிரானன்பெர்க்
சென்னை: A History of Violence Review- நம்ம ஊரில் வந்த பாட்ஷா படத்தை பட்டி டிக்கெரிங் பார்த்து ஹாலிவுட் எடுக்கப்பட்ட படம் போலத்தான் இந்த ஹிஸ்டரி ஆஃப் வயலென்ஸ் திரைப்படம் இருக்கும். 2005ம் ஆண்டு இயக்குநர் கிரைம் படங்களின் மன்னன் இயக்குநர் கிரானன் பெர்க் இயக்கத்தில் வெளியான எ ஹிஸ்டரி ஆஃப் வயலென்ஸ் திரைப்படத்தின் உரிமையை வாங்கித்தான் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தை இயக்கி உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், படத்தின் டிரெய்லரும் அப்படியே அந்த படத்தை போலவே உள்ள நிலையில், ரசிகர்கள் பலரும் அதை உறுதி செய்து வருகின்றனர். பார்த்திபன் தான் லியோ தாஸா? இல்லையா? என்கிற ட்விஸ்ட் உடன் லியோ டிரெய்லர் இடம்பெற்றிருந்தாலும் ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் படமாக இருந்தால் அந்த படத்தை பார்த்தவர்களுக்கு அதன் உண்மைத் தன்மை தெரிந்திருக்கும். லியோ படத்தின் ரிலீஸுக்கு முன்னதாக எ ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் படம் எப்படி இருக்கு என்பது குறித்த ஒரு சிறு அலசலை இங்கே பார்ப்போம்.

ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் கதை: ஒரு சின்ன ரெஸ்டாரன்ட்டில் வேலை பார்த்துக் கொண்டு தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்து வரும் டாம் ஸ்டால் ரெஸ்டரன்ட்டுக்கு ஒரு நாள் இரு கேங்ஸ்டர்கள் வருகின்றனர். அங்கே பணியாற்றும் பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சிக்க, சற்றும் பதற்றமே இல்லாமல் அதுவரை அமைதியான குடும்பத் தலைவனாக இருக்கும் டாம் அவர்களின் துப்பாக்கியை வைத்து இருவரையும் போட்டுத் தள்ளுகிறார். கேங்ஸ்டர்களை கொன்ற நிலையில், ஊரில் மினி சூப்பர் ஹீரோவாக மாறுகிறார்.
டிவி பேட்டியெடுக்கும் போது கேமராவில் டாம் முகம் தெரிந்து விட, அவரை தேடி வில்லன்கள் கூட்டமாக வருகின்றனர். பிலாடல்பியா எனும் இடத்தில் ஜாய் குசாக் எனும் கேங்ஸ்டராக வாழ்ந்தவன் தானே நீ என டாமையும் அவனது குடும்பத்தினரையும் வில்லன் ஆட்கள் துரத்த, எதிரிகளை துவம்சம் செய்யும் டாம் இந்த பிரச்சனையை முடிக்க பிலாடல்பியாவுக்கே சென்று தனது அண்ணன் டானை சந்திக்கிறார். பின்னர் அவரையும் போட்டுத் தள்ளி விட்டு தனது குடும்பத்தினருடன் சந்தோஷமாக வாழ்கிறார்.

பிளஸ்: கேங்ஸ்டர் என்றால் பெரிய கூட்டத்தை எல்லாம் காட்டாமல் அவர்களின் வில்லத்தனத்தை நடிப்பாலே அந்த படத்தில் இயக்குநர் கையாண்டு இருப்பார். மேலும், லியோ படத்தில் இடம்பெறுவது போல பிரம்மாண்ட ஸ்டன்ட் காட்சிகள் எல்லாம் இருக்காது. தான் கேங்ஸ்டர் இல்லை என மனைவியிடம் சொல்வதும், தன்னை தேடி வரும் கேங்ஸ்டர்களிடமும் அதே கதையை சொல்வதும், ஆனால், யாருமே நம்பாமல் உன்னோட கொலை வெறி தாக்குதலே நீ யாருன்னு காட்டி விட்டது என விரட்டி வர ஒரு கட்டத்தில் டாம் சாகப்போகும் நேரத்தில் அவரது மகன் வில்லன்களில் ஒருவரை போட்டுத் தள்ளி அப்பாவை காப்பாற்றி விடுவார். மனைவிக்கு மட்டும் உண்மை தெரிந்தாலும், அந்த நகரில் உள்ள ஷெரிஃப் பல முறை கேட்டும் உண்மையை மறைத்தே வருவார் ஹீரோ. கேங்ஸ்டர் என்கிற உண்மை மனைவிக்கு தெரிந்ததும் அவரை விட்டு விலக துடிப்பார். பின்னர், கிளைமேக்ஸில் நான் நல்லவனா உன் கூட நம்ம குழந்தைகளுடன் வாழ ஆசைப்படுறேன் என்னை மாற்றியதே நீ தான், உன்னை சந்தித்த பிறகு தான் நான் மாறினேன் என பேசும் இடங்கள் எல்லாம் டச்சிங்காக இருக்கும். சிறந்த தழுவல் திரைக்கதைக்காக ஆஸ்கர் நாமினேஷனில் இடம்பெற்ற திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் நடித்த நடிகர்கள், மேக்கிங் கவனத்தை ரொம்பவே ஈர்க்கும்.
மைனஸ்: ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் படத்தின் பெயருக்கு ஏற்றது போல பிரம்மாண்ட காட்சிகள் இருக்காதது பிளஸ் ஆக பார்க்கப்பட்டாலும், ஆக்ஷன் விரும்பிகளுக்கு அது மிகப்பெரிய மைனஸ் ஆகவே தெரிந்தது. வில்லனாக இருந்து பெரிய சம்பவத்தை செய்து விட்டு அதிலிருந்து வெளியே வந்து நல்லவனாக வாழ நினைப்பவனை மீண்டும் அந்த வில்லன்கள் துரத்தி அத்தனை பேரும் ஹீரோவின் கைகளால் கொல்லப்படுவதில் எந்தவொரு சுவாரஸ்யமும் இல்லையே என்கிற விமர்சனங்களையும் படத்தின் ரிலீஸின் போது ஏகப்பட்ட பேர் விமர்சித்து இருந்தனர். அதையெல்லாம் மாற்றி லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கி இருப்பார் என எதிர்பார்க்கலாம். டைட்டிலிலேயே லியோ இருப்பதால் பார்த்திபன் தான் லியோ என்பது தெளிவாக தெரிகிரது. அக்டோபர் 19ம் தேதி வெளியாக உள்ள இந்த படம் எப்படி இருக்கிறது என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











