twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ‘A Thursday’ movie Review...தொடக்கம் முதல் முடிவு வரை பரபரப்பு...சீட்டு நுனியில் உட்கார வைத்த படம்

    |

    Rating:
    4.0/5

    நடிகர்கள்

    அடுல் குல்கர்னி

    யாமினி கௌதம்

    நேஹா துபியா

    டிம்பிள் கம்பாடா

    இசை: கைசாத் கேர்டா

    இயக்குநர் : பேசாத் கம்பாடியா

    ரேட்டிங்: 4/5

    சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள படம் 'எ தர்ஸ்டே' ('A Thursday' ) இந்த படத்தை பார்த்த பலரும் சமூக வலைத்தளத்தில் படம் குறித்து பாசிட்டிவாக பகிர்ந்து வருகின்றனர் குறுகிய காலத்தில் அனைவரையும் கவர்ந்த படமாக உள்ளது.

    A Thursday movie review ... a movie that made us sit on the edge of the seat from beginning to end

    'எ தர்ஸ்டே' ('A Thursday' ) இந்தி படமாக ஆங்கில சப் டைட்டிலுடன் வந்த வந்துள்ள இந்தப் படம் மொழி புரியாவிட்டாலும் எளிதில் புரியும் வகையில் க்ரைம் த்ரில் படமாக எடுக்கப்பட்டுள்ளது. காட்சிக்கு காட்சி விறுவிறுப்பாக சீட்டு நுனியில் நம்மை உட்கார வைக்கும் விதத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. படம் தொடக்கம் முதல் முடிவு வரை நிற்காமல் வேகமாக நகரும் விதத்தில் இருப்பது சிறப்பம்சம்.

    A Thursday movie review ... a movie that made us sit on the edge of the seat from beginning to end

    வலுவான திரைக்கதை அமைப்பு, காட்சிகள் எடுக்கப்பட்டுள்ள விதம் பார்ப்பவர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இதனால்தான் குறுகிய கால இடைவெளியில் இந்தியா முழுவதும் இப்படம் பலராலும் பாராட்டப்படும் படமாக உள்ளது. படத்தின் கதை பெரிதாக ஒன்றுமில்லை ஒரு மாலைப்பொழுதில் தொடங்கி இரவு முடிந்துவிடும் ஒரு சம்பவத்தை மிக அழகாக காட்சி படுத்தி உள்ளார்கள் என்று சொல்லலாம்.

    தன்னுடைய வீட்டில் பிளே ஸ்கூல் நடத்தும் கதாநாயகி யாமினி கௌதம் (ஃபேர் அண்ட் லவ்லி விளம்பரத்தில் வந்த நடிகை) தன் பிளே ஸ்கூலில் உள்ள 17 குழந்தைகளை வீட்டுக்குள் பணய கைதிகளாக பிடித்து வைத்துக்கொண்டு, மிரட்டுவதும் அதற்கு அடுத்தடுத்து நிகழும் நிகழ்வும் தான் படத்தின் அடுத்த நகர்வாகும், திடீரென போலீசுக்கு போன் செய்யும் நாயகி என்னிடம் படிக்கும் 17 குழந்தைகளை பிடித்து வைத்துள்ளேன் என் கோரிக்கையை என்னவென்று கேட்க வேண்டும் என்று கூறி போனை வைத்து விடுகிறார் அதன்பின் போலீசுக்கு மட்டுமல்ல நமக்கும் பதற்றம் தொற்றிக் கொள்கிறது.

    A Thursday movie review ... a movie that made us sit on the edge of the seat from beginning to end

    அதன் பின்னர் நடக்கும் ரெஸ்க்யூ ஆபரேஷன் 17 குழந்தைகள் மீட்கப்பட்டதா? நாயகி யாமினி கௌதம் வைத்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டதா? ஒரு குழந்தையை அவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்வார், அதன் மர்மம், இறுதியில் நடக்கும் சுவாரஸ்யமான திருப்பம், இந்தியாவில் நடந்த மாபெரும் நிகழ்வுடன் கதையை இணைப்பது என சஸ்பென்ஸுக்கு பஞ்சம் வைக்காமல் கதையை நகர்த்தியுள்ளார் இயக்குநர் பேஹ்சாத் கம்பாடா (Behzad Khambata). ஏதோ நாட்டின் பெயர் போல் பெயரை வைத்துக்கொண்டு மனுஷன் அநியாயத்துக்கு சஸ்பென்ஸுடன் படத்தை நகர்த்தியுள்ளார்.

    படத்தில் நடித்த ஒவ்வொருவரும் தங்களுடைய பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார்கள். ஹே ராம் படத்தில் வில்லனாக வந்து கலக்கிய அடுல் குல்கர்னி ( இவர் பல தமிழ் படங்களில் நடித்தவர்) இந்தப்படத்தில் கிட்டத்தட்ட கதாநாயகன் ரோல் எனலாம். படத்தில் இன்ஸ்பெக்டராக வரும் இவர் பொறுப்பில்லாமல் நடக்கும் உதவி கமிஷனரை கேள்விக்கேட்கும் காட்சியிலும், கடைசியில் திடீர் திருப்பமாக பிரதமருடன் செல்லும்போது துப்பாக்கியை லோடு செய்யாமல் நடக்கும் காட்சியிலும், குழந்தை ஒன்று கொல்லப்படும்போது துடிக்கும் காட்சியிலும் அருமையாக நடித்துள்ளார். இவரைச் சுற்றியும், கதாநாயகியைச் சுற்றியும் தான் பெரும்பாலும் காட்சி நகர்கிறது.

    A Thursday movie review ... a movie that made us sit on the edge of the seat from beginning to end

    பெண் பிரதமராக வரும் டிம்பிள் கபாடியா அச்சு அசலாக சோனியாகாந்தி போல் அசத்துகிறார், பெண் உதவி கமிஷனராக நடித்துள்ள நேஹா துபியா கர்ப்பிணியாக இருந்தவர் படத்தில் கர்ப்பிணி போலீஸ் அதிகாரியாகவே வந்து அசத்துகிறார். தப்பு செய்ததால் குழந்தை உயிரிழக்க காரணமாக அமைந்த குற்ற உணர்ச்சிக்குப்பின் அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கும் இடத்தில் நன்றாக நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். படத்தில் எடிட்டிங், இசை, கேமரா அருமை. சில யதார்த்தங்களை சினிமாவுக்காக மறந்துவிட்டு பார்த்தால் வெகு யதார்த்தமான க்ரைம் திரில்லர் படம் எனலாம்.

    நாட்டில் இன்றுள்ள மிக முக்கியமான பிரச்சினையை கையிலெடுத்துள்ளதும், முடிவில் அது சட்டமாவதாக குறிப்பிடுவதும், பிரதமர், கதாநாயகி இடையே நடக்கும் உரையாடல்கள் உள்ளிட்டவை நன்றாக உள்ளது. நாட்டின் பிரதமர் தனியாக கடத்தல் குற்றவாளியை சந்திப்பது அபத்தமாக உள்ளது என்றாலும் அதைத்தவிர படத்தில் பிசிறு தட்டும் காட்சிகள் இல்லாமல் எடுத்துள்ளார்கள். ஓடிடி தளத்தில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் 'A Thursday' படத்தை கண்டு ரசிக்கலாம்

    English summary
    ‘A Thursday’ movie, A thrill, crime movie that made us sit on the edge of the seat, from beginning to end, படம் ஆரம்பித்த தொடக்கம் முதல் முடிவு வரை பரபரப்பை கூட்டி சீட்டு நுனியில் பார்வையாளர்களை இறுதிவரை உட்கார வைக்கிறது.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X