Raayan Public Review: புதுப்பேட்டை,வடசென்னையை விட மாஸ்.. ராயன் பொதுமக்கள் விமர்சனம்!
சென்னை: நடிகர் தனுஷின் மிரட்டலான நடிப்பில் இன்று தியேட்டரில் வெளியாகி உள்ள படம் ராயன். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள, இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் இணையத்தில் வெளியாகி ஹிட்டான நிலையில் இன்று வெளியாகி உள்ளது. இப்படம் குறித்து படம் பார்த்த ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்.
ராயன் படத்தில் தனுஷ், வரலட்சுமி சரத்குமார், துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷான், எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், செல்வராகவன், அபர்ணா பாலமுரளி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இப்படம் இன்று ரிலீஸ் ஆனதை முன்னிட்டு தனுஷின் ரசிகர்கள் திரையரங்கில் பேனர் வைத்தும், அதற்கு பாலாபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்து ஆடிப்பாடியும் கொண்டாடினர்.

ராயன் கதை: பெற்றோர் இல்லாமல் தனது தன் தம்பிகளான சந்தீப் கிஷான், காளிதாஸ் மற்றும் தங்கை துஷாரா ஆகியோரை வளர்த்து வருகிறார். சந்தோஷமாக வாழ்ந்த இவர்களின் குடும்பத்தை எதிரிகள் அழிக்கின்றனர். தன் குடும்பத்தை அழித்த எதிரிகளை தேடிப்பிடித்து அழித்து பலியை தீர்த்துக்கொள்கிறார். அடிதடி, ரத்தம், வெறித்தனம் என படம் மிகவும் ரத்தக்களறியாக வெறித்தனமாக உள்ளது. இரண்டாம் பாதி வெறித்தனத்தின் உச்சம். டைட்டில் கார்டு மற்றும் தனுஷின் எண்ட்ரி மெர்சலாக உள்ளது. இண்டர்வெல், கிளைமாக்ஸ் காட்சிகள் அனல் பறக்கிறது என படம் பார்த்த ஒரு ரசிகர் கூறியுள்ளார்.
சும்மா கிழி கிழி: படம் பார்த்த மற்றொரு ரசிகர், இப்படத்தில் தனுஷ் ஒரு புது அவதாரம் எடுத்து திரும்பவும் வந்துள்ளார். இரண்டாம் பாதி சும்மா கிழிகிழினு கிழிச்சிட்டாரு. ஏ. ஆர்.ரஹ்மானின் பிஜிஎம் அட்டகாசமான இருக்கு. குறிப்பாக உசுரே பாடல் வேறு ஒரு உலகத்திற்கே நம்மை கொண்டு சென்றுவிட்டது. இந்த படத்தை தனுஷின் நடிப்புக்காக எத்தனை முறைவேண்டுமானாலும் பார்க்கலாம்.

தெறிக்கவிட்ட தனுஷ்: தனுஷ் எப்படிப்பட்ட நடிகர் என்று நமக்கு தெரியும், அசுரன் படத்திலேயே தனது அசுரத்தனமாக நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். தனுஷ் நடித்த புதுப்பேட்டை, வடசென்னை படத்தை தாண்டி ராயன் படம் இருக்கு, தனுஷின் திரைப்பயணத்தில் இந்த படம் தவிர்க்க முடியாத படமாக மாறி இருக்கு, நடிகராக மட்டுமில்லாமல் இயக்குநராகவும் ஜெயித்துவிட்டார் தனுஷ். ஏஆர் ரஹ்மானின் இசை படத்திற்கு முதுகெலும்பாக அமைந்துள்ளது. தனுஷின் நடிப்பை தாண்டி எஸ்ஜே சூர்யா திரையில் தெறிக்க விட்டு இருக்காரு என்றனர்.


Click it and Unblock the Notifications











