குபேரா: ராஷ்மிகா தேவையே இல்ல? தனுஷ் நடிப்பு சூப்பர்.. ரசிகர்கள் சொல்வது என்ன?

சென்னை: சேகர் கம்முலா இயக்கத்தில் வரும் இன்று தியேட்டரில் குபேரன் திரைப்படம் வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தில், தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து உள்ளார். இப்படம் பார்த்த தனுஷின் தீவிர ரசிகர் ஒருவர் படத்தில் தனுஷ் நல்ல நடிச்சு இருக்கிறார். ஆனால், ராஷ்மிகாவிற்கு சரியான கதாபாத்திரம் தரவில்லை என்று கூறினார்.

ராயன் திரைப்படத்திற்கு பிறகு தனுஷ், தனது அக்கா மகனை வைத்து, நிலவுக்கு என் மேல் என்னடி கோவம் என்ற படத்தை இயக்கினார். இத்திரைப்படத்தை தொடர்ந்து, தனுஷ் நடித்திருக்கும் திரைப்படம் குபேரா. குபேரா அதிகபட்ச பொருட்செலவில் மிகப்பெரிய அளவில் உருவான இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இருந்து கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

dhanush  kuberaa Review
Photo Credit:

ராஷ்மிகா தேவையே இல்ல: சார் திரைப்படத்திற்கு பிறகு தனுஷ் இரண்டாவது முறையாக தெலுகு இயக்குனருடன் கூட்டணி சேர்ந்துள்ளார். இந்த படத்தில், தனுஷ் யாசகம் பெறுபவராக தேவா என்கிற கதாபாத்திரத்தில், அனைத்திற்கும் பயப்படுபவராகவும் தனது கதாபாத்திரம் உணர்ந்து நடித்து இருக்கிறார். இப்படியான ஒரு கதாபாத்திரத்தை எந்த நடிகரும் தேர்வு செய்திருக்கமாட்டார். இந்த படத்தில் அவருக்கு நல்ல பெயர் கிடைக்கும். அதே போல, நாகார்ஜூனா கதாபாத்திரமும் சூப்பர். க்ளைமாக்ஸ் காட்சியில் நேரத்தை இன்னும் கூட குறைத்திருக்கலாம் சிறப்பான திரைக்கதை, காட்சியமைப்பு. சுவாரஸ்யமான படமாக குபேரா படம் இருக்கு.

அது மட்டும் தான் மிஸ்: ஆனால், ராஷ்மிகாவை இயக்குநர் சரியாக பயன்படுத்தவில்லை, படத்தில் ஒரு கதாநாயகி கட்டாயம் இருக்க வேண்டும் என்பதற்காக இடையில் திணிக்கப்பட்ட கதாபாத்திரமாக ராஷ்மிகாவின் கதாபாத்திரம் வருகிறது. ஹீரோயினாக இல்லாமல் தனுஷின் தோழி போல வந்து அவருக்கு உதவி செய்கிறாள். அவரும் ஒரு திறமையான நடிகை தான் அவருக்கும் நல்ல அழுத்தமான காட்சிகளை கொடுத்து இருக்கும், அது மட்டும் தான் மிஸ். இந்த வாரம் பார்ப்பதற்கு தகுதியான படம் தான். தனுஷ் ரசிகர்களை தாண்டி எல்லா ரசிகர்களும் குடும்பத்துடன் சென்று இந்த படத்தை பார்க்கலாம் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X