For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  MOVIE REVIEW : இரட்டை வேடத்தில் ஹிப்ஹாப் தமிழா நடித்த "அன்பறிவு" எப்படி இருக்கு ?

  |

  Rating:
  2.5/5

  நடிகர்கள் :

  ஹிப்ஹாப் ஆதி
  ஷிவானி
  காஷ்மீரா
  ஆஷா சரத்
  நெப்போலியன்
  சாய்குமார்
  விதார்த்

  இசை : ஹிப்ஹாப் தமிழா

  இயக்கம் : அஸ்வின் ராம்

  ரேட்டிங் : 2.5/5

  சென்னை : ஊர் கூடி தேர் இழுப்போம், சாதிகளை ஒழிப்போம், என்ற உயர்ந்த நோக்கத்துடன் தான் "அன்பறிவு" என்கின்ற இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

  ஹிப் ஹாப் ஆதி முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்து தனது நடிப்பாற்றலை முடிந்தவரை வித்தியாசமாக மக்களை மகிழ்விக்க வேண்டும் என்று நிறைய மெனக்கெட்டு உள்ளார்.

  தமிழ் சினிமாவில் பல இரட்டை வேடங்கள் படங்களை எம்ஜிஆர் காலத்தில் இருந்து பார்த்து வரும் நாம் இந்தப் படத்தின் திரைக்கதையில் என்ன வித்தியாசம் என்று யோசித்தால் புதிதாக ஒன்றும் புலப்படவில்லை என்பதுதான் ஆச்சரியம் கலந்த உண்மை.

  நேரடியாக பைனலுக்கு செல்லும் போட்டியாளர் யார் ?.. முடிவெடுக்க முடியாமல் குழம்பும் ஹவுஸ்மெட்ஸ் !நேரடியாக பைனலுக்கு செல்லும் போட்டியாளர் யார் ?.. முடிவெடுக்க முடியாமல் குழம்பும் ஹவுஸ்மெட்ஸ் !

  மிகவும் அழுத்தமானதாக

  மிகவும் அழுத்தமானதாக

  அன்பரிவு சாதிய நடைமுறைகளை கேள்விக்குள்ளாக்க முயல்கிறது ஆனால் அழுத்தமான வாதத்தை காட்சிகள் மூலம் முன்வைக்கும் நுணுக்கமும் நுட்பமும் இல்லை என்பது தான் வேதனை . அறிமுக இயக்குனர் அஸ்வின் ராம் இயக்கிய அன்பறிவு படத்தில் ஹிப்ஹாப் தமிழா முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடித்து உள்ளார் என்பது தான் கூடுதல் சிறப்பு . ஆனால் திரைக்கதை சென்ற விதம் மிகவும் அழுத்தமானதாக இல்லை என்பது மிக பெரிய தொய்வு .

  24 ஆண்டுகளாக பிரிந்த தம்பதி

  24 ஆண்டுகளாக பிரிந்த தம்பதி

  இரண்டு வேடத்தில் "அன்பு" என்கின்ற அண்ணன் "அறிவு" என்கின்ற தம்பி- படத்தில் இது தான் ஆரம்ப புள்ளி . நடிகர் சாய்குமார் அப்பாவாக பிரகாசம் என்ற கதாபாத்திரத்தில் , அம்மா ஆஷாசரத், தாத்தாவாக நெப்போலியன், இதுதான் இந்த குடும்பத்தின், இந்தப் படத்தின் கதையும் கதைக்களமும் . அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட சாய்குமார் இளைய மகனான "அறிவை " பச்சிளம் குழந்தையை வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்கிறார். 24 ஆண்டுகளாக பிரிந்திருக்கும் தம்பதியர்கள் அண்ணன் "அன்பு" தாயிடமும் தம்பி "அறிவு"தகப்பனிடம் வளர்ந்து வருகிறார்கள், இதற்கு நடுவே ஊர் பஞ்சாயத்து சாதி வெறி என்று தாத்தாவாக வரும் நெப்போலியன் பல கருத்துக்களை ஆங்காங்கே தெளித்து கொண்டிருக்கிறார்.

  இப்படி பட்ட கதை என்றதும் பலருக்கும் ஒரு பக்க எரிச்சல் இன்னொரு பக்கம் பொறுமையுடன் சகித்து கொண்டு என்ன தான் சொல்றாங்கானு பாப்போம்னு பார்த்தால் கிளைமாக்ஸ் எமோஷன் கொஞ்சம் ஆறுதல் தரும் .

  அதே முயற்சி

  அதே முயற்சி

  பழைய எம்ஜிஆர் படங்களில் எப்படி ஒரு எம்ஜிஆர் இன்னொரு வீட்டுக்கு சென்று மாறி மாறி ஆள்மாறாட்டம் நடத்தி சுவாரசியங்கள் கூடுமோ, அதே முயற்சி தான் இங்கும் செய்து இருக்கிறார்கள். குட்டி பத்மினி நடித்த "குழந்தையும் தெய்வமும்" படம் ஒரு சிறந்த உதாரணம். இப்படி பல படங்கள் நமக்கு கண்முன்னே வந்து போவது இந்த படத்தின் சுவாரஸ்யத்தை குலைக்கிறதே தவிர ஆச்சர்ய படுத்தவில்லை.

  மனதில் ஒட்டவில்லை

  மனதில் ஒட்டவில்லை

  இந்தப்படத்தில் அம்மாவாக நடித்திருக்கும் ஆஷாசரத்துக்கு மிக நல்ல வாய்ப்பு. உணர்ச்சிபொங்க நடித்துள்ளார். பாபநாசம் படத்தில் காவல் அதிகாரியாக வந்து அனைவரையும் மிரட்டிய அந்த ஆஷாசரத் இந்தப்படத்தில் தாய்மையும் இன்னொரு பக்கம் கோபமும், பாசமும் அனைத்தும் கலந்துகட்டி நடிக்கக்கூடிய ஒரு கதாபாத்திரத்தை நன்கு புரிந்து நடித்திருக்கிறார்.என்னதான் கிளிசரின் இல்லாமல் அழுதாலும் நடித்தாலும் அந்த நடிப்பு கதாபாத்திரத்தின் அழுத்தம் மக்கள் மனதில் ஒட்டவில்லை என்பது தான் சோகம்.

  வம்சாவழியாக தமிழ் சினிமாவில்

  வம்சாவழியாக தமிழ் சினிமாவில்

  நடிகர் விதார்த் முதல்முறையாக சகுனி தனத்துடன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வித்தியாசமான முக பாவங்களுடன், கொடுத்த காரியத்தை கச்சிதமாக செய்துள்ளார். இன்னும் நிறைய படங்களில் விதார்த்துக்கு வில்லனாக நடிக்க வாய்ப்பு வரும் என்பதுதான் உண்மை. இரண்டு கிராமங்களுக்கு இடையே நடக்கும் ஜாதி பிரச்சனை, வேற்றுமை, தேர் திருவிழா, மாலை ,மரியாதை என்று வம்சாவழியாக தமிழ் சினிமாவில் பார்த்து வரும் காட்சிகளும் வசனங்களும் மிகவும் போர் அடிக்கிறது. படத்தில் இரண்டு அழகான ஹீரோயின்ஸ் சிவானி ராஜசேகர் படம் முழுக்க குட்டை பாவாடையுடன் சின்னச்சின்ன ஷார்ட்ஸ் போட்டுக் கொண்டு ரசனையுடன் காதலிக்கிறார். கிராமத்து பின்னணியில் நடக்கும் கதையில் காஷ்மிரா தன் பங்குக்கு ஹிப் ஹாப் ஆதியை வசியப் படுத்துகிறார். அண்ணன் தம்பி இரண்டு கதாபாத்திரங்கள் இரண்டு ஹீரோயின்ஸ் இருந்தும் ரொமான்ஸ் காட்சிகள் சொல்லிக்கொள்ளும்படி எதுவும் இல்லை.

  Recommended Video

  Shivani Rajasekhar Exclusive | Anbarivu முதல் நெஞ்சுக்கு நீதி வரை | Filmibeat Tamil
  அன்பே தான் அறிவு

  அன்பே தான் அறிவு

  சத்யஜோதி பிலிம்ஸ் செய்த மிக அருமையான புத்திசாலித்தனமான ஒரு விஷயம் படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்யாமல் ஓடிடி தளத்திற்கு விற்றது தான். டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி யில் இந்த படத்தை ஒவ்வொரு காட்சியையும் ஓட்டி ஓட்டி மிக எளிதில் பார்த்துவிடலாம். ஹிப் ஹாப் ஆதியின் ரசிகர்களை மகிழ்விக்க தனக்கே உரித்தான பாணியில் சில பாடல்களை கதைக்கு நடுவேசொருகி திரைக்கதையில் பல பல்டிகள் அடித்து கிளைமாக்ஸ் எமோஷன் காட்சி மூலம் கொஞ்சம் தப்பித்துக் கொள்கிறார்கள்.படத்தில் நிறைய லாஜிக்கல் மிஸ்டேக்ஸ் இருக்கிறது. லாஜிக் எதுவும் பார்க்காமல் பொறுமையாக ஒரு பழைய டிராமா + காமெடி கலந்த படமாக ஏற்றுக்கொண்டு பார்த்தால் அன்பே சிவம் என்பதை கொஞ்சம் மாற்றி அன்பே தான் அறிவு என்று சொல்லிய இந்த படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம்.

  English summary
  Actor Hiphop Tamizha Adhi’s Anbarivu Movie Review in Tamil
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X