Label Episode 5 Review: சரண்ராஜ் சும்மா மாஸ் காட்டுறாரே.. லேபில் 5வது எபிசோடு விமர்சனம் இதோ!
நடிகர்கள்: ஜெய், மாஸ்டர் மகேந்திரன், தன்யா ஹோப், சரண் ராஜ்
இசை: சாம் சி.எஸ்
இயக்கம்: அருண்ராஜா காமராஜ்
ஓடிடி: டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்
சென்னை: பணக்காரன், பாண்டியன், வீரா, பாட்ஷா என ரஜினிகாந்த் உடன் பல படங்களில் நடித்த நடிகர் சரண் ராஜ் சமீப காலமாக படங்களில் தலை காட்டாமல் இருந்து வந்த நிலையில், அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஜெய், தான்யா ஹோப் நடிப்பில் உருவாகி உள்ள லேபில் வெப்சீரிஸில் ஜெய்யின் அப்பாவாக நடித்துள்ளார்.
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் முதலில் 3 எபிசோடுகள் வெளியான நிலையில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு எபிசோடுகள் வெளியாகி வருகின்றன. 4வது எபிசோடு கடந்த வாரம் வெளியான நிலையில், நேற்று 5வது எபிசோடு வெளியாகி உள்ளது.
தமிழிலும் தரமான வெப்சீரிஸ்களை கொடுக்க முடியும் என அருண்ராஜா காமராஜ் தனது அட்டகாச இயக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். 5வது எபிசோடு எப்படி உள்ளது என்பது குறித்த விரிவான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..

முதல் 4 எபிசோடுகள்: நடிகர் ஜெய் நடிக்கும் படங்கள் பெரிதாக ஓடாமல் இருந்து வந்த நிலையில், ஓடிடி பக்கம் ஒதுங்கி உள்ளார். அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் அவர் நடித்துள்ள லேபில் வெப்சீரிஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. வடசென்னை மக்களின் லேபிலை மாற்ற வேண்டும் என்கிற முனைப்பில் உருவாகி உள்ள இந்த வெப்சீரிஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
வட சென்னையில் வாலி நகரில் லேபில் ஆளாக ரவுடிசத்திற்கு மாற வேண்டும் என மாஸ்டர் மகேந்திரனும் அவனது கூட்டாளியும் துடிக்கும் நிலையில், அங்குள்ள இளைஞர்களை விளையாட்டு மற்றும் படிப்பில் கவனம் செலுத்த வைத்து அவர்களின் போக்கை மாற்ற போராடி வருகிறார் வழக்கறிஞரான ஜெய். பிரபாகரன் என பெயர் வைத்ததில் இருந்து ஒவ்வொரு எபிசோடுகளிலும் ட்விஸ்ட் மற்றும் டர்ன்களை வைத்து ஸ்கோர் செய்து வருகிறார் கனா பட இயக்குநர்.
5வது எபிசோடு கதை: 4வது எபிசோடு கொஞ்சம் காதல் காட்சிகள் என ஸ்லோ டவுன் ஆன நிலையில், 5வது எபிசோடு மீண்டும் சூடு பிடித்துள்ளது. ஜெய்யை போடுவதற்கு சிறுவர்கள் சுத்துப் போடுவது, அவர்களிடமிருந்து தப்பிப்பது, மாஸ்டர் மகேந்திரன் லேபில் பெரிய ஆளாக மாறுவது, லேபில் வழக்கறிஞரான சுரேஷ் சக்கரவர்த்தி ஜெய்யை அவர் வசம் இழுக்க பார்க்க, அதற்கு முடியாது என சொல்ல, அவரது பெற்றோர்களுக்கும் தொல்லை கொடுப்பது என கதை செம ஸ்பீடாக செல்கிறது.
சரண் ராஜ் சம்பவம்: முதல் எபிசோடில் இருந்தே சாதுவான டெய்லராக சரண்ராஜை தனது மனைவிக்கு ஜாக்கெட் தைக்கும் நபராக காட்டி வந்த இயக்குநர், சரியான இடத்தில் அவரும் முன்னாள் லேபில் என்பதை காட்டி கெத்துக் காட்டும் இடம் சிறப்பாக அமைந்துள்ளது.
அடுத்து என்ன ஆகும்?: பரபரப்புக்கு பஞ்சமே இல்லாத அளவுக்கு 5வது எபிசோடு இறுதியில் பாதாளத்தை ஸ்கெட்ச் போட்டு கொன்றதே ஜெய் நீதிபதியாகத்தான் என எஸ்.ஐ. அருள் குமார் அவரை ஜீப்பில் ஏ1 கைதியாக மாற்றி விசாரணைக்கு அழைத்துச் செல்வதாக முடிந்துள்ளது. மாற நினைத்தாலும் இந்த உலகம் நம்மை மாற விடாது என்பதை தெளிவாக இயக்கி உள்ளார் அருண்ராஜா காமராஜ்.


Click it and Unblock the Notifications











