Hi Nanna Review: நானியின் ’ஹாய் நான்னா’ நல்லா இருக்கா? இல்லையா?.. ரசிகர்கள் விமர்சனம் இதோ!

சென்னை: நானி, மிருணாள் தாகூர் நடிப்பில் காதல் மற்றும் பாசத்தை மையமாக வைத்து உருவாகி உள்ள ஹாய் நான்னா திரைப்படம் இன்று வெளியானது. இந்நிலையில், அந்த படத்திற்கு ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் கொடுத்து வரும் விமர்சனங்கள் டிரெண்டாகி வருகின்றன.

சென்னையில் மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக மக்கள் புதிய படங்களை பார்க்க ஆர்வம் செலுத்தவில்லை. ஆனால், டோலிவுட் படமான ஹாய் நான்னா தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

Actor Nani Starring Hi Nanna Twitter Review in Tamil

நானியின் ஹாய் நான்னா: கடைசியாக கீர்த்தி சுரேஷ் உடன் இணைந்து தசரா படத்தில் ரொம்பவே கஷ்டப்பட்டு நடித்திருந்தார் நானி. தெலுங்கில் அந்த படம் ஓடினாலும், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பெரிதாக ஓடவில்லை. புஷ்பா படம் போல ஓடும் என நினைத்த நானிக்கு பலத்த ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில், ஹாய் நான்னா படம் சீதா ராமம் போல ஹிட் அடிக்கும் என்கிற நம்பிக்கையில் மிருணாள் தாகூருடன் இணைந்து நடித்துள்ளார் இந்த படத்தை சவுரியா இயக்கி உள்ளார்.

மிருணாள் தான் உயிரே: இந்த படத்தில் நானி மற்றும் அந்த குழந்தை எல்லாம் பெரிதாக ஒன்றுமே செய்யவில்லை. மிருணாள் தாகூர் தான் உயிர் என ரசிகர்கள் யாஷ்னா எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சீதாராமம் ஹீரோயின் மிருணாள் தாகூரை கொண்டாடி வருகின்றனர். தொடர்ந்து மிருணாள் நடிக்கும் படங்கள் எல்லாம் ஹிட் அடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Hi Nanna Review done by social media fans

எனக்கு புடிக்கல: ஹாய் நான்னா ரொம்பவே ஏமாற்றம். குஷி, மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி உள்ளிட்ட படங்கள் பிடித்தவர்கள் இந்த படத்தை பார்க்கலாம். ரொம்பவே ஃபிளாட்டான ஸ்க்ரீன்பிளே, ஜெயராம் நடிப்பு சுத்த வேஸ்ட். அந்த குழந்தை, மிருணாள் நல்லா பண்ணிருக்காங்க என இந்த நெட்டிசன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

நானி சூப்பர்: இன்னைக்கு ஹாய் நான்னா டே இந்த படத்தை தியேட்டரில் மிஸ் பண்ணிடாதிங்க, நல்லதொரு ஃபீல் குட் மூவி, நானி ரொம்பவே சூப்பரா நடிச்சிருக்காரு, ஆக்‌ஷன் படங்களை விட்டு விட்டு நானி தொடர்ந்து இதே போல ரொமான்டிக் மற்றும் ஃபீல் குட் மூவிக்களில் நடிக்கலாம் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X