பேயோடு மல்லுக்கட்டும் சதீஷ்..கான்ஜுரிங் கண்ணப்பன் ட்விட்டர் விமர்சனம்!
சென்னை: அறிமுக இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் இன்று தியேட்டரில் வெளியானத் திரைப்படம் கான்ஜுரிங் கண்ணப்பன்.
இதில் சதீஸ், சரண்யா பொன்வண்ணன், ரெஜினா, நாசர், ஆனந்த்ராஜ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இத்திரைப்படம் இன்று வெளியாகி உள்ள இத்திரைப்படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம்.
கான்ஜுரிங் கண்ணப்பன்: கேமிங் துறையில் வேலை தேடி கொண்டிருக்கும் கதாநாயகன் சதீஷ், Dream catcherல் சூனியம் செய்து வைத்து இருக்கும் ரெக்கை ஒன்றை எடுத்துவிடுகிறான். இதனால், சதீஷுக்கு எப்போதெல்லாம் தூக்கம் வருகிறதோ, அப்போதெல்லாம் கனவு உலகத்தில் பேயிடம் மாட்டிக்கொள்கிறார். இதனால், இவர் குடும்பம் சந்திக்கும் அவர் எப்படி சமாளித்தார் என்பதுதான் படத்தின் கதை.
நகைச்சுவை படம்: இன்று வெளியாகி உள்ள படத்தை பார்த்த இணையவாசி ஒருவர், ட்விட்டரில் படம் குறித்த கருத்தை பகிர்ந்துள்ளார். கன்ஜூரிங் கண்ணப்பன் திரைப்படம் திகில் மற்றும் நகைச்சுவை திரைப்படம். இப்படத்தின் கதை வித்தியாசமானதாக உள்ளது. சதீஷ், ஆனந்த்ராஜ், சரண்யா, விடிவி கணேஷ், கிங்ஸ்லி என பல நட்சத்திரங்கள் உள்ளனர். நகைச்சுவை ரசிக்கும் படி உள்ளது. மேலும் அருமையான ஒளிப்பதிவு மற்றும் ஒலி அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஐந்துக்கு மூன்று மதிப்பெண் கொடுத்துள்ளார்.
இசை சூப்பர்: மற்றொரு ட்விட்டர் வாசி ஒருவர், கன்ஜூரிங் கண்ணப்பன் படத்தின் திரைக்கதை நேர்த்தியாக உள்ளது. கதாபாத்திரங்கள், படம் முழுக்க சூப்பர் வேடிக்கை மற்றும் அனைத்து கதாபாத்திரங்களும் கேரக்டரை உணர்ந்து நடித்துள்ளனர். மேலும் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை மற்றும் பிஜிஎம் ரசிக்கும்படி உள்ளது.
சிறப்பான SFX: ஹாரர் மற்றும் திரில்லர் போன்ற கதைக்களத்தில் அடுத்த என்ன என்று படம் பார்க்கும் ரசிகர்களுக்கு தெரியக்கூடாது. ஆனால், இந்த கதையில் பேய் இந்த இடத்தில் தான் வரப்போகிறது என எளிதாகவே கணிக்க முடிகிறது. இதை தவிர்த்து இருக்கலாம். யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை ஓரளவு ஓகே. அதே போல் SFX சிறப்பாக இருக்கிறது. ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் இன்னும் கூட நன்றாக இருந்து இருக்கலாம்.


Click it and Unblock the Notifications











