வலுவான திரைக்கதை... சிறப்பான அனுபவம்... ஸ்கோர் செய்யும் தீர்ப்புகள் விற்கப்படும்

சென்னை : கடந்த 31ம் தேதி வருடத்தின் இறுதிநாளில் வெளியாகி சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளது தீர்ப்புகள் விற்கப்படும் படம்.

படத்தில் லீட் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சத்யராஜ் வழக்கம் போல தன்னுடைய நடிப்பால் அனைவரையும் கவர்ந்துள்ளார்.

வழக்கமான பழிவாங்கும் கதைதான் என்றாலும், அழுத்தமான திரைக்கதையால் அதை சிறப்பாக்கியுள்ளார் இயக்குநர்.

தீர்ப்புகள் விற்கப்படும் படம்

தீர்ப்புகள் விற்கப்படும் படம்

நடிகர் சத்யராஜ் லீட் கதாபாத்திரத்தில் நடித்து இரு தினங்களுக்கு முன்பு ரிலீசாகியுள்ள படம் தீர்ப்புகள் விற்கப்படும். படம் திரையரங்குகளில் ரிலீசாகி நல்ல வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்றுள்ளது. சத்யராஜின் கதாபாத்திரம் மற்றும் நடிப்பு சிறப்பாக அமைந்துள்ளது.

சிறப்பான தமிழ் தலைப்பு

சிறப்பான தமிழ் தலைப்பு

சிறப்பான தமிழ் வார்த்தைகளுடன் படத்தின் டைட்டில் அமைக்கப்பட்டுள்ளது. நீண்ட சிக்கல்களுக்கு பிறகு படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் படம் வெளியாகியுள்ளது. ஆண்டின் இறுதியில் இந்தப் படம் ரசிகர்களுக்கு விருந்தாகியுள்ளது.

முக்கியமான படம்

முக்கியமான படம்

பெண்களை பெற்றவர்கள் மட்டுமின்றி ஆண்களை பெற்றவர்களுக்கும் இந்தப் படம் மிகவும் முக்கியமான படமாக அமைந்துள்ளது. தமிழில் மட்டுமின்றி இந்திய அளவில் அதிகமாக எடுக்கப்பட்ட வழக்கமான பழிவாங்கும் கதைதான் என்றாலும் அதில் அழுத்தமான திரைக்கதையை இயக்குநர் இணைத்துள்ளார்.

பழிவாங்கும் கதை

பழிவாங்கும் கதை

தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்தவர்களை சத்யராஜ் பழிவாங்குகிறார். அவர்களை எவ்வாறு சத்யராஜ் அட்டாக் செய்கிறார் என்பதைதான் சிறப்பான திரைக்கதையாக கொடுத்துள்ளார் படத்தின் இயக்குநர் தீரன். ஆணாதிக்கம் செய்யும் ஆணின் மனநிலையை அப்பட்டமாக்கியுள்ளார்.

மருத்துவராக சத்யராஜ்

மருத்துவராக சத்யராஜ்

பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான பெண்ணின் மனநிலை படத்தில் பேசப்பட்டுள்ளது. நலன் என்ற கதாபாத்திரத்தில் சத்யராஜ் மருத்துவராக நடித்துள்ளார். மேலும் படத்தில் மருத்துவத்துறை சார்ந்த பல விஷயங்களையும் இயக்குநர் சேர்த்துள்ளார்.

சத்யராஜின் இயல்பான நடிப்பு

சத்யராஜின் இயல்பான நடிப்பு

சத்யராஜின் இயல்பான நடிப்பு படத்திற்கு வலு சேர்த்துள்ளது. சிறப்பான அப்பா -மகள் உறவை படத்தில் காண முடிகிறது. ஆயினும் படத்தின் நீளமான காட்சிகள் படத்தை பார்ப்பவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தினாலும் பொறுமையான மனநிலையுடன் பார்த்தால் படம் கண்டிப்பாக கவனத்தை ஈர்க்கும்.

ரசிகர்கள் திருப்தி

ரசிகர்கள் திருப்தி

இந்த ஆண்டின் துவக்கத்தில் நல்ல படத்தை பார்த்த திருப்தியை இந்தப் படம் ரசிகர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. மேலும் சமுதாயத்தில் தற்போது மிகவும் பிரச்சினைக்குரிய விஷயமாக பார்க்கப்படும் பாலியல் வன்முறையை இந்தப் படம் எவ்வாறு அழுத்தமாக பதிவு செய்துள்ளது என்பதும் சிறப்பானதாக பார்க்கப்படுகிறது.

சிறப்பான க்ளைமாக்ஸ் காட்சி

சிறப்பான க்ளைமாக்ஸ் காட்சி

ஹரீஷ் உத்தமன், மதுசூதனன் உள்ளிட்டவர்கள் க்ளைமாக்சில் வரும் காட்சியில் சிறப்பான நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கான மெனக்கெடல்கள் மற்றும் பஞ்ச் டயலாக்குகள் படத்தில் சிறப்பாக வெளிப்பட்டுள்ளன. படத்தில் சில காட்சிகள் மற்ற படங்களை நினைவுப் படுத்தினாலும் கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம் இது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X