Sathamindri mutham tha review: பதைபதைக்கும் காட்சிகள்.. சத்தம் இன்றி முத்தம் தா படம் சுமாரா? சூப்பரா?
நடிகர்கள்: ஸ்ரீகாந்த்,பிரியங்கா திமேஷ்,
இயக்கம் : ராஜூ தேவ்
இசை: ஜூபின்
நடிகர் ஸ்ரீகாந்தின் அட்டகாசமான நடிப்பில் இன்று தியேட்டரில் வெளியாகி உள்ள சத்தமின்றி முத்தம் தா படம் எப்படி இருக்கு என்று பார்க்கலாமா?
சத்தமின்றி முத்தம் தா: தமிழ் திரை உலகில் ரோஜா கூட்டம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீகாந்த். இதன் பிறகு இவர் பல திரைப்படங்களில் நாயகனாக நடித்தார். அதன்பின் சில திரைப்படங்களில் குணச்சித்திர கேரக்டர் மற்றும் வில்லன் கேரக்டரில் நடித்த நிலையில் தற்போது சத்தமின்றி முத்தம் தா என்ற படத்தில் மீண்டும் ஹீரோவாக நடித்துள்ளார். ஸ்ரீகாந்த் ஜோடியாக பிரியங்கா திமேஷ் என்பவர் நடித்திருக்கும் நிலையில் இந்த படத்தை ராஜூ தேவ் என்பவர் இயக்கி உள்ளார். ஜூபின் இசையில் உருவாகிய இந்த படம் ஸ்ரீகாந்துக்கு மீண்டும் ஒரு அட்டகாசமான ரீஎன்ட்ரி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் கதை: இந்த படத்தின் கதை என்ன வென்றால், சந்தியாவை (பிரியங்கா திமேஷ்) கொலையாளியிடம் இருந்து தப்பிக்க முயலும் போது, கொலையாளியின் கூட்டாளி ஓட்டிச் சென்ற வாகனம் அவள் மீது மோதுகிறது. அதில் சந்தியாவின் கணவர் ரகு (ஸ்ரீகாந்த்) அவளைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கிறார். விபத்தில் தலையில் அடிபட்டதால் தன் நினைவை இழந்து தன் கணவனைக்கூட அடையாளம் காண முடியாமல் தவிக்கிறாள் சந்தியா.
க்ரைம் த்ரில்லர்: முதலில் கனது கணவனை நம்ப மறுக்கும் சந்தியா, பள்ளியில் படித்த காலத்திலிருந்தே நாம் காதலர்கள் என ரகு சொல்ல அதை நம்கிறார். ஆனால், பள்ளி ஆல்பத்தை பார்க்கும் சூழ்நிலை வர, அதில் தனது கணவர் ரகு இல்லை என்றும், உண்மையில் கணவரின் பெயர் விக்னேஷ் என்பதும் நினைவுக்கு வருகிறது. சந்தியாவிடம் கணவர் என்று ஸ்ரீகாந்த் ஏன் பொய் சொல்லிவைத்து இருந்தார் இதற்கு காரணம் என்ன என பல திகிலூட்டும் திருப்பங்களுடன் கதை நகர்கிறது.
அழகான நடிப்பு: ஸ்ரீகாந்தின் நடிப்பு சூப்பர்: ரோஜாக்கூட்டம், பார்த்திபன் கனவு, ஏப்ரல் மாதத்தில் என பல அட்டகாசமான படங்களில் நடித்து பெயர் எடுத்த ஸ்ரீகாந்திற்கு கடந்த சில ஆண்டுகளாகவே ஒரு ஹிட் படத்தை கொடுக்க முடியாமல் போராடி வருகிறார். ஆனால், சத்தம் இன்றி முத்தம் தா படத்தில் ஸ்ரீகாந்த் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறார். அதே போல கதாநாயகியாக நடித்த பிரியங்கா திமேஷ் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து அழகாக நடித்துள்ளார்.
படம் சுமாரா சூப்பரா: ஜூபின் இசை படத்திற்கு பிளஸ் என்று சொல்லும் அளவிற்கு உள்ளது என்று சொல்லலாம், குறிப்பாக இந்த படத்தில் ஆண்ட்ரியா பாடிய செம்பரம்பாக்கம் பாடல் ஹூம் சொல்றியா மாமா ஹூம் ஹூம் சொல்றியா பாடல் போல ரசிகர்களை தியேட்டரில் ஆட்டம் போட வைத்துள்ளது. சத்தம் இன்றி முத்தம் தா திரைப்படம் பரபரப்பான த்ரில்லர் திரைப்படமாக கொடுக்க இயக்குநர் பல முயற்சிகளை மேற்கொண்ட போதும், படத்தில் எதிர்பார்த்த அளவிற்கு த்ரில்லிங் இல்லாததால், படம் சுமாராகவே இருக்கு என்று படம் பார்த்தவர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











