Nitishastra Review: அக்கா தம்பிக்குள் நடக்ககூடாத விபரீதம்.. நித்திசாஸ்திர பட விமர்சனம்!
\சென்னை: கபில் வர்மா இயக்கத்தில் டாப்ஸி பன்னு, விக்கி அரோரா, சுகன்யா தண்டா, ஐஸ்வர்யா சோனார் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்த ஒரு குறும்படம் தான் நித்திசாஸ்திர. இதற்கு, எதிக்ஸ் என்று அர்த்தம். இந்த படத்தின் கதை ஆரம்பிக்கும் போதே படத்தின் ஹீரோயின் டாப்ஸி, ஒருவருடன் கடுமையாக சண்டை போட்டுக்கொண்டு இருக்கிறார். அந்த சண்டைக்கான காரணம் என்ன..அந்த சண்டை ஏன் நடக்கிறது என்பதை நோக்கி கதை நகர்கிறது.
இந்த சண்டைக்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் டாப்ஸியின் அம்மா இறந்து கிடக்கிறார்கள். அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பலர் வந்து கொண்டு இருக்க, இறுதி சடங்குக்கான ஏற்பாடுகள் நடக்கிறது. அப்போது உறவினர்கள், உன் தம்பி எப்போது வருவான் என்று கேட்க அவன் வரமாட்டான், நானே எல்லாத்தையும் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, தம்பி கௌதம், இறந்து கிடக்கும் அம்மாவை பார்த்து கதறி அழுகிறான். பல ஆண்டுகளாக வீட்டுக்க வராத இவன் தற்போது, இந்த செய்தி கேள்விப்பட்டு வீட்டுக்கு வந்து இருக்கிறான்.

அடித்து உதைக்கும் டாப்ஸி: அம்மாவின் சடலத்தை பார்த்து கதறி அழுத கௌதமை டாப்ஸி ஒரு கட்டையை வைத்து கடுமையாக அடிக்கிறாள். இப்படி அடிப்பதற்கு காரணம் என்ன என்பதை கௌதம் நினைத்து பார்க்கிறான். கடந்த சில வருடத்திற்கு முன் டாப்ஸி குங்கஃபூ மாஸ்டராக இருக்கிறாள். அவள் பலருக்கு சண்டை பயிற்சி கற்றுக்கொடுத்து கொண்டு இருக்கிறார். இந்த வகுப்பில் மைதிலி என்ற பெண் உட்பட பல பெண்களுக்கும் பயிற்சி கொடுத்து வருகிறாள் டாப்ஸி. இதில் மைதிலியை, தம்பி கௌதம் காதலித்து வருகிறான். இந்த விஷயம் தெரிந்தும் டாப்ஸி கண்டும் காணாமல் இருக்கிறாள்.

கற்பழித்து கொலை: அப்போது ஒரு நாள், மைதிலி கிளம்புவதற்கு தாமதமாகிவிட, டாப்ஸி தனது தம்பி கௌதமை வீட்டில் டிராப் செய்துவிடும்படி சொல்லிவிட்டு படுக்க சென்றுவிடுகிறாள். மறுநாள் காலை, மைதிலி கொடூரமான முறையில் கற்பழித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக செய்தி வர, அதைக்கேட்டு டாப்ஸி அதிர்ச்சி அடைகிறாள். உடனே, அழைத்துப்போன தம்பிக்கு என்ன ஆச்சு என்று பயந்து போய், தம்பிக்கு போன் செய்கிறாள். ஆனால், அவனது போன், ஸ்விட்ச் ஆப் என்று வர, போலீசில் புகார் கொடுக்க செல்லும் போது, தம்பி கௌதமிடம் இருந்து அழைப்பு வருகிறது.

தம்பி செய்த வேலை: அதில், கௌதம், அக்கா நான் மிகப்பெரிய தப்பு செய்துவிட்டேன், நானும் என் நண்பர்களும் தான், அந்த பெண்னை ரேப் செய்தோம். அதில் அவள் இறந்துவிட்டாள். நீ போலீசில், என் தம்பி தான் வீட்டுக்கு அழைத்து சென்றான் என்று சொன்னால் நான் மாட்டிக்கொள்வேன். அதனால், அதை நீ சொல்லிவிடாதே என்று சொல்கிறான். இதைக்கேட்டு, அதிர்ச்சி அடைந்த டாப்ஸி, குழந்தை என்று நினைத்துக்கொண்டு இருந்த தம்பியா இப்படி ஓரு காரியத்தை செய்துவிட்டானே என்று கதறி அழுகிறாள். பின், தன் தம்பியும் அவனது நண்பர்களும் தான், இந்த மோசமான வேலையை செய்ததாக போலீசில் சொல்கிறாள். இதையடுத்து போலீசார் கௌதமை தேட அவன், தலைமறைவாகி, பல தில்லு முல்லு வேலைகளை செய்து டான் ஆகிவிட்டதால், அவனை பல ஆண்டுகளாக போலீசாரால் கண்டுபிடிக்கவே முடிவில்லை.

தற்போது அம்மா இறந்துவிட்டதால் விஷயம் கேள்விபட்டு வந்த கௌதமை அடி அடி என கொடூரமாக அடித்து கொன்று விடுகிறாள். கூட பிறந்த தம்பியாக இருந்தாலும், ஒரு பெண் மேல கை வெச்சா இதுதான்டா முடிவு என்று சொல்லி அவன் கதையை முடிக்கிறாங்க டாப்ஸி. விறுவிறுப்பான இந்த குறும்படத்தை அமேசான் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











