ஆண்மையில்லாத கணவனின் சைக்கோ புத்தி.. அடுத்தடுத்து நடக்கும் ட்விஸ்ட்.. லெவல் கிராஸ் விமர்சனம்!
சென்னை: அமலா பால், ஆசிப் அலியின் வித்தியாசமான நடிப்பில் ஜூலை மாதம் தியேட்டரில் வெளியானத் திரைப்படம் தான் இந்த லெவல் கிராஸ். மலையாள திரைப்படமான இந்த படத்தை அறிமுக இயக்குநர் அர்பாஸ் அயூப் இயக்கி உள்ளார். மலையாள திரைப்படத்திற்கு உரிய சஸ்பென்ஸ்ட், திகில் என அடுத்தடுத்து ட்விஸ்ட்டுகள் நிறைந்த இந்த படத்தின் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம்.
படத்தின் கதை தொடங்கும் போதே ஆள்நடமாட்டமே இல்லாத ஒரு பாலைவனத்தின் லெவல் கிராஸில் இருந்த டைட்டில் கார்டு போடப்பட்டு படம் ஆரம்பமாகிறது. இந்த லெவல் கிராஸில் ரகு(ஆசிப் அலி) என்பவர் வேலை செய்து கொண்டே வாழ்ந்து வருகிறார். அவருடைய வேலை, லெவல் கிராஸிங்கிற்கு வரும் ரயிலுக்கு சிக்னல் கொடுப்பது தான். இப்படி ஒரு நாள் சிக்னல் கொடுத்துக்கொண்டு இருக்க, அந்த ரயிலில் இருந்த ஒரு பெண் வெளியில் குதித்து விடுகிறாள்.

லெவல் கிராஸ் விமர்சனம்: இதைப்பார்த்து பதறிப்போன ரகு அந்த பெண்னை காப்பாற்றி அருகில் இருக்கும் தனது குடிசையில் படுக்க வைக்கிறான். மயக்கம் தெளிந்து எழுந்த அந்த பெண், தன் பெயர் சைதாலி (அமலா பால்) என்றும் என் கணவர் ஒரு மனநோயாளி என்றும், கொடூரமான சைக்கோ, என்னை வீட்டில் அடைத்துவைத்து கொடுமைப்படுத்தினான். வேலை விஷயமாக ஊருக்கு செல்லவேண்டியது இருந்ததால், என்னையும் ரயிலில் அழைத்து வந்தான். அவன் அசத்த நேரமாக பார்த்து நான் ரயிலிருந்து குதித்து தப்பித்துவிட்டேன். தயவு செய்து என்னை இங்கு இருந்து அனுப்பிவிடாதீர்கள் என்று அமலா பால் கெஞ்ச, ரகுவும் தனக்கும் சொந்தம் என்று யாரும் இல்லை, இனி இருக்கும் காலத்தை இவளோடு வாழ்த்துவிடலாம் என்று முடிவு செய்கிறார்.
கொடூரகொலை காரன்: இதையடுத்து, இருவரும் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக இருக்க, அமலா பால் வீட்டை சுத்தம் செய்யும் போது, அங்கிருந்த ஒரு பெட்டியை திறந்து பார்க்க அந்த பெட்டியில் இருந்த ஐடி கார்டில் ரகு என்ற பெயரில் வேறு ஒருவரின் போட்டோ இருக்கிறது. அது மட்டுமில்லாமல், நான்கு பேர் எரித்து கொலை செய்த கொலைகாரனை காணவில்லை என்கிற பேப்பர் கட்டிங்கும் இருக்கிறது. இதைப்பார்த்து பயந்து போன அமலா பால், ரகு என்ற பெயரில் இருக்கும் இவன் அந்த நான்கு பேரை கொலை செய்த கொடூரன் இவன் தான் என்பது தெரிந்த தப்பித்து போக முயற்சி செய்ய அந்த நேரத்தில் அங்கு வரும் ரகு ஐடி கார்டு கீழே இருப்பதை பார்த்துவிடுகிறான்.
ஆண்மையே இல்லை: பயத்தோடு இருக்கும் அமலைப்பாலை பார்த்து, உனக்கு எல்லா விஷயமும் தெரிந்து விட்டதாக என்று கேட்டுவிட்டு, தன் வாழ்க்கையில் நடந்த விஷயத்தை சொல்லுகிறான். அதில், அழகான மனைவி இரண்டு குழந்தைகள் என்று வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டு இருந்தது. அப்போது எனக்கு விவசாயத்தில் மொத்த பணமும் போய்விட்டதால், குடும்பத்தை நடத்துவதே கஷ்டமாக இருந்தது. இந்த நேரத்தில் தான் மூன்றாவது ஒரு குழந்தை வேண்டாம் என முடிவு செய்து, கருத்தடை ஆப்ரேஷன் செய்ய சென்ற போது மருத்துவர் ஒரு அதிர்ச்சியான தகவலை சொன்னார். அதாவது உனக்கு ஆப்ரேஷனே தேவையில்லை. ஏன் என்றால் உனக்கு ஆண்மையே இல்லை என்றார்.
துரோகம் செய்த மனைவி: இதை கேட்டு குழப்பத்துடன் வீட்டுக்கு சென்றேன் அப்போது தான் படுக்கை அறையில் என் மனைவி வேறு ஒருவருடன் உடல் உறவுவைத்துக்கொண்டு இருந்தால். இதனால், ஆத்திரம் தாங்காமல் என் மனைவி, அவளின் கள்ள காதலன், இரண்டு குழந்தைகளை கொளுத்திவிட்டு இங்கே ஓடிவந்துவிட்டேன். என் நண்பனுடன் இங்கேயே இருந்தேன். ஒரு நாள் அவன் இறந்துவிட வயிற்று பொழப்பிற்காக இந்த வேலையை செய்து கொண்டு இங்கே இருக்கேன் என்று சொல்லி கதறி அழுகிறான். இதனால், அமலா பால் அவனை மன்னித்துவிட்டு இனி இருவரும் சேர்ந்து வாழலாம் என்று முடிவு செய்கின்றனர்,

சைக்கோ: இந்த நேரத்தில் அமலா பாலின் கணவர் (ஷராபுதீன்) அவரை தேடி வர, ரகு அங்கே யாரும் இல்லை என்று சொல்லி அனுப்ப, அங்கு இருந்த அமலா பாலின் உடையை பார்த்துவிட்டு இது என் மனைவியின் உடை, அவள் எங்கே நீங்க நினைக்கிற மாதிரி அவள் நல்லவள் இல்லை, அவள் ஒரு சைக்கோ, மனநோயாளி, கொலைகாரி என்ற சொல்ல ரகு ஒரு நிமிடம் திகைத்து போகிறான். அங்கு இருக்கும் அமலா பால், இவன் சொல்லுவதை நம்பேதே ரகு, இவன் தான் சைக்கோ, கொலைகாரன் என்று இருவரும் மாறி மாறி சொல்லிக்கொள்கின்றனர்.
போட்டுத்தள்ளி அமலா பால்: இதையடுத்து ஷராபுதீன் அமலா பாலை இழுத்துக்கொண்டு கிளம்ப, அந்த நேரம் ஒரு இரும்பு கம்பியால் அவரின் தலையில் அடித்து கொன்றுவிடுகிறான் ரகு. பின் அருகில் இருந்த பர்சை எடுத்து பார்த்த போது அதில், அமலா பாலின் பெயரில் மருந்து சீட்டு இருக்கிறது. அவரது கணவர் சொன்னது போல அமலாபால் தான் உண்மையான சைக்கோ என தெரிந்து திரும்பி பார்க்க அமலா பால், ரகுவை அதே கம்பியால் போட்டுத்தள்ளி விடுகிறாள். இதன் பிறகும் ஒரு சூப்பர் ட்விஸ்ட் இருக்கு அதை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் இந்த திரைப்படம் ஆஹா மற்றும் அமேசான் பிரைம் வீடியோவில் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











