அமலாபால் நடித்த விவகாரமான வெப் சிரீஸ் விமர்சனம்.. இப்படியெல்லாம் கூடவா நடிச்சு இருக்காங்க?
சென்னை: கோலிவுட் சினிமாவில் சர்ச்சை நாயகி என பெயர் எடுத்த அமலா பால். திருமணம் , விவாகரத்து என்று கொஞ்ச நாள் தமிழ் சினிமாவில் தென்படவே இல்ல. ஆனால், அம்மணியோ மலையாளம், இந்தி என கமுக்கமாக பல விவகாரமான படத்தில் நடித்துள்ளார். அப்படி அமலா பால் நடித்த ஒரு வெப் சிரீஸ் கதையை விரிவாக இந்த செய்தியில் பார்க்கலாம்.
புஷ்தீப் பரத்வாஜ் இயக்கத்தில் தாஹிர் ராஜ் பாசின், அமலா பால், அம்ரிதா பூரி, ஜரீனா வஹாப் ஆகியோர் நடிப்பில் Voot ஓடிடி தளத்தில் வெளியான வெப் தொடர் தான் இந்த Ranjish Hi Sahi. இந்த சீரிசில் அமலா பால் ஒரு புகழ் பெற்ற கவர்ச்சி நடிகையாக அமலா பர்வீஸ் என்கிற ரோலில் நடித்துள்ளார். அதாவது சில்க் ஸ்மிதா எப்படி கவர்ச்சியாக நடித்து புகழின் உச்சியில் இருந்தாரோ அந்த மாதிரி ஒரு நடிகை. இவரின் அழகில் மயங்கிய பல தயாரிப்பாளர்கள் இயக்குநர்கள் பலரும் அமலா பர்வீசை அடைய நினைக்கின்றனர். இவரும் பலருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தாலும் தற்போது ஒரு தயாரிப்பாளருடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார் கதை ஆரம்பத்தில் இப்படித்தான் செல்கிறது.

Ranjish Hi Sahi web series: இந்த நேரத்தில் தான் தயாரிப்பாளர் அமலாபாலை கழட்டிவிட்டு, வேறு ஒரு நடிகையுடன் தொடர்பில் இருப்பது தெரியவருகிறது. இதையடுத்து, அமலாபால், அந்த தயாரிப்பாளரிடம் என்னைவிட்டு போகாதே என்று, நடுரோட்டில் கதறி அழுகிறார். எவ்வளவு தான் அமலாபால் அழுதாலும் சமாதானம் ஆகாத அந்த தயாரிப்பாளர் அமலாபாலை கைகழுவி விடுகிறார். இதனால், வேதனையின் உச்சத்தில் இருக்கும் அமலா பால், மது போதைக்கு அடிமையாகி எப்போதும் மதுவுடனே இருக்கிறார். போதையில் இருப்பதால், பட வாய்ப்பும் வராமல் போய்விடுகிறது.
மூன்றாவது காதல்: இந்த நேரத்தில் தான் சங்கர் என்பவரின் அறிமுகம் அமலா பாலுக்கு கிடைக்கிறது. சங்கர் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்கு திருமணமாகி மனைவி குழந்தைகள் இருக்கும் போதும், சினிமாவில் இயக்குநர் ஆக வேண்டும் என்ற ஆசையில் மும்பையில் தெருத்தெருவாக சுற்றி வருகிறார். அப்படி ஒரு நாளில் தான் சங்கருக்கு அமலா பாலின் அறிமுகம் கிடைக்கிறது. அவரிடன் கதையை கேட்ட அமலா பால், கதையில் ஒன்றும் புதுசாக இல்லை எல்லாமே ஏற்கனவே படத்தில் பார்த்தது போல இருக்கு, புதுசா நல்ல கதையோசி படம் எடுக்கலாம் என்கிறார். படம் குறித்தும் கதை குறித்தும் அடிக்கடி அமலாவும் சங்கரும் சந்தித்துக் கொள்ள அமலா பால் சங்கரை காதலிக்க ஆரம்பிக்கிறார்.
தற்கொலை முயற்சி: ஒரு கட்டத்தில் அமலா பால், சங்கரிடம் காதலை சொல்ல, சங்கரும் தன்னை மறந்து அன்று இரவு அவருடன் இருந்து விடுகிறான். மறுநாள் எனக்கு கல்யாணம் ஆகிவிட்டது மனைவி இருக்கும் போது என்னால் அவளுக்கு துரோகம் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டு, இனிமேல் நாம் சந்திக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி, வேறு ஒரு இயக்குநரிடம் கதையை சொல்லி படத்தை எடுக்க ஆரம்பிக்க, இந்த விஷயம் தெரிந்த அமலா பால், தன் கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்கிறாள். அப்போது தான் மருத்துவர் அமலா பால் ஒரு மனநோயாளி, அவங்க நினைச்சது கிடைக்கவில்லை என்றால் நிச்சயம் தற்கொலை செய்து கொள்வார்கள் என்று சொல்ல, ஷங்கர் தனது மனைவியை விட்டு விட்டு அமலா பாலுடன் குடும்பம் நடத்துகிறான். இதனால், குடும்பமே நிலை குலைந்து போகிறது.

உச்சகட்டகவர்ச்சி: கடைசியில் கல்யாணம் பண்ணிக்கோ என்று சங்கரை அமலாபால், கட்டாயப்படுத்த, மனைவியிடம் விவாகரத்து பெற்று திருமணம் செய்து கொள்வது போல ஒரு நாடகமாடி, திருமணம் நடந்துவிட்டதாக ஆழ் மனதில் பதியவைத்துவிட்டு, அந்தவீட்டில் இருந்து வெளியேறி மனைவியிடம், அமலாபாலின் நோய் குறித்து சொல்லி மன்னிப்பு கேட்டு தனது குடும்பத்துடன் சேர்ந்து விடுகிறான். இதையடுத்து, தனது சொந்த வாழ்க்கையில் நடந்த கதையை திரைப்படமாக எடுத்து வெற்றி பெறுகிறார் சங்கர். இதையடுத்து, படத்தின் வெற்றி விழா நடந்து கொண்டு இருக்கும் போது, அமலா பால் இறந்துவிட்டதாக தகவல் வர, அந்த விழாவை நிறுத்திவிட்டு, அமலாபால் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, இறுதிசடங்குகளை செய்கிறார் சங்கர்.
அந்த படத்தில் அமலா பால் தமிழ் படத்தில் காட்டாத அளவிற்கு மீறி கவர்ச்சி, படுக்கை அறை காட்சி,முத்தக்காட்சி என தாராள கவர்ச்சிகாட்டி நடித்துள்ளார். 8 எபிசோடுகள் கொண்ட இந்த வெப் தொடரின் தமிழ் டப்பிங் அமேசான் ஓடிடி தளத்தில் உள்ளது.


Click it and Unblock the Notifications











