99/66 Review: பேயாட்டம் ஆடிய ரச்சித்தா மகாலட்சுமி.. 99/66 படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!
சென்னை: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர் தான் ரச்சித்தா மகாலட்சுமி. இந்த சீரியலைத் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வந்த ரச்சித்தா, தற்போது அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ஃபயர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இவரின் கதாபாத்திரம் அனைவராலும் பேசப்பட்டது
நடிகை ரச்சித்தா மகாலட்சுமி: தற்போது ரச்சித்தா மகாலட்சுமி நடித்திருக்கும் திரைப்படம் தான் '99/66'. இந்த திரைப்படத்தை மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரித்துள்ளது. எம்.எஸ்.மூர்த்தி கதை, திரைக்கதை எழுதி இயக்கி உள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக ரச்சித்தா மகாலட்சுமி, ஸ்வேதா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், பவன் கிருஷ்ணன், கே.ஆர்.விஜயா, கே.எஸ். வெங்கடேஷ், குமாரி கனிஷ்கா, ஸ்ரீலேகா, சிங்கம் புலி, புஜ்ஜி பாபு, சாம்ஸ், அம்பானி சங்கர், முல்லை கோதண்டம் என பலர் நடித்துள்ளனர்.

படத்தின் கதை: வெள்ளிக்கிழமை வெளியான 99/66 படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம். இப்படத்தில் ரச்சித்தா மகாலட்சுமி சங்கீதா என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரச்சித்தா மற்றும் அவரது கணவர் சபரி இருவரும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் புதிதாக குடியேறுகின்றனர். அந்த வீட்டின் கதவு எண் 66. அதே குடியிருப்பில் 99 எண் வீட்டில் வசிக்கும் ஸ்வேதா என்பவருடன் ரச்சித்தாவிற்கு நல்ல நட்பு ஏற்படுகிறது. இருவரும் அடிக்கடி சந்தித்து பேசிக் கொள்கின்றனர்.
கணவன் செய்யும் சதி: இந்த நிலையில் தான் ரச்சித்தாவின் கணவர், அவரை கொலை செய்வதற்காக ஒரு திட்டத்தை போடுகிறார். ஆனால், அதில் இருந்து அவர் தப்பித்துவிடுகிறார். இப்படி ரச்சித்தாவை கொல்ல பல முயற்சிகள் செய்தும் அவரை கொலை செய்ய முடியவில்லை. இந்த நேரத்தில், தன்னுடைய தோழி ஸ்வேதாவை அவரது கணவர் கொலை செய்ய முயற்சிப்பதை ரச்சித்தா பார்த்து விடுகிறார். தோழியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்கிற பதற்றத்தில் அங்கிருக்கும் மற்ற குடியிருப்புவாசிகளிடம் உதவி கேட்கிறார். ஆனால், 99 கதவு எண் கொண்ட வீட்டில் யாரும் இல்லை என்பதும், ஸ்வேதா ஏற்கனவே இறந்துவிட்டார் என்கிற விஷயம் ரச்சிதாவிற்கு தெரிய வருகிறது.
நடிப்பு அரக்கி: ஏற்கனவே ஸ்வேதா இறந்த நிலையில், ரச்சித்தாவின் கண்ணுக்கு மட்டும் அவர் தெரிவது எப்படி? ரச்சித்தமாவை அவரது கணவர் ஏன் கொல்ல நினைக்கிறார்? இப்படி பலவிதமான கேள்விகளுடன் '99/66' படத்தின் கதை நகர்கிறது. இந்த படத்தில் ரச்சித்தா வழக்கம் போல தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். அன்பான மனைவியாக, ஆவியாக என அனைத்து காட்சிகளிலும் ரச்சித்தா ஸ்கோர் செய்திருக்கிறார். இந்த படத்தை பார்த்த ரச்சித்தாவின் ரசிகர்கள் நடிப்பு அரக்கி என்ற பட்டத்தை ரச்சித்தாவிற்கு தரலாம் என அவரை புகழ்ந்து வருகின்றனர். அதேபோல படத்தின் ஹீரோவாக நடித்திருந்த சபரி மற்றும் ரோகித் இருவரும் அவர்களின் கதாபாத்திரத்தை உணர்ந்து அழகாக நடித்துள்ளனர்.
நல்ல படம்: பெண்களுக்கு எதிராக குற்றங்கள் மற்றும் குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை கொடுக்க வேண்டும் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் படத்தின் இயக்குனர். படத்தின் ஒளிப்பதிவு, இசை என அனைத்தும் ரசிக்கும்படி இருக்கிறது. இந்த திரைப்படம் நடிகை ரச்சித்தாவிற்கு நிச்சயமாக ஒரு பெயர் சொல்லும் திரைப்படமாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.


Click it and Unblock the Notifications











