Brinda Series Review: எபிசோடுக்கு எபிசோடு ட்விஸ்ட்.. திகிலூட்டும் பிருந்தா விமர்சனம்!

Rating:
3.0/5

நடிகர்கள்: பிருந்தா. த்ரிஷா, இந்திரஜித் சுகுமாறன், ரவீந்திர விஜய்,

இசை: சக்தி காந்த் கார்த்திக்

இயக்குனர்: சூர்யா மனோஜ் வாங்கலா

சென்னை: சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கி இருக்கும் நடிகை த்ரிஷா, முதன் முதலாக இணையத் தொடரில் நடித்துள்ளார். பிருந்தா என பெயரிடப்பட்ட இந்த தொடரில், நடிப்பு : த்ரிஷா கிருஷ்ணன், இந்திரஜித் சுகுமாரன், ஜெய பிரகாஷ், ஆமணி, ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி, ராகேந்து மௌலி மற்றும் பலர் நடித்துள்ளனர். சூர்யா மனோஜ் வாங்கலா இயக்கி உள்ள இந்த வெப் தொடருக்கு சக்தி காந்த் கார்த்திக் இசை அமைத்துள்ளார். ஓடிடித் தளமான Sony LIV வெளியாகி உள்ள இந்த வெப் தொடரின் விமர்சனத்தை பார்க்கலாம்.

Trisha  Brinda web series  Review

கதை: ஹைதராபாத்தில் ஒரு கூர்மையான போலீஸ் அதிகாரியாக பிருந்தா (த்ரிஷா கிருஷ்ணன்) இருக்கிறார். ரோட்டில் அனாதையாக இருந்த பிருந்தாவை ஜெயபிரகாஷ் எடுத்து வளர்த்து வருகிறார். அவர் சமீபத்தில் இறந்துவிட ஒருவிதமான மன அழுத்தத்தில் இருக்கிறார் பிருந்தா. இந்த நேரத்தில், அந்த கிராமத்தில் ஒரு உடல் கிடைக்கிறது. இது தற்கொலை என போலீஸ் ஸ்டேஷனில் கேஸ் முடிக்கப்படுகிறது. ஆனால், பிருந்தாவின் உள்ளுணர்வு இது தற்கொலை இல்லை என்று சொல்ல. அந்த உள்ளுணர்வை நம்பி, அவள் தோண்டி தோண்டி விசாரிக்க அது ஒரு கொலை என்பது தெரிய வருகிறது.

த்ரிஷாவின் ஆட்டம்: இதுகுறித்து உயர் அதிகாரியிடம் அவள் சொல்ல , அதை காதில் வாங்கிக் கொள்ளாத நிலையில், அதே போன்று அடுத்தடுத்து கொலைகள் நடக்க, இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளியை தேடும் பணி த்ரிஷாவிடம் ஒப்படைக்கப்படுகிறது. இந்த தொடர் கொலை குறித்து பிருந்தா ஆழமாக ஆராயும்போது, ​​ கொலைக்கான காரணம், கொலையாளியின் நோக்கம் என, பல உண்மைகள் உடைகின்றன. இந்த கொலைகளுக்கு பின்னணியில் இருப்பது யார்? இந்த வழக்கில் பிருந்தா ஏன் இவ்வளவு ஆழமாக கவனம் செலுத்த காரணம் என்ன? என பல கேள்விகளோடு பிருந்தா தொடர் விறுவிறுப்பாக நகர்கிறது.

பிளஸ்: நடிகை த்ரிஷா முதன் முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த தொடரில் வரும் பிருந்தா கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல, அமைதியான, நேர்மையான, புத்திசாலியான ரோலில் முத்திரை பதித்துள்ளார். அதே போல, ரவீந்திர விஜய்யும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார். குறிப்பாக ஆனந்த் சாமியின் நடிப்பு பிரமிக்க வைக்கிறது. அவரது சித்தரிப்பு அழுத்தமானது, அவரது வெளிப்பாடுகள் தொடருக்கு பலமாக அமைந்துள்ளது எனலாம்.

Trisha  Brinda web series  Review

சுவராசியமான எபிசோட்: 8 எபிசோடுகள் கொண்ட இந்த தொடரில் ஒவ்வொரு எபிசோடும் முக்கால் மணி நேரமாக உள்ளது. இதில் முதல் நான்கு எபிசோடுகள் பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் விறுவிறுப்பாக இருந்தன. ஒவ்வொரு எபிசோடின் முடிவிலும் ஒவ்வொரு சஸ்பென்சை வைத்து திரைக்கதையை அழகாக வடிவமைத்து ஸ்கோர் செய்துள்ளார் இயக்குநர். பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலமாக இருந்தது எனலாம்.

Trisha  Brinda web series  Review

மைனஸ்: இந்த தொடரில் வன்முறை காட்சிகள், ரத்தம் போன்றவை அப்பட்டமாக காட்டப்பட்டுள்ளதால், குழந்தைகள் இதைப்பார்க்கும் வகையில் இல்லை. அதுமட்டுமில்லாமல், பெரும்பாலான எபிசோட்கள் விறுவிறுப்பாக சென்றாலும், சில எபிசோடுகள் ஆமை வேகத்தில் சென்றன. தேவையில்லாத காட்சிகளை தவிர்த்துவிட்டு கதையை சுருக்கி சொல்லி இருக்கலாம்.

மொத்தத்தில், பிருந்தா அனைவரையும் கவரும், க்ரைம் த்ரில்லரான வெப் தொடராகும், இயக்குனர் சூர்யா மனோஜ் வாங்கலா ஒரு சிலிர்ப்பான அனுபவத்தை கொடுத்து இருக்கிறார். சோனி லிவ்வில் வெளியாகி உள்ள இந்த தொடரை பார்த்து இந்த வார வீக் எண்டை கொண்டாடுங்கள்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X