twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விக்ரம் மகனின் விவகாரமான காதல் கர்ப்பமான காதலியுடன் சேருவாரா ?

    |

    Recommended Video

    Adithya Varma Public Review | Dhruv Vikram | Vikam | Adithya Varma Movie Review

    Rating:
    3.0/5
    Star Cast: துருவ் விக்ரம் ,பனிதா சந்து ,ப்ரியா ஆனந்த்,அன்புதாஸன்
    Director: கிரீசாய

    சென்னை:நடிகர் சீயான் விக்ரமின் மகன் துருவ்வின் முதல் படம் எப்படி இருக்கிறது ,தன் தந்தை அளவுக்கு நடித்திருக்கிறாரா ,சினிமாவில் தனக்கென இடத்தை பிடிப்பாரா என்ற கேள்விகளுடனும் ஆச்சரியத்துடனுமே படத்தை பாரக்க பலரும் தியேட்டர் நோக்கி வந்தார்கள் . ஒருபக்கம் விக்ரம் மகன் என்ற ப்ரமோஷன் இன்னொரு பக்கம் அர்ஜுன் ரெட்டி என்ற தெலுங்கு வெற்றி படத்தின் ரீமேக் .

    ஆதித்யா வர்மா படத்தில் துருவ் விக்ரம் ,பனிதா சந்து ,ப்ரியா ஆனந்த்,அன்புதாஸன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர் .படத்தை இ4 எண்டர்டெயிண்மன்ட் நிறுவனம் தயாரித்துள்ளது . ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.படத்திற்கு இசையமைத்துள்ளார் ரதன்.

    adithya varma is the 1st bang of actor Dhruv

    நமக்கெல்லாம் இது தெரிந்தது தான் தெழுங்கில் மாபெரும் வெற்றி அடைந்த அர்ஜுன் ரெட்டி படம் தமிழில் சீயான் விக்ரம் மகன் துருவ்வை வைத்து வர்மா என்ற பெயரில் பாலா இயக்கத்தில் தயாரிக்கபட்டது . அந்த படம் தயாரிப்பு நிறுவனத்தால் ரத்து செய்ய பட்டு கீரிஸய்யாவை வைத்து ஆதித்யா வர்மா என்று எடுக்கபட்டிருக்கிறது .

    இதையடுத்து படத்தின் கதை ஏறத்தாழ எல்லாருக்கும் தெரிந்த ஒன்று தான் .இங்கு திரையரங்குக்கு வந்திருப்பதே பலர் துருவ்காக தான் .படத்தில் தனது முழு நடிப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார் துருவ் விக்ரம் . அதை தாண்டி இரண்டு முறை ஒரே கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் ,வர்மா படத்தின் முன்னோட்டத்தில் பார்த்ததை விடவும் நடிப்பில் 10மடங்கு தேர்ச்சி பெற்றிருக்கிறார் ஆதித்யா வர்மா படத்தில்.

    adithya varma is the 1st bang of actor Dhruv

    காதல் காமம் ஊடல் கூடல் என்ற அத்தனை விசயங்களிலும் பட்டய கிளப்பியிருக்கிறார். அறிமுகம் துருவ் விக்ரம் என்ற டைட்டில் கார்டு வரும் போதே அவ்வளவு ஆரவாரம். முதல் படத்திலேயே இவ்வளவு ஆர்பரிப்பும் பிரம்மாண்டமும் கிடைத்தது அப்பாவின் ரசிகர்கள் செய்யும் ஆசிர்வாதம். அறிமுக காட்சியிலேயே ஒரு பெண்ணிடம் கட்டிப்பிடித்து சில்மிஷம் செய்து தன் பெண் ரசிகர்களை குறிப்பாக அட்ராக்ட் பண்ணுகிறார்.

    adithya varma is the 1st bang of actor Dhruv

    கதைப்படி அரகெண்டான ஆளு , அடாவடியா எதையும் செய்யும் துணிச்சல், திமிராக பேசி உரிமையுடன் வாதாடும் வசனங்கள் என்று ஆதித்ய வர்மாவின் கதாபாத்திரம் ஒவ்வொரு காட்சியையும் நகர்த்துகிறது .
    ஸ்மோக்கிங் காஸெஸ் கான்செர் , ஸ்மோக்கிங் கில்ஸ் , மது அருந்துதல் உடல் நலத்துக்கு கேடு என்று படம் முழுக்க போட பட்டு ஹீரோ குடித்து கொண்டே இருக்கிறார் . எத்தனை சிகரட் ஹீரோ படத்தில் குடித்தார், எத்தனை பாட்டில் ஓபன் செய்ய பட்டது என்ற காண்டெஸ்ட் நடத்தி மிக பெரிய புரட்சியே செய்யலாம் . அவ்வளவு வெறித்தனமான குடி. ஹீரோ தான் குடிக்கிறார் , தம் அடிக்கிறார் என்றால் படத்தில் வரும் நண்பன் , நண்பனின் நண்பன் , ஹீரோவுடைய அண்னன் , அப்பா, ஹீரோவுடைய வக்கீல் , சீனியர் ஜூனியர் என்று அனைவரும் சேர்ந்து தேட்டரை புகைமூட்டம் ஆக்கி விடுகிறார்கள்.

    பனிதா சந்து சைலண்டாக தன் கதாபாத்திரத்தை ஸ்டார்ட் செய்து வைலண்டாக மாறி காதல் சொட்ட சொட்ட முத்தங்களை வாரி வழங்கி இருக்கிறார். காதலை வெளிப்படுத்தும் விதம் வசனங்களை விட முத்தங்களில் வெளிப்படுத்தி யதார்த்தமாகவும் பதார்தமாகவும் நடித்து பெயர் எடுக்கிறார். செய்வதெல்லாம் செய்து விட்டு
    துருவிடம் உணர்ச்சி பொங்க ஒரு வசனம் சொல்லுகிறார் " பொண்ணுங்க வீட்டில் எப்புவுமே கொஞ்சம் ரெஸ்ட்ரிக்ஷன்ஸ் இருக்கும் , அது உனக்கு புரியாது " அந்த வசனம் மட்டும் கொஞ்சம் லாஜிக் இடிக்கிறது .

    adithya varma is the 1st bang of actor Dhruv

    படத்தில் மொத்தம் எத்தனை முத்தங்கள் என்ற தனி போட்டியை மீம் கிரீயேடர்ஸ் உருவாக்கி ட்ரெண்டிங் செய்ய துவங்கிவிட்டனர். ஆதித்யவர்மாவும் மீராவும் பேபி பேபி என்று கொஞ்சி கடைசியில் ஒரு அழகான பேபி உருவாக்குகிறார்கள். இந்த கதையை தான் பல பல பிளாஷ் பாக் காட்சிகளுடன் சுவாரஸ்ய படுத்துகிறார்கள்.

    அப்பாவாக நடித்த ராஜா ஒரு நல்ல கம்பாக் , பாரதிராஜா படங்களில் பார்த்த ராஜா இந்த படத்தில் பணக்கார அப்பாவாக வந்தாலும் எளிமையாகவும் ,மிக அருமையாகவும் பந்தா இல்லாமால் அலட்டி கொள்ளாமல் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து செயல் பட்டிருக்கிறார் . அண்ணனாக வரும் அஸ்வினுக்கு ஒரு சபாஷ் போடலாம் பல விளம்பரங்களில் நடித்த அஸ்வின் இந்த படத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பை கனகச்சிதமாக செய்து உள்ளார். அப்பா மகன் சண்டை போடும் பொழுது , குறிப்பாக ஹீரோ துருவ் தன் காதல் பற்றியும் , காதலியுடன் இருந்த பிரைவேட் ஸ்பெஸ் பற்றி பேசும் போதும் அந்த காட்சியை எடுத்த விதத்திலும் அனைவரும் கவனம் ஈர்கின்றனர் .

    adithya varma is the 1st bang of actor Dhruv

    படத்தில் மிக மொக்கையான விசயம் , ரொம்ப பழைய வசனம் என்றால் - ஹீரோயினுடைய அப்பா காதலை எதிர்ப்பதும் , கவுரவம் தான் முக்கியம் என்று வசனம் சொல்வதும் கொஞ்ச ஓல்ட் ட்ரெண்ட் .
    550 முறை உடலுறவு என்ற வசனத்தை வைத்த இயக்குனர் , எந்த நேரத்தில் எந்த தடவைஹீரோவும் ஹீரோயினும் பாதுகாப்பு இல்லாமல் உறவு வைத்து கொண்டார்கள் என்பது தான் கதையின் ட்விஸ்ட்.

    பாட்டியாக நடித்த லீலா சாம்சன் பாசத்தை பக்குவமாக காட்டி பக்காவாக மனதில் நிற்கிறார். (லவ் இஸ் பெயின், லெட் ஹிம் ஸபர் )என்ற வசனத்தை அவர்கள் சொல்லும் பொழுது கைதட்டல் வாங்குகிறார். ரவி கே சந்திரன் காமெராவில் அதிகம் கிராபிக்ஸ் காட்டாமல் உணர்ச்சிகளுக்கு ஏற்ப உன்னதமாக காமெராவை கையாண்ட விதம் பாராட்டத்தக்கது.

    adithya varma is the 1st bang of actor Dhruv

    இந்தியா முழுக்க நீட் எக்ஸாம்ஸ் பற்றியும் எம் பி பி எஸ் கனவுகள் பற்றியும் எத்தனை விவாதங்கள் நடந்து கொண்டு இருக்கிறது என்பது நாம் அனைவரும் அறிவோம். ஆனால் ஆதித்ய வர்மாவாக வரும் ஹீரோ படத்தில் சந்தோஷமாக குடித்து கும்மாளம் அடிப்பதும் , ஆங்காங்கே பேஷன்டுகளை பார்த்து துடிப்பதும் கொஞ்சம் ஓவர் டோஸ் . அதனுடைய டோஸேஜ் அளவை கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

    பெயரளவில் பிரியா ஆனந்த் சில காட்சிகள் வந்தாலும் , மிக முக்கியமான காட்சிகளாக தான் கருதப்படுகிறது. காலுக்கு கட்டு போட்ட டாக்டருடன் கால்கட்டு போட நினைக்கும் ஒரு நடிகையாக வந்து கவனத்தை திசை திருபியிருக்கிறார்.

    அன்புதாசன் நண்பனாக வந்தாலும் அளவுக்கு அதிகமாக நண்பன் மீது அன்பு காட்டுகிறார். தனது சினிமா கேரியரில் மிக முக்கியமான படம் அன்பு தாசனுக்கு, இன்னும் நிறைய நல்ல படங்கள் , வித்யாசமான கதாபாத்திரங்கள் தேடி வரும் என்பது நிதர்சனமான உண்மை.

    ரதன் இசையில் ஒவ்வொரு காட்சிக்கும் அவர் கொடுத்திருக்கும் பின்னணி இசை , மன அழுத்தத்தின் வலிமையை , வலியை எப்படி எல்லாம் இசை மூலம் சொல்லலாம் என்று அழகாக நிரூபித்து இருக்கிறார்.
    ஆதித்ய வர்மா படத்திற்கு இன்னொரு மிக பெரிய பலம் எடிட்டர் விவேக். நேர்த்தியாகவும் நேர்மையாகவும் எடிட் செய்திருக்கிறார்.

    தமிழ் சினிமாவில் எத்தனையோ காதல் கதைகள் நாம் பார்த்து இருக்கிறோம் . கலாச்சார ரீதியாக இப்போதெலாம் காதல் கதைகள் செய்தால் அது ஓடாது என்பதை நன்கு புரிந்து கொண்டு , இளமை துடிப்புடன் செய்யும் காதல் , அந்த வயதில் ஏற்படும் அபரிவிதமான காமம் , மூடி மறைக்காத திரைக்கதை அமைப்பு , என்று ஆதித்ய வர்மா தவழ்ந்து வந்தாலும் வெற்றியை தாவி பிடித்து விடுவார்கள் என்பது நிரூபணமாகி விட்டது .

    காதல், காதல் பிரிவு, தாடி, சோகம், இவை எல்லாம் பழசு என்றாலும் எத்தனை முறை வந்தாலும் சலிக்காது என்பதை நன்கு புரிந்து செயல்பட்டு இருக்கிறார்கள்.

    காலதாமதமாக ரீலீஸ் ஆனாலும் காலத்துக்கு ஏற்ப , இன்றைய இளைஞர்களை தேட்டருக்கு இழுக்கும் சக்தி ஆதித்ய வர்மாவுக்கு உண்டு.
    பல இடங்களில் துருவ் பாடி லாங்குவேஜ் தனது அப்பாவை ஞாபக படுத்துகிறது . குறிப்பாக கழுத்தை சாய்த்து தோலை உயர்த்துவது அப்படியா ஜூனியர் சியானாக தெரிகிறார்.

    அப்பாவை போலே தமிழ் சினிமாவில் மேலும் மேலும் வித்யாசமான கதாபாத்திரங்கள் செய்து பல கமற்சியல் வெற்றிகள் கொடுக்க வேண்டும் என்று வாழ்த்துவோம்.

    English summary
    As per the scenario Dhruv is a popular and familiar hero in the field of cinema as vikram son . But he has tried his best in performing too the core and apart from his stardom and fathers support he trained himself in various categories of art which is essential in making his carrier . The entire crew is very eager in the box office collections and they don't have big movie to be released as competition
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X