ஆதித்ய வர்மா பாஸா? ஃபெயிலா? என்ன சொல்லுது ட்விட்டர் விமர்சனம்!
Recommended Video
சென்னை: கிரிசாயா இயக்கத்தில் த்ருவ் விக்ரம், பானிடா சந்து, பிரியா ஆனந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஆதித்ய வர்மா இன்று திரைக்கு வந்துள்ளது.
தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி மற்றும் அதன் ஹிந்தி ரீமேக்கான கபீர் சிங் படங்கள் வெற்றியை பதிவு செய்த நிலையில், த்ருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ஆதித்ய வர்மா எப்படி இருக்கிறது என்பது குறித்து படத்தை பார்த்தவர்கள் ட்விட்டரில் கொடுத்திருக்கும் விமர்சனங்களை பார்க்கலாம்.
வேற லெவல் அவுட்புட்
சியான் விக்ரமின் நடிப்பை கண்டு அசந்து போகாதவர்களே இந்திய சினிமாவில் இருக்க மாட்டார்கள். புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்ன, ஆக்டிங்கில் வேற லெவல் அவுட்புட்டை த்ருவ் விக்ரம் தனது முதல் படத்திலே கொடுத்துள்ளார் என படத்தை பார்த்த மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கனவு கண்ணன்
ஆதித்ய வர்மா படம் ஒரு பக்காவான ரீமேக் படம் என்றும், கோலிவுட்டில் கனவு கண்ணனுக்கு இருந்த வெற்றிடத்தை ஆதித்ய வர்மா அசால்ட்டாக நிரப்பியுள்ளார் என்றும் இந்த நெட்டிசன் கருத்து தெரிவித்துள்ளார். த்ருவ் விக்ரமின் சார்மிங் பெர்ஃபார்மன்ஸ் மற்றும் கமாண்டிங்கான குரல் அவருடைய பலமாக அமைந்துள்ளதாம்.
ஸ்டார் இஸ் பார்ன்
விமர்சகர் ஸ்ரீதர் பிள்ளை, ஆதித்ய வர்மா ஒரு நேர்மையான ரீமேக் என்றும், தமிழில் சில மாறுதல்கள் மற்றும் க்ரிஸ்ப்பாக கொடுத்துள்ளனர் என்றும் கூறியுள்ளார். ஸ்டார் இஸ் பார்ன் என த்ருவ் விக்ரமின் நடிப்பு குறித்தும் பாராட்டியுள்ளார்.
முதல் படம் மாதிரி தெரியல
த்ருவ் விக்ரமின் நடிப்பு ஆதித்ய வர்மா படத்தில் அபாரமாக உள்ளதாக பார்ப்பவர்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர். இது அவருக்கு முதல் படம் மாதிரியே தெரியல, சியான் விக்ரமின் தயாரிப்பு ஆச்சே எப்படி வீண் போகும் என இந்த நெட்டிசன் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
அர்ஜுன் ரெட்டியோட சூப்பர்
விக்ரம் ரசிகர்கள் ஒரு இளமையான விக்ரமை பார்க்கப்போறாங்க, தெலுங்கில் வெளியான ஒரிஜினல் வெர்ஷனான அர்ஜுன் ரெட்டியை விட படம் தரமா இருக்கு, இப்போ வரைக்கும் படத்தின் தாக்கம் இருப்பதாக, இந்த ரசிகரும் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனத்தையே முன் வைத்துள்ளார்.
தல ரசிகர்கள் கிண்டல்
டிவி நிகழ்ச்சி ஒன்றிற்கு பேட்டி கொடுத்திருந்த த்ருவ் விக்ரம் தனக்கு நடிகர் விஜய் தான் பிடிக்கும் என ஓபனாக சொல்லியதில் இருந்து ஆதித்ய வர்மா படத்திற்கு அஜித் ரசிகர்கள் சிலர் நெகட்டிவ் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். அதிலும், இந்த ரசிகர், விஜய் ரசிகர் கமெண்டுக்கு இப்படியொரு பதில் கமெண்ட் கொடுத்துள்ளார்.
Watchable movie 👍#AdithyaVarmaFromToday— Tracker Ramya™ (@IamRamyaJR) November 22, 2019 '>
தாராளமா பார்க்கலாம்
த்ருவ் விக்ரமுக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்காலம் உள்ளதாகவும், நாயகி பனிடா சந்து சூப்பராக தனது கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்றும், பிரியா ஆனந்தின் சிறந்த கேமியோ ரோல் என்றும் இந்த ரசிகை பாராட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications