For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அட்வைஸ் பண்றத கொஞ்சம் சமுத்திரகனி குறைச்சிருக்கலாம்

  |

  Rating:
  3.0/5

  நடிகர்கள்: சமுத்திரகனி , தம்பிராமையா , அதுல்யா

  இசையமைப்பாளர் -ஜஸ்டீன் பிரபாகரன்

  இயக்குனர் : அன்பழகன்

  சென்னை: சாட்டை பட இயக்குனர் அன்பழகன்- சமுத்திரகனி கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் தான் அடுத்த சாட்டை .இந்த படம் சாட்டை படத்தோட தொடர்ச்சி கிடையாது ,இது அப்படியே வேறு கதையாகும் .இந்த படத்தில் சமுத்திரகனி ,தம்பி ராமையா,அதுல்யா ரவி,யுவன் ,ஶ்ரீராம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர் .படத்திற்க்கு ஜஸ்டீன் பிராபாகரன் இசையமைத்துள்ளார் .படத்தை சமுத்திரகனி மற்றும் டாக்டர் பிரபு திலக் இணைந்து தயாரித்துள்ளனர் .

  adutha sattai is next level advise from samudragani

  சமுத்திரகனி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வந்து பேசி அங்கு உள்ள மக்களின் அறியாமையை போக்கி நல்வழி நோக்கி அவர்களை மனதளவில் தாக்கி அழைத்து செல்வார் .
  அதற்கு பல காட்சிகள் இருக்கும் இந்த கதைதளத்திலே சமுத்திரகனி சாட்டை ,அப்பா ,தொண்டன் போன்ற படங்களில் நடித்து இருப்பார் .அந்த படங்கள் வெற்றியும் அடைந்தது ,தற்போது அதே போல் சமுத்திரகனியை மையமாக வைத்து அதே கதைத்தளத்தில் உருவாகி இருக்கும் படம் தான் அடுத்த சாட்டை.
  adutha sattai is next level advise from samudragani

  இந்திய கல்வி துறையின் பிரச்சினைகளை கேள்வி கேட்கும் படமே அடுத்த சாட்டையாகும் .பல மாணவர்கள் ஒரு தரமற்ற கல்லூரியில் படிக்கிறார்கள் அந்த கல்லூரியில் ஆசிரியராக பணியில் இணைகிறார் சமுத்திரகனி ,சாட்டை படம் போலவே ஒரு கோவமான ஆசிரியர் கதாபாத்திரத்தில் தம்பி ராமையா நடித்திருக்கிறார்.கதை முழுவதுமே ஒரு காட்சி என்றால் பிரச்சினை அதன் இறுதியில் சமுத்திரகனி அட்வைஸ் இப்படியே முதல் பாதி ஓடி முடிக்கிறது ,இரண்டாம் பாதியின் இறுதியில் தான் கதை சூடுப்பிடித்து செல்கிறது ,இறுதியில் ஒரு மாணவரின் இறப்பை சாதிய பிரச்சனையாக மாற்ற முயலும் கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து சமுத்திரகனி எப்படி உண்மையை வெளியே கொண்டு வந்தார் என்பதே கதை .கதையில் மாணவர்களுக்குள் ஏற்படும் சாதிய முரண்பாடு பற்றி படம் பேசியிருப்பது பாராட்டதக்கது .

  adutha sattai is next level advise from samudragani

  ஆனால் நாம் சாட்டை மற்றும் அப்பா படங்களில் பார்த்த சமுத்திரகனியை அப்படியே அச்ச அசலாக இந்த படத்திலும் பார்கிறோம் .சமுத்திரகனி கதாபாத்திரத்துக்கு ஒரு பின் கதை கிடையாத நிலை. ஏன் இந்த கதாபாத்திரம் எப்போதும் அட்வைஸ் பண்ணி கொண்டே இருக்கிறது என்று படம் போக்கில் நம்மை கேள்வி கேட்க வைத்து விடுகிறது .படத்தில் சமுத்திரகனிக்கு ஜோடியாக நடித்திருக்கும் நடிகை இன்னும் நன்றாக நடித்திருக்கலாம் .

  adutha sattai is next level advise from samudragani

  படத்தில் ஆறுதலாக இருப்பது சில பாடல் காட்சிகள் தான். பாடல்கள் முடிந்ததும் அட்வைஸ் , அட்வைஸ் முடிந்ததும் பாடல் என நம்மை ஓர் மன நிலைக்கு கொண்டு வந்து விடுகிறார் இயக்குனர். பொதுவாக வாட்சாப்புகளில் வரும் நிறைய நல்ல மெஸேஜுகளை சம்மந்தமே இல்லாமல் அப்துல் கலாம் படத்தையோ , திருவள்ளுவர் படத்தையோ சொருகுவார்கள் . இனி அந்த வரிசையில் சமுத்திரகனியும் இடம் பெறுவார் .

  adutha sattai is next level advise from samudragani

  படத்தின் பலம் அட்வைஸ் , படத்தின் பலவீனம் ஓவர் அட்வைஸ் . கனி சொல்வதால் ஏற்று கொள்வார்கள் என ஒரு வகையான நம்பிக்கை. அதிக ஸ்போர்ட்ஸ் படங்களை எடுக்கும் சுசீந்திரன் தமிழ் சினிமாவின் பி டீ வாத்தியார் என்றால் , சமுத்திரகனி தமிழ் சினிமாவின் மாறல் சயின்ஸ் வாத்தியார்.

  adutha sattai is next level advise from samudragani

  படத்தில் எந்த விதமான வக்ரமும் , ஆபாசமும் இல்லை என்ற காரணத்தினால் கண்டிப்பாக குடும்பத்துடன் பார்க்கலாம்.

  ஓவியாவிற்கு பதில் காவ்யா , மருத்துவ முத்தம் வாங்கிய மார்க்கெட் ராஜாஓவியாவிற்கு பதில் காவ்யா , மருத்துவ முத்தம் வாங்கிய மார்க்கெட் ராஜா

  English summary
  samudragani is well established artist who has proved in various roles in tamil cinema. but whatever character he does is been taken away and the social messages what he does on screen stands forever in many audience. adutha saattai is based on educational system and its issues. many young minds been attracted by samudragani will always share the quotes and statements which he says in movie as dialogues .
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X