Movie Review : ஏலே திரைவிமர்சனம்

Rating:
3.0/5

நடிகர்கள் : மணிகண்டன், சமுத்திரக்கனி, இயக்கம் : :ஹலித்தா ஷமீம்
இசை : கபீர் வாசுகி

சென்னை : சில்லு கருப்பட்டி படத்திற்கு பிறகு இயக்குனர் ஹலிதா ஷமீம் படங்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

அந்த வகையில் இப்பொழுது உருவாகி இருக்கும் ஏலே திரையில் வெளியிடாமல் நேரடியாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.

எதார்த்தமான கதைகளை எப்பொழுதுமே கையாளும் இயக்குனர் ஹலிதா ஷமீம் அதே பாணியை இந்த படத்திலும் கையாண்டிருக்க மீண்டும் ஒரு முறை உணர்வுபூர்வமான படத்தை கொடுத்து சிறந்த இயக்குனர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.

சமுத்திரக்கனி அப்பாவாக

சமுத்திரக்கனி அப்பாவாக

அப்பா மகன் உறவை மையமாகக் கொண்டு கிராமத்து மண்வாசனையுடன் உருவாக்கப்பட்டுள்ளது ஏலே திரைப்படம். சமுத்திரக்கனி, மணிகண்டன் மற்றும் மதுமிதா ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடிக்க இதில் சமுத்திரக்கனி மணிகண்டனுக்கு அப்பாவாக நடித்துள்ளார். ஐஸ் வியாபாரம் செய்யும் முத்துக்குட்டி எனும் கதாபாத்திரமாக சமுத்திரக்கனி நடித்துள்ளார். வழக்கம் போல தன்னுடைய அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் சமுத்திரக்கனி. வளர்ந்த குழந்தை என்று சொல்லலாம்.

மணிகண்டன் மகனாக

மணிகண்டன் மகனாக

எழுத்தாளர், இயக்குனர், நடிகர் என பண்முகம் கொண்டவர் மணிகண்டன். இந்த படத்தில் சமுத்திரக்கனிக்கு மகனாக பார்த்தி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் பார்த்தியின் பார்வையில் முத்துக்குட்டியை காட்டியுள்ளனர். அவர் ஏன் தன்னுடைய தந்தையை அந்த கண்ணோட்டத்தில் பார்க்கிறார் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அந்த வகையில் மணிகண்டனின் கதாபாத்திரம் மிகவும் ரசிக்க வைக்கிறது.

நியோ ரியலிஸ்டிக் காமெடி

நியோ ரியலிஸ்டிக் காமெடி

இந்தப் படம் நியோ ரியலிஸ்டிக் காமெடி படமாக உருவாகி அனைவரையும் பல இடங்களில் ரசிக்க வைத்ததோடு சிரிக்கவும் வைத்திருக்கிறது. படத்தின் நீளம் சற்று அதிகமாகவே இருந்தாலும் அனைவரும் ரசிக்கக் கூடிய வகையில் இயக்குனர் தத்ரூபமாக இயக்கியுள்ளார். கட்டாயமாக இந்த படத்திற்கும் அவருக்கும் விருது கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது

முதல் தயாரிப்பு

முதல் தயாரிப்பு

ஹலீதா ஷமீம் பிரபல இயக்குனர்களான புஷ்கர் - காயத்ரி ஆகியோரிடம் துணை இயக்குனராக பணி புரியும் போது தயாரான கதை தான் ஏலே. எனவே அவர்களே 'வால்வாட்ச்சர் ஃபிலிம்ஸ்' என்ற பெயரில் ஏலே படத்தை தயாரித்துள்ளனர். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக ஏலே திரைப்படத்தை தயாரித்துள்ளனர். 'வால்வாட்ச்சர்" என்றால் சுவற்றில் காணும் சினிமா என்று இன்னொரு அர்த்தம் உண்டு .

சில இடங்களில் தொய்வு

சில இடங்களில் தொய்வு

ஹலீதா, ஏலே திரைப்படத்தை தான் முதலில் இயக்கவிருந்ததாகவும் அதற்கு சரியான வாய்ப்பு கிடைக்காமல் போனதால் பூவரசம் பீப்பி, சில்லு கருப்பட்டி படங்களை இயக்கி முடித்ததாகவும் சமீபத்தில் சில ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். முதல் படமாக வெளிவரவேண்டியது தாமதமாக வெளிவந்தாலும் தரமாக வந்துள்ளது. சில இடங்களில் தொய்வு இருந்தாலுமே படத்தில் வரும் ட்விஸ்ட்கள், கதை சொன்ன விதம் மிகவும் ஈர்க்கிறது.

சிறு சிறு சேட்டைகள்

சிறு சிறு சேட்டைகள்

சமுத்திரக்கனியின் எதார்த்தமான நடிப்பு இதில் செம ஸ்கோர் செய்து இருக்க ஊரில் அவர் செய்யும் சிறு சிறு சேட்டைகள் நம் அனைவரையும் கிராமத்திற்கு கொண்டு செல்கிறது. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையமைப்பாளர் கபேர் வாசுகி இசையமைத்துள்ளார். பாடல்கள் அனைத்தும் கதையுடன் ஒன்றி கேட்கும் வண்ணமே உள்ளது. ஹலிதா ஷமீம் தான் ஒரு சிறந்த இயக்குனர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறார்.

விஜய் டிவியில்

விஜய் டிவியில்

இந்த படமானது வரும் ஞாயிறு (28-02-2021) மதியம் 3 மணிக்கு ஸ்டார் விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது. வீட்டில் இருந்த படியே படத்தை ரசிக்கலாம் என்ற எண்ணம் இருந்தாலும் திரையரங்குகளில் வெளிவந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பதே ப்ரீமியர் ஷோ பார்த்தவர்களின் விருப்பமாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X