twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Agni Devi Review: சுவாதி கொலை, ராம்குமார் மரணம்.. நடந்தது என்ன.. அக்னி தேவி சொல்லும் புதுக்கதை!

    ஒரு போலீஸ் அதிகாரிக்கும், அரசியல்வாதிக்கும் இடையே நடக்கும் சண்டை தான் இந்த அக்னி தேவி திரைப்படத்தின் கதைக்கரு.

    |

    Recommended Video

    அக்னி தேவி படம் எப்படி இருக்கு?.. மக்கள் கருத்து- வீடியோ

    Rating:
    2.5/5

    சென்னை: ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரிக்கும், அதிகாரம் பலம் படைத்த அரசியல்வாதிக்கும் இடையே நடக்கும் சண்டைதான் இந்த அக்னி தேவி திரைப்படம்.

    அக்னி தேவ் (பாபி சிம்ஹா) ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி. தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் தீபா (ரம்யா நம்பீசன்) பாபியின் காதலி. ஒரு நாள் பாபியை பேட்டி எடுக்க வருவதாக இருந்த பெண் நிருபர், பட்டப்பகலில் பேருந்து நிலையத்தில் வைத்து படுகொலை செய்யப்படுகிறார். அவரது அண்ணன் சஞ்சய்யும் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடக்கிறார்.

    Agni vs devi review: Is this crime thriller a must watch one?

    கொலையாளிகளை தேடுகிறார் பாபி சிம்ஹா. ஆனால் மேலிடத்து அழுத்தம் காரணமாக பெண் நிருபரின் கொலை வழக்கில், அப்பாவி இளைஞன் ஒருவன் சிக்க வைக்கப்படுகிறான். இந்த சம்பவங்களுக்கு எல்லாம் பின்னால் இருப்பது, அமைச்சர் சகுந்தலா தேவி (மதுபாலா) என கண்டுபிடிக்கிறார் பாபி. சகுந்தலா தேவிக்கும், அக்னி தேவுக்கும் இடையே நேரடி சண்டை மூள்கிறது. அதில் யார் ஜெயிக்கிறார்கள், அந்த அப்பாவி இளைஞன் என்ன ஆகிறான் என்பது தான் படத்தின் கதை.

    பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமாரின் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ள படம் தான் அக்னி தேவ். நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடந்த சுவாதி படுகொலை சம்பவத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு, அதனுடன், டிமாணிடைசேஷன், கருப்பு பணம், கண்டெய்னர் விவகாரம், சில நிஜ அரசியல்வாதிகளின் பிம்பம், இளஞ்சிறார் குற்றவாளிகள் என எல்லா சம்பவங்களையும் இணைத்து, போலீஸ் க்ரைம் ஸ்டோரியாக உருவாக்கி இருக்கிறார்கள் இயக்குனர்கள் ஜேபிஆர் மற்றும் ஷியாம் சூர்யா. இந்த சம்பவங்களுடன் ராஜீவ் காந்தி மரணத்திற்கு பிறகான கலவரத்தையும் சேர்த்திருக்கிறார்கள்.

    Agni vs devi review: Is this crime thriller a must watch one?

    வழக்கமான போலீஸ் கதையாக இருந்தாலும், நாட்டில் அதிகமாக பேசப்பட்ட சம்பவங்களை திரையில் பார்க்கும் போது, இயல்பாகவே ஒரு சுவாரஸ்யம் ஏற்படுகிறது. ஆனால் அந்த சுவாரஸ்யங்கள் முழு படத்துக்கு நீடிக்கவில்லை. படம் தொடங்கியதில் இருந்து இடைவேளை வரை எப்படி சென்றது என்றே தெரியாத அளவுக்கு வேகமாக நகர்கிறது. நிறைய டிவிஸ்டுகள் இருப்பதால், இன்ட்ரஸ்டிங்காக இருக்கிறது. ராஜேஷ் குமாரின் கதையும், கருந்தேல் ராஜேஷின் வசனமும் தான் படத்தின் பலம்.

    வேறு ஒரு நடிகையுடன் முத்தக் காட்சியில் நடித்த கணவர்: என்ன சொல்கிறார் சமந்தா? வேறு ஒரு நடிகையுடன் முத்தக் காட்சியில் நடித்த கணவர்: என்ன சொல்கிறார் சமந்தா?

    ஆனால் இரண்டாம் பாதி எப்படி செல்கிறது என்பதே புரியாத அளவிற்கு, பாதை மாறிய ஓடை நீராய் பயணிக்கிறது. முதல் காட்சியில் நம்மை சுவாரஸ்யப்படுத்தும் மதுபாலாவின் கதாபாத்திரம், அடுத்தடுத்த காட்சிகளில் நீர்த்து போய்விடுகிறது. மேலும், ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள். என்னதான் ஹீரோவாக இருந்தாலும், ஒரு அமைச்சரால், போலீஸ் கமிஷ்னரால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பாபி சிம்ஹா அதிகாரம் படைத்தவரா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சி, மிதமிஞ்சிய சினிமாத்தனம்.

    Agni vs devi review: Is this crime thriller a must watch one?

    படத்தின் நாயகன் பாபி சிம்ஹா தான். ஆனால் 'நான் இதில் நடிக்கவே இல்லை. கிராப்பிக்ஸ் செய்துவிட்டார்கள்' என குண்டை தூக்கி போட்டிருக்கிறார் அவர். படத்தில் பெரும்பாலான காட்சிகளில் அவர் தான் வருகிறார். ஆனால், அவர் நடிக்காத ஒரு சில காட்சிகளில், டூப் போட்டு முகத்தை மூடி, லாங் சாட் வைத்து சமாளித்திருக்கிறார்கள். அதேபோல் பாபிக்கு, இரண்டு, மூன்று பேர் டப்பிங் பேசியிருப்பார்கள் போலிருக்கிறது. திரையில் அது அப்பட்டமாக தெரிகிறது.

    வெகு நாட்கள் கழித்து ரீஎண்ட்ரி கொடுத்திருக்கும் மதுபாலாவுக்கு, இந்த படத்தில் அழுத்தமான கதாபாத்திரம். வீல் சேர், நெற்றியில் செந்தூரம், முக்கால்கை ஜாக்கெட் என யாரையோ பிரதிபலிக்கும் வகையில் திரையில் தெரிகிறார். ஆனால் அவரது ஓவர் ஆக்டிங் காரணமாக, அந்த கதாபாத்திரத்தின் மீதான சுவாரஸ்யம் குறைந்துவிடுகிறது.

    Agni vs devi review: Is this crime thriller a must watch one?

    இந்த இருவரை தவிர்த்து, ரம்யா நம்பீசன், சதீஷ், எம்.எஸ்.பாஸ்கர், லிவிங்ஸ்டன் என ஒரு சில கதாபாத்திரங்கள் விருகின்றன. இதில் சதீஷ் மட்டும் தான், அதிக நேரம் வருகிறார். மற்றவர்களுக்கு எல்லாம் ஒன்றிரண்டு காட்சிகள் மட்டும் தான். சதீஷின் காமெடியும் ஒர்க்கவுட் ஆகவில்லை. அதேபோல் ரம்யா நம்பீசன் ரோலில், ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட்டை கூட நடிக்க வைத்திருக்கலாம். அந்த அளவுக்கு தான் அவரது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ளது.

    படத்தின் ஓடத்துக்கு பாடல்கள் தேவையில்லை என்பதால், அதனை தவிர்த்துவிட்டார்கள். பின்னணி இசைக்காக ஜேக்ஸ் பிஜோய் நிறைய மெனக்கெட்டிருக்கிறார். ஒரு சில காட்சிகளுக்கு, பின்னணி இசை தான் சுவாரஸ்யத்தை கூட்டுகிறது.

    Agni vs devi review: Is this crime thriller a must watch one?

    ஜானாவின் ஒளிப்பதிவில், இரண்டு கண்டெய்னர் லாரிகள் சாலையில் இருந்து பிரிந்து செல்லும் 'ஹெலிகேம் டாப் வியூ' காட்சி மிரட்டலாக இருக்கிறது. அதேபோல், சண்டை காட்சிகளையும் அருமையாக படம்பிடித்திருக்கிறார். முதல் பாதியை சுவாரஸ்யமாக எடிட் செய்த தீபக், இரண்டாம் பாதியையும் அதேபோல் கட் செய்திருக்கலாம்.

    Agni vs devi review: Is this crime thriller a must watch one?

    படத்தின் முக்கியமான இரண்டு கதாபாத்திரங்களுமே தங்கள் பணியை முழுமையாகவும், சரியாகவும் செய்யவில்லை. இதனால் டிரெய்லரில் இருந்த சுவாரஸ்யம் படத்தில் மிஸ்ஸிங். அக்னிக்கும் தேவிக்கும் இடையே நடக்கும் சண்டையை இன்னும் கொஞ்சம், அழுத்தமாக காட்டியிருந்தால், இரண்டாம் பாதி படமும் நன்றாக இருந்திருக்கும். எம்.எஸ்.பாஸ்கர் போன்ற நல்ல நடிகர்களை, இன்னும் நன்றாக பயன்படுத்தி இருக்கலாம். அதேபோல், இத்தனைக்கும் காரணம் கலவரங்கள் தான் பழிபோடுவதும் டூமச் பாஸ்.

    ராஜேஷ் குமாரின் நாவலை படிக்கும் போது ஏற்படும் சுவாரஸ்யத்தை, படம் பார்க்கும் போதும் ஏற்படுத்தியிருந்தால், இந்த அக்னி தேவி, தீப்பிழம்பாய் தகித்திருக்கும்.

    English summary
    The tamil movie Agni Devi is a crime thriller film, based on famous writer Rajesh Kumar novel, starring Bobby Simha and Madhu Bala in the lead role.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X