twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Airaa Review: யமுனாவை கொல்லத்துடிக்கும் பவானி... கருப்பு வெள்ளை படம் காட்டும் 'ஐரா'... விமர்சனம்!

    இரண்டு பெண்களுக்கு இடையே நடக்கும் யுத்தம் தான் ஐரா திரைப்படம்.

    |

    Recommended Video

    Airaa Movie Audience Review: ஐரா படத்தின் முதல் காட்சியிலேயே தியேட்டரை அதிர வைத்த நயன்தாரா- வீடியோ

    Rating:
    3.0/5

    சென்னை: இந்த சமூகத்தால் இழிவுப்படுத்தப்படும் ஒரு பெண், ஆவியாய் வந்து பழிவாங்கும் அக்மார்க் தமிழ் பேய் படம் தான் ஐரா.

    ஒரு பெரிய பத்திரிகையில் உதவி ஆசிரியராக பணியில் இருக்கும் யமுனாவுக்கு (வெள்ளை நயன்தாரா) யூடியூப் சேனல் ஆரம்பிக்க வேண்டும் என்பது ஆசை. ஆனால் அதற்கு அவரது உயரதிகாரிகளும், பெண்ணுக்கு திருமணம் செய்து பார்க்க வேண்டும் என நினைக்கும் பெற்றோரும் தடையாக இருக்கிறார்கள்.

    Airaa review: Will Nayantharas horror flick workout with the audience?

    தனது எண்ணத்தை நிறைவேற்றுவதற்காக பெற்றோரிடம் சொல்லாமல், பொள்ளாச்சியில் உள்ள பாட்டி வீட்டிக்கு செல்கிறார் யமுனா. அங்கு இல்லாத பேயை இருப்பது போல் சித்தரித்து, பாட்டி மற்றும் யோகி பாபுவுடன் சேர்ந்து சில பல வீடியோக்களை எடுத்து யூடியூபில் அப்லோடுகிறார்கள். வெகு விரைவில் வைரலாகிறது யமுனாவின் பேய் வீடு வீடியோக்கள்.

    இது ஒருபுறம் இருக்க சென்னையில் கலையரசனுக்கு வேண்டப்பட்ட ஒருவர் விபத்தில் இறக்கிறார். இதையடுத்து, விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் உள்பட சிலர் மர்மமான முறையில் இறக்கிறார்கள். இதற்கிடையே, பொள்ளாச்சியிலும் யமுனாவை நிஜப் பேய் ஒன்று துரத்துகிறது. யமுனாவை கொல்லத் துடிக்கும் அந்த பேய் பவானி (கருப்பு நயன்தாரா) என்பது தெரிய வருகிறது. அவர் ஏன் யமுனாவை கொல்லத்துடிக்கிறார் என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்கிறது படம்.

    Airaa review: Will Nayantharas horror flick workout with the audience?

    <strong>Airaa Movie :இதை நயன்தாராவே நினைத்தாலும் காப்பாற்ற முடியாது </strong>Airaa Movie :இதை நயன்தாராவே நினைத்தாலும் காப்பாற்ற முடியாது

    முனி, காஞ்சனா, அரண்மனை போன்று, வழக்கமான பேய் பட டெம்ப்லேட்டுக்குள் அடங்கும் படம் தான் ஐரா. ஆனால் அதிகம் பயமுறுத்த நினைக்காமல், சமூக அக்கறையுடன் ஒரு நல்ல கருத்தை விதைக்க நினைத்திருக்கிறார் இயக்குனர் சர்ஜுன். நயன்தாரா படம் என்பதால், குழந்தைகளும் பார்க்க வேண்டும் என நினைத்து, அதற்கேற்றார் போல் காட்சிகளை அமைத்திருக்கிறார்.

    படத்தின் முதல் காட்சியிலேயே, ஆணாதிக்க சிந்தனைக்கு எதிராக நயன் பேசும் வசனம், இப்போதைய ராதாரவி விவகாரத்துக்கு செமையாக செட்டாகிறது. நயன் பேன்ஸ் கைத்தட்டி சபாஷ் சொல்ல சிறப்பான சம்பவம் அது.

    சமூகத்தால் இழிவுப்படுத்தப்படும் ஒரு பெண்ணை பற்றி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் படத்தை உணர்வுப்பூர்வமாக மாற்றுகிறது. பவானி கதாபாத்திரத்தை மிக வலுவாக படைத்திருக்கிறார் இயக்குனர் சர்ஜுன். பவானியின் கதையை கேட்கும் எந்த ஒரு பார்வையாளனுக்கும், அவர் மீது பரிதாபமும், அனுதாபமும் ஏற்படுவது நிச்சயம்.

    Airaa review: Will Nayantharas horror flick workout with the audience?

    யமுனா, பவானி என இரண்டு கதாபாத்திரத்திற்கும் மிக பொறுத்தமான பெயரை வைத்திருக்கிறார் இயக்குனர். இமய மலையில் இருந்து பாய்வதாலேயே, தெய்வமாக போற்றப்பட்டு, கொண்டாடப்படும் யமுனை நதியின் பெயர், வாழ்க்கையில் எல்லா சந்தோஷங்களையும் அனுபவிக்கும் 'வெள்ளை' நயன்தாராவுக்கு. வற்றாமல் ஓடி கொங்கு மண்டலத்திற்கு வளம் சேர்த்தாலும், காவிரியின் துணை ஆறு தானே என ஏளனமாக பார்க்கப்படும் பவானியின் பெயர், பாவப்பட்ட ஜீவன் 'கருப்பு' நயன்தாராவுக்கு.

    எல்லா சந்தோஷமும் கிடைத்த ஒரு பெண், எந்த சந்தோஷத்தையும் ருசித்திராத மற்றொரு பெண் என இரு முரண்பாடான கதாபாத்திரங்களை தனது தோளில் சுமந்திருக்கிறார் நயன்தாரா. அவரது வழக்கமான படங்களில் இருந்து வேறுபட்டு, கருப்பு மை பூசி, உடல்மொழியை மாற்றி, பவானியாக வாழ்ந்திருக்கிறார். பேயாக இருந்தாலும், பவானியை தான் எங்களுக்கு பிடிச்சிருக்கு நயன். இரண்டு கேரக்டர்களை வேறுபடுத்தி காட்ட வேண்டும் என்பதற்காக சின்ன சின்ன விஷயங்களையும் மிக நுட்பமாக செய்திருக்கிறார். பாராட்டுக்கள் நயன்.

    Airaa review: Will Nayantharas horror flick workout with the audience?

    அமுதனாக செமையாக ஸ்கோர் செய்கிறார் கலையரசன். தனது எல்லையை அறிந்து, அதற்கேற்றார் போல் சிறப்பாக நடித்திருக்கிறார். நம்ம ஊர் பவானிகளுக்கு, இந்த அமுதனை ரொம்பவே பிடித்துப் போகும்.

    முதல் பாதி படம் முழுவதும் வருகிறார் யோகி பாபு. இந்த படத்திலும் நயன்தாராவை கரெக்ட் செய்ய முயற்சிக்கிறார். ஆனால் 'கோலமாவு கோகிலா' காமெடி இதில் ஒர்க்கவுட் ஆகவில்லை. ஒரு சில இடங்களில் மட்டுமே சிரிப்பு வருகிறது.

    இந்த மூவரை தாண்டி, பாட்டி, குட்டி பையன் பப்ளூ, அப்பா ஜெயப்பிரகாஷ், அம்மா மீரா கிருஷ்ணன் என எல்லோருமே சப்போர்ட்டிங் ஆர்ட்டிஸ்ட் தான். அவரவர் பணியை சரியாக செய்திருக்கிறார்கள்.

    Airaa review: Will Nayantharas horror flick workout with the audience?

    இந்திரனின் ஐராவதமாக சர்ஜுனுக்கு துணை நிற்கிறார்கள் இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தி, ஒளிப்பதிவாளர் சுதர்ஷன் சீனிவாசன், படத்தொகுப்பாளர் கார்த்திக் ஜோகேஷ்.

    ஏற்கனவே ஹிட்டான 'மேகதூதம்' பாடலை திரையில் பார்க்கும் போது சந்தோஷமும், அனுதாபமும் சேர்ந்த ஒரு உணர்வு ஏற்படுகிறது. பின்னணி இசையையும் சிறப்பாக செய்திருக்கிறார்.

    ஒவ்வொரு காட்சியையும் ரசித்து, ரசித்து படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுதர்ஷன் சீனிவாசன். பொள்ளாச்சி காற்றாலை வயல்வெளியுடன் தொடங்கு முதல் காட்சியிலே இம்ப்ரெஸ் செய்துவிடுகிறார். இரண்டு நயன்தாராக்களுக்கு தனித்தனியே லைட்டிங் செய்து வேறுபடுத்தி காட்டியிருக்கிறார்.

    பொள்ளாச்சி, சென்னை என இரண்டு இடங்களில் ஒரே நேரத்தில் நடக்கும் சம்பவங்களை குழப்பாமல் புரியவைக்கிறார் எடிட்டர் கார்த்திக் ஜோகேஷ். குறிப்பாக அந்த மருத்துவமனை காட்சியும், ஹவுசிங் போர்ட் காட்சியும் ஒன்று சேரும் இடம் அருமை.

    தொழில்நுட்ப ரீதியாகவும், பாத்திரப் படைகள் மூலமும் படம் வெற்றி பெறுகிறது. ஆனால் நாம் ஏற்கனவே பார்த்து சலித்து போன அதே பேய் பட டெம்ப்லேட்டுக்குள் படம் அடங்கி விடுகிறது. பேய் எல்லாம் பாவம் பாஸ், விட்டுருங்க என கெஞ்சும் அளவுக்கு தான் இருக்கிறது கேப்கப். பார்வையாளர்களை எந்த இடத்திலும் பயமுறுத்தாத, வியப்படைய செய்யாத காட்சியமைப்பும், திரைக்கதையும் படத்தை பலவீனப்படுத்துகிறது.

    யமுனாவை பவானி கொல்லத் துடிப்பதற்கான காரணம் அழுத்தமாக இல்லை. 'இதற்கெல்லாமா கொலை பண்ணுவாங்க' என்று தான் யோசிக்க வைக்கிறது. தில்லுக்கு துட்டு படத்தில் சந்தானம் பேசும் வசனம் தான் நியாபகத்துக்கு வருகிறது.

    இரண்டாம் பாதியை போல், முதல் பாதி படத்தின் திரைக்கதையும் சுவாரஸ்யமாக அமைத்திருக்கலாம். மேலும், க்ளைமாக்ஸ் காட்சியை மிக எளிதாக யூகித்துவிட முடிகிறது. நிறைய புதிய விஷயங்களை யோசிக்கும் சர்ஜுன் க்ளைமாக்ஸையும் புதிதாக யோசித்திருக்கலாம். ப்ளாஷ் பேக்கை பார்த்து பவானி மீது ஏற்படும் அனுதாபம், தியேட்டரைவிட்டு வெளியே வரும் போது போய் விடுகிறது.

    பாத்திரப் படைப்பில் செலுத்திய கவனத்தை, கதையிலும், திரைக்கதையிலும் செலுத்தியிருந்தால் 'ஐரா'வை நாமும் தோளில் தூக்கி வைத்து கொண்டாடி இருக்கலாம்.

    English summary
    Airaa is a horror film written and directed by KM Sarjun, in which Nayanthar palys dual role for the first time. Kalaiyarasan and Yogi Babu are playing supporting roles. The characterisation of Bhawani is so good in the movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X