ஐஸ்வர்யா ராஜேஷின் நேரடி டிவி ரிலீஸ் படம் பூமிகா எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம்!

சென்னை: பெரிய பெரிய விமர்சகர்களின் விமர்சனத்தை பார்த்து விட்டு எல்லாம் தியேட்டருக்கு போய் படம் பார்த்த காலமே மாறிப் போய்விட்டது.

நேரடியாக டிவியிலும் ஒடிடியிலும் மக்களிடமே படங்கள் வெளியாக அவர்கள் அந்த படத்தை பார்த்து விட்டு சமூக வலைதளங்களில் அது குறித்த கருத்துக்களையும் விமர்சனங்களையும் வைத்து வருகின்றனர்.

தியேட்டருக்கு செல்லாமல் விஜய் டிவியில் இன்று நேரடியாக வெளியான பூமிகா படம் எப்படி இருக்கு என ட்விட்டர் வாசிகள் கூறும் விமர்சனங்களை இங்கே காண்போம்.

நேரடியாக டிவியில்

நேரடியாக டிவியில்

இயக்குநர் ரதீந்திரன் பிரசாத் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் இன்று நேரடியாக விஜய் டிவியில் மதியம் 3 மணிக்கு வெளியான புத்தம் புது திரைப்படம் பூமிகா. நல்ல கருத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஹாரர் த்ரில்லர் படமாக இந்த படம் இருக்கிறது.

திட்டம் இரண்டை தொடர்ந்து

திட்டம் இரண்டை தொடர்ந்து

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ஏகப்பட்ட படங்கள் ஒடிடியில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. குறைந்த பட்ஜெட்டிலான நல்ல படங்களில் கச்சிதமாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை குவித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். சமீபத்தில் ஒடிடியில் வெளியான அவரது திட்டம் இரண்டு திரைப்படம் செம ட்விஸ்ட் உடன் வெளியாகி பாராட்டுக்களை குவித்த நிலையில், பூமிகாவும் பாராட்டுக்களை அள்ளி வருகிறது.

ஒரு நாள் முன்பே லீக்

ஒரு நாள் முன்பே லீக்

நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் நாளை பூமிகா திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், இன்று விஜய் டிவியில் இந்த படம் ஒளிபரப்பானது. ஆனால், நேற்றே இந்த படத்தின் ஹெச்.டி. பிரின்ட் பைரசி தளங்களில் கசிந்து விட்டதாக ஏகப்பட்ட ட்வீட்களும், ஸ்க்ரீன் ஷாட்களும் வெளியாகி படக் குழுவுக்கு டென்ஷன் ஏற்படுத்தின. எங்கே இருந்து லீக் ஆகியிருக்கும்?

சீரியல் நடிகர்கள் போல

சீரியல் நடிகர்கள் போல

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நன்றாக நடித்துள்ளார். நல்ல சமூக சிந்தனை கொண்ட படம். கண்டிப்பாக பார்க்கலாம். ஆனால், ஐஸ்வர்யா ராஜேஷை தவிர்த்து மற்ற நடிகர்கள் சீரியல் நடிகர்களை போல நடித்து கொஞ்சம் சோதிக்கின்றனர் என்றும் இந்த நெட்டிசன் தனது கருத்தையும் விமர்சனத்தையும் முன் வைத்துள்ளார்.

வீக் ஸ்க்ரீன்ப்ளே

வீக் ஸ்க்ரீன்ப்ளே

இயற்கையை பற்றிய கருத்தோடு உருவாகியுள்ள ஐஸ்வர்யா ராஜேஷின் பூமிகா திரைப்படம் முதல் பாதி நன்றாகவே சென்றது. ஆனால், இரண்டாவது பாதியில் வரும் தேவையில்லாத சற்றே இழுவையான காட்சிகளால் சொல்ல வந்த கருத்தை கச்சிதமாக சொல்ல முடியாமல் படம் திணறியது. வீக் ஸ்க்ரீன்ப்ளே படத்தை பாதித்தது என்று இவர் விமர்சித்துள்ளார்.

விளம்பரம் போட்டே கொல்றாங்க

விளம்பரம் போட்டே கொல்றாங்க

விஜய் டிவியில் நேரடியாக ஒளிபரப்பான பூமிகா படத்திற்கு ஏகப்பட்ட விளம்பரங்கள் குவியவே, படத்தின் த்ரில் தன்மையை ரசிக்கவே முடியாமல் போய் விட்டதாக ஏகப்பட்ட ரசிகர்கள் குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளனர். முதல் முறை படம் போடும் போது இப்படி நிறைய விளம்பரத்தை போட்டு கொல்லாதீங்க என நெட்டிசன்கள் கதறி வருகின்றனர்.

இன்மைக்கு அடுத்து

இன்மைக்கு அடுத்து

நவரசாவில் சித்தார்த் மற்றும் பார்வதி நடிப்பில் இடம்பெற்ற இன்மை படத்தை இயக்கிய இயக்குநர் ரதீந்திரன் இன்னொரு தரமான படைப்பை பூமிகாவாக கொடுத்திருக்கிறார். இயற்கை பாதுகாப்பு குறித்து படம் பேசுவது இந்த நேரத்திற்கு தேவையான ஒன்று என இந்த ரசிகை கருத்து தெரிவித்துள்ளார்.

சப்புன்னு முடிச்சிட்டீங்களே

சப்புன்னு முடிச்சிட்டீங்களே

சும்மாவே ஏதாவது யோசிப்பேன்.. இப்படி ஆகியிருக்குமோ.. அப்படி ஆகியிருக்குமோன்னு.. என்ன நடந்துருக்கும்னு யோசிச்சிட்டு இருந்தா.. இப்படி சப்புன்னு முடிச்சிட்டீங்களே.. என பூமிகாவின் கிளைமேக்ஸ் அந்த அளவுக்கு வொர்க்கவுட் ஆகவில்லை என இவர் விமர்சித்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷின் பூமிகாவுக்கு கலவையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X