GBU Blue Sattai Maran Review: புதுசா ஒரு பழைய படம்.. GBU ஃபர்னீச்சரை உடைத்துவிட்ட ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார், அர்ஜுன் தாஸ், த்ரிஷா, பிரபு, பிரசன்னா, சுனில், சிம்ரன், பிரியா வாரியர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் குட் பேட் அக்லி. மைத்ரீ மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படம் நேற்று அதாவது ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ் ஆன நிலையில் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகிறார்கள். படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை எடுத்து வைத்துள்ளார்கள்.

குட் பேட் அக்லி படத்தின் விமர்சனம் தொடர்பாக ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டுள்ள வீடியோவில், " படத்தின் கதாநாயகன் அஜித்குமார் பெரிய டானாக, கேங்ஸ்டராக உள்ளார். அவருக்கும் அவரது மனைவி த்ரிஷாவுக்கும் குழந்தை பிறக்கிறது. குழந்தையை ஆசை ஆசையாக பார்க்க வரும்போது, நீ பெரிய கேங்ஸ்டராக இருப்பதாலும், டானாக இருப்பதாலும் என் குழந்தையை பார்க்க வரக்கூடாது என்று கூறுகிறார். நீ நல்லவனா திருந்தி வந்தா மட்டும் தான் என்னுடைய குழந்தையை தொடனும் அப்படின்னு சொல்கிறார் த்ரிஷா.

Ajith Kumar Good Bad Ugly Blue Sattai Maran Review He Slams Adhik Ravichandran Screenplay and Over Ajith Reference

உடனே தனது மகனுக்காக, தான் செய்த தவறுகளை எல்லாம் ஒத்துக் கொண்டு, ஜெயிலுக்குப் போகிறார். ஜெயிலுக்கு போனவர் 18 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் வெளியே வரமுடியும் எனும் சூழலில், மகனின் 18வது பிறந்த நாளில் கலந்து கொள்ளலாம் என வெளியே வருகிறார். அஜித் வெளியே வரும்போது அவரது மகன் போதைப்பொருள் வழக்கில் சிறைக்கு செல்கிறார். தனது மகன் மீது திட்டமிட்டு பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்துவிட்டதால், மகனைக் காப்பாற்ற, எந்த கேங்ஸ்டர் தொழிலை விட்டாரோ, அதே கேங்ஸ்டர் தொழிலை கையில் எடுக்கிறார். அதன் பின்னர் என்ன ஆனது என்பதுதான் கதை.

Ajith Kumar Good Bad Ugly Blue Sattai Maran Review He Slams Adhik Ravichandran Screenplay and Over Ajith Reference

பில்டப்: இந்த கதையின் முக்கால்வாசியை வாய்ஸ் ஓவரில் சொல்லிவிடுகிறார்கள். மீதி ஓரிரண்டு காட்சிகள் மட்டும் விஷுவலில் காட்டுகிறார்கள். படத்தில் நான்கு காட்சிகள் எக்ஸ்ட்ரா உள்ளது. இவ்வளவுதான் படமே, கதையோ திரைக்கதையோ எந்தவொரு டெவலப்மெண்ட்டும் இருக்காது, கதையில் எந்த ஒரு உயிரும் இருக்காது. அதை வைத்து படம் எடுத்துள்ளார்கள். மீதி படத்தில் என்ன செய்து வைத்துள்ளார்கள் என்றால், ஹீரோ யார் தெரியுமா? எப்படிப்பட்டவர் தெரியுமா? என்ன செய்வார் தெரியுமா? என்னென்னவெல்லாம் செய்திருக்கிறார் தெரியுமா? இப்படியே மாத்தி மாத்தி ஒவ்வொரு வெர்ஷனாக சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.

Ajith Kumar Good Bad Ugly Blue Sattai Maran Review He Slams Adhik Ravichandran Screenplay and Over Ajith Reference

ஃபேன் பாய்: படத்தில் வருபவர்கள், போகிறவர்கள் எல்லாம் பில்டப் கொடுத்துக் கொண்டு இருப்பார்கள். கேட்டால், படத்தின் இயக்குநர் ஹீரோவின் ஃபேன் பாய் எனக் கூறுகிறார்கள். டான் என்றால் படிக்கட்டுகளில் ஏற வேண்டும், இருக்க வேண்டும் என்பதைப் போல், ஃபேன் பாய் என்றால் இப்படிப் படம் எடுத்து உயிரை வாங்குவார்களாம். ' நீங்க ஃபேன் பாயாக இருந்தால் அத காலத்தில் மன்னர்களை புகழ்ந்து பாடி புலவர்கள் பரிசு வாங்கிக் கொண்டு இருப்பார்கள் அல்லவா? அதுபோல வாங்கிட்டு போங்க. அல்லது, முருகரைப் பார்த்ததும் ஔவையார் பாடியதைப் போல பழம் நீயப்பா ஞானப்பழம் நீயப்பா என பாடல் பாடியது போல, அஜித் வீட்டு வாசலில் உட்கார்ந்து பாடிவிட்டு, பரிசு கிடைத்தால் வாங்கிட்டு போங்க. அதை விட்டுவிட்டு ஃபேன் பாய் என்றால் இப்படித்தான் படம் எடுப்பார்கள் என எங்க தாலியை ஏன் அறுக்கிறீர்கள்?'.

Ajith Kumar Good Bad Ugly Blue Sattai Maran Review He Slams Adhik Ravichandran Screenplay and Over Ajith Reference

ரெஃபரன்ஸ்: யாருமே ரசிகர்களை மனதில் வைத்து அவர்களுக்காக படம் எடுப்பது கிடையாது. யாரு கதாநாயகனோ, அவருக்கு ஃபேன் பாயாக மாறி, ஒரு செட்டை மட்டும் போட்டு வைத்துவிட்டு, ஒரு துப்பாக்கி எடுத்து எல்லாரையும் சுட்டுக்கிட்டு, ஃபேன் பாய் சம்பவம் முடிந்துவிட்டது எல்லாரும் கிளம்புங்க என்று கூறிவிடுகிறார்கள். படம் முழுக்க ரெஃபரன்ஸ் ரெஃபரன்ஸ்னு போட்டு சாவடித்துவிட்டார்கள். அதேபோல், படம் முழுக்க பழைய பாட்டு ஒரு சில இடங்களில் வரலாம் அது, பொருத்தமாக இருந்தால், அது சரியும் கூட. படம் முழுக்க பழைய பாட்டை போட்டு சாகடித்து விட்டார்கள். அதுவும் முழு முழு பாடல்கள் போட்டுவிட்டார்கள், மப்சல் பஸ்ஸில் வெளியூருக்கு போயிட்டு வந்தது போல இருந்தது.

Ajith Kumar Good Bad Ugly Blue Sattai Maran Review He Slams Adhik Ravichandran Screenplay and Over Ajith Reference

பாடல்கள்: அத்தனை பழைய பாடல்களைப் போட்டு வைத்துவிட்டார்கள். படம் ஆரம்பித்து கொஞ்ச நேரத்திலேயே தெரிந்துவிட்டது, இந்த படம் விளங்காது என்பது. படம் உருப்புடாது என்பதற்கு 9 பொருத்தம் பொருந்தியிருந்தது. சரியாக படம் முடிவதற்கு கொஞ்சம் முன்னால், யோகி பாபு வந்தார் 10வது பொருத்தமும் சரியாக பொருந்தி விட்டது. யோகி பாபு வந்தால் படம் ஓடும் என இன்னும் இந்த உலகம் நம்பிக் கொண்டு இருக்கிறது. அஜித்தும் நம்புகிறார். படம் பார்க்கும்போது ரணகளத்திலும் ஒரு குதூகலம் என உட்கார்ந்து ட்விட்டரைப் பார்த்தால், விஜய் ரசிகர்களுக்கும் அஜித் ரசிகர்களுக்கும் செம காமெடி போய்க்கொண்டு இருக்கிறது.

Ajith Kumar Good Bad Ugly Blue Sattai Maran Review He Slams Adhik Ravichandran Screenplay and Over Ajith Reference

ரசிகர்கள்: விஜய் ரசிகர்களுக்கு அறிவுரை வந்ததா என்னவோ, படம் குறித்து விஜய் ரசிகர்கள், 'நான் விஜய் ரசிகர் தான். ஏ.கேவுக்கு இந்த படம் கம்பேக்தான்' என பதிவிடுகிறார்கள். அதற்கு கீழ், அஜித் ரசிகர்கள், ' சும்மா அடிச்சு விடாதீங்கடா, எங்களாலே இந்த படத்தைப் பார்க்க முடியவில்லை. நீங்க என்ன செய்தாலும் சரி எங்க ஓட்டு உங்களுக்கு கிடையாது என பதிவிட்டு வந்தார்கள். இந்த காமெடி ஒரு பக்கம் போய்க்கொண்டு இருந்தது.

Ajith Kumar Good Bad Ugly Blue Sattai Maran Review He Slams Adhik Ravichandran Screenplay and Over Ajith Reference

எல்லாமே பழசு: மொத்தத்தில் இந்த படம் எப்படி இருக்கு என்று கேட்டீர்கள் என்றால், இந்த படம் ரிலீஸுக்கு முன்னாள், புரோமோசனில் இந்த படம் வேற லெவலில் இருக்கப்போகுது, இந்த படம் ஃபேன் பாய் சம்பவம், விண்டேஜ் அஜித் சம்பவம், அந்த அனுபவத்தை உங்களுக்கு கொடுக்கும் என்றெல்லாம் கூறினார்கள். விண்டேஜ் என்றால் என்ன பழையது என்று அர்த்தம். இந்த படத்தில் எது பழையது என்று பார்த்தால், எல்லாமே பழையது தான். படத்தின் டைட்டில் பழசு, படத்தில் நடித்த த்ரிஷா, சிம்ரன், டினு ஆனந்த், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட அனைவரும் பழசு.

Ajith Kumar  Good Bad Ugly  Blue Sattai Maran Review Adhik Ravichandran  Ajith Reference

எப்படி இருக்கு: அர்ஜுன் தாஸ் மட்டும் தான் புதிதாக தெரிகிறார். படத்துக்குள் பத்து பழைய பாட்டை தூக்கி உள்ளே வைத்துள்ளார்கள். பல பழசை ஒன்றாக சேர்த்து புதுசா ஒரு பழைய படத்தை எடுத்து வைத்துள்ளார்கள்" என தெரிவித்துள்ளார். ப்ளூ சட்டை மாறனின் இந்த விமர்சனம் ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் ஷாக் கொடுத்தாலும், ப்ளூ சட்டை மாறன் பெரும்பாலான படத்தையும் இப்படிதான் விமர்சிப்பார் என கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X