Vidamuyarchi First Review: வெறித்தனமாக இருக்கும் விடாமுயற்சி.. அஜித் அதகளம்.. முதல் விமர்சனம் இதோ!

சென்னை: இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் வரும் பிப்ரவரி 6ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், சமீபத்தில் அந்த படத்தை பார்த்த சில சினிமா பிரபலங்கள் படம் வெறித்தனமாக இருக்கிறது என்றும் நிச்சயம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறும் என்றும் கூறியுள்ள தகவல்கள் கசிந்துள்ளன.

விஜய்யை வைத்து லோகேஷ் கனகராஜ் லியோ படத்தை எப்படி எடுத்தாரோ அதே போல அஜித்தை வைத்து மகிழ் திருமேனி செய்திருக்கும் அதகளமான சம்பவம் தான் விடாமுயற்சி என படத்தை பார்த்த விநியோகஸ்தர்களும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

vidamuyarchi  vidamuyarchi review  ajith kumar

இந்த படம் கண்டிப்பாக அஜித் குமாருக்கு லைஃப் டைம் பாக்ஸ் ஆபீஸ் வேட்டையை நிச்சயம் பெற்றுத் தரும் என்றும் ரசிகர்களும் வெறித்தனமாக படத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் நிலையில், ப்ரீ புக்கிங் தொடங்கியதும் மிகப்பெரிய கலெக்‌ஷன் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரேக்டவுன் ரீமேக்: ஜானதன் மாஸ்டோ இயக்கத்தில் கர்ட் ரசல் நடிப்பில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படம் தான் பிரேக்டவுன். அந்த படத்தின் ரீமேக் தான் அஜித்தின் விடாமுயற்சி என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் உள்ளிட்டவையும் அதை உறுதி செய்யும் வகையில் அப்படியே உள்ளது குறிப்பிடத்தக்கது. விஜய் ஹிஸ்டரி ஆஃப் வயலென்ஸ் படத்தை ரீமேக் செய்து லியோவாக கொடுத்து 600 கோடி வசூல் வேட்டை அள்ளிய நிலையில், அஜித் குமாருக்கு இந்த படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் படமாக அமையும் என படத்தை பார்த்த சினிமா பிரபலங்கள் தெரிவித்துள்ளனர்.

விடாமுயற்சி முதல் விமர்சனம்: சமீபத்தில் இந்த படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வாங்கி வெளியிடுவதற்காக பிரத்யேகமாக திரையிடப்பட்ட நிலையில், அந்த படத்தை பார்த்த சிலர், அஜித் குமாரின் ரோட் ஆக்‌ஷன் த்ரில்லர் படமான விடாமுயற்சியை பார்த்து ஆச்சர்யத்தில் ஆழ்ந்து போய்விட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன. காணாமல் போகும் தனது மனைவி த்ரிஷாவை தேடிக் கண்டுபிடிக்க அஜித் அலைந்து திரிந்து நடத்தும் போராட்டத்தில் அவருடைய மொத்த நடிப்பை பார்த்து தியேட்டரில் ஒவ்வொரு நொடிக்கும் ரசிகர்களின் விசில் சத்தம் பறக்கும் என்று கூறியுள்ளனர்.

vidamuyarchi  vidamuyarchi review  ajith kumar

பொங்கலும் தீபாவளியும்: இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான படங்கள் பெரிதாக வசூல் செய்யாத நிலையில், வரும் பிப்ரவரி 6ம் தேதி தான் பொங்கலும் தீபாவளியும் ஒன்றாக சேர்ந்து வருவது போல தமிழ் சினிமாவுக்கு இருக்கப் போகிறது என்றும் விடாமுயற்சி படம் விஸ்வரூப வெற்றி அடைவது உறுதி என இன்சைட் ரிப்போர்ட்டுகள் வெளியாகி உள்ளன. அதிகபட்சமாக 300 முதல் 400 கோடி வரை வசூல் செய்ய வாய்ப்புகள் இருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

குட் பேட் அக்லிக்கு எகிறிவிடும்: விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுவிட்டால் அடுத்து அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் பிசினஸ்க்கு அது மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்றும் 500 கோடி வசூலை கூட அசால்ட்டாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா நடித்துள்ள குட் பேட் அக்லி அடையும் என்றும் கூறுகின்றனர். ஆனால், விடாமுயற்சி திரைப்படம் கமர்ஷியலாக ரசிகர்களை கவராமல் போய்விட்டால் குட் பேட் அக்லி படத்துக்கும் அது பெரிய சிக்கலை பாக்ஸ் ஆபீஸில் தரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X