Good Bad Ugly Review: குட் பேட் அக்லி படம் எப்படி இருக்கு.. பயில்வான் ரங்கநாதனின் விமர்சனம் இதோ!

சென்னை: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய அஜித் குமாரின் 'குட் பேட் அக்லி' திரைப்படம் இன்று ரிலீசாகியுள்ளது. இன்று காலையில் இருந்து 'குட் பேட் அக்லி' முதல் காட்சி துவங்கியுள்ளது. இந்த ரிலீசை திரையரங்குகளில் ரசிகர்கள் வேறலெவலில் கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள். இப்படத்தை பார்த்த பயில்வான் ரங்கநாதன், குட் பேட் அக்லி ரசிகர்களுக்கு சரியான ட்ரீட்டாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

குட் பேட் அக்லி திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் ஒவ்வொரு மொழிக்கு என ஏகப்பட்ட வில்லன்கள் நடித்திருக்கிறார்கள். அஜித் நடித்த படங்களிலேயே அதிக வில்லன்கள் நடித்த படமாக இப்படம் அமைந்திருக்கிறது. இதில் காமெடிக்காக, ரெட்டின் கிங்க்ஸி மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் செய்யும் அட்டகாசங்கள் படத்தில் ரசிக்கும்படி இருக்கின்றன. புஷ்பா படத்தை தயாரித்த மைத்ரி மூவிஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்து இருக்கிறது. அஜித் நடித்த வில்லன், துணிவு போன்ற படங்களின் கலவையாக இந்த படத்தில் எடுத்து இருக்கிறார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். 200 ரூபாய் டிக்கெட்டில் நீங்கள் படம் பார்க்கிறீர்கள் என்றால், இந்த படம் நிச்சயமாக 500 ரூபாய்க்கான மகிழ்ச்சியை கொடுக்கும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.

Ajith kumar  Good Bad Ugly  Review

படத்தின் கதை: இந்த படத்தின் கதை என்னவென்றால் மிகவும் மோசமாக இருக்கும் அஜித் குமார், இனிமேல் எதுவுமே வேண்டாம் என்பதற்காக அனைத்தையும் வெட்டி விட்டு விட்டு திருந்தி வாழ நினைக்கிறார். ஆனால், தன்னுடைய மகனுக்காக மீண்டும் வில்லனாக மாறி, மறுபடியும் பழைய வேஷத்தை போடுகிறார். இதுதான் படத்தின் கதை . பழி வாங்கும் கதை என்று மட்டும் வைத்து விடாதீர்கள். அப்பா, மகன் சென்டிமென்ட், மனைவி கணவன் சென்டிமென்ட் என ஒரு கலவையாக இருக்கிறது இப்படம். த்ரிஷாவுக்கும் அஜித்தும் இணைந்து நடிக்கும் ஆறாவது படம் இது. நடிகர் அஜித் நடிக்கும் படங்களில் பெரிய அளவில் சண்டை காட்சிகள் இருக்காது. ஆனால் இந்த திரைப்படத்தில் அட்டகாசமான சண்டைக் காட்சிகளில் நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் நடிகை சிம்ரன் வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படியும் சிம்ரன் நடிப்பார்களா என படம் பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்துகிறது.

Ajith kumar  Good Bad Ugly  Review

எந்த இடத்தில் படத்தில் லேக் இல்லாமல் படம் மிகவும் சுவாரசியமாக செல்கிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தின் இயக்குநராக மட்டும் இல்லாமல், அஜித்தின் ரசிகராக இருந்து இந்த படத்தை எடுத்து இருக்கிறார். நிச்சயம் இந்த படம் அஜித்தின் பெயர் சொல்லும் படமாக அமைந்து வசூலை அள்ளும் என பயில்வான் ரங்கநாதன் அந்த விமர்சனத்தில் கூறியுள்ளர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X