twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Achcham Madam Naanam Payirppu Review: அக்ஷரா ஹாசனின் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு விமர்சனம்!

    |

    Rating:
    2.5/5

    நடிகர்கள்: அக்‌ஷரா ஹாசன், உஷா உத்துப்

    இயக்கம்: ராஜா ராமமூர்த்தி

    ஓடிடி தளம்: அமேசான் பிரைம்

    சென்னை: அச்சம் மடம் நாணம் மடம் பயிர்ப்பு படம் எப்படி உள்ளது. நான்கு குணங்களையும் வைத்து ஒரு பெண்ணை பார்க்கக்கூடாது என்பது கதையாம்.

    நடிகை அக்‌ஷரா நடித்த அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்கிற படம் 2 ஆண்டுகள் போராட்டத்திற்கு பின் இன்று ஓடிடி தளத்தில் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது. படத்தின் தலைப்பில் உள்ள 4 விஷயங்களை வைத்து பெண்களை அணுகக்கூடாது என்பதே மூலக்கருத்து என்று இயக்குநர் சொல்லியிருக்கிறார். கமல் மகள் நடித்துள்ளார் என்பதால் எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளது.

    நடிகை அக்‌ஷரா ஹாசன் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்க, ட்ரெண்ட் லவுட் (Trend Loud ) நிறுவனத்தின் சார்பில் உருவாகும் முதல் திரைப்படத்தின் "அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு" படம் எழுதி, இயக்கியவர் இயக்குநர் ராஜா ராமமூர்த்தி. மிகப்பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்ட படம் நான் எப்படி நடிக்க வேண்டும் என்று எனக்கு உணர்த்திய படம் என்று அக்‌ஷரா கூறியிருந்தார். அவர் மெனக்கிட்டது நன்றாக தெரிகிறது.

    Akshara Haasan’s Direct OTT release Achcham Madam Naanam Payirppu movie Review

    தென்னிந்திய டிஜிட்டல் தளத்தில், புதிய தயாரிப்புகள் மூலம் முன்னிலையில் இருக்கும் நிறுவனம் ட்ரெண்ட் லவுட். தற்போது இந்நிறுவனம், படங்கள் தயாரிப்பில் களமிறங்கியுள்ளது. இவர்கள் தயாரிப்பில் ராஜா ராமமூர்த்தி இயக்கியுள்ள படம் 'அச்சம், நாணம் மடம் பயிர்ப்பு'. இந்தப் படத்தில் அக்‌ஷரா ஹாசன் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரபல பாடகி உஷா உதுப், அக்‌ஷரா ஹாசனுக்குப் பாட்டியாக நடித்துள்ளார்.

    இவர்களுடன் மால்குடி சுபா, சுரேஷ் மேனன், அஞ்சனா ஜெயப்பிரகாஷ், ஜானகி சபேஷ் கலைராணி, ஷாலினி விஜயகுமார், சித்தார்தா சங்கர், ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் கதைக்களம் குறித்து இயக்குநர் ராஜா ராமமூர்த்தி முன்னர் பேட்டியில் கூறியபோது "சமூகத்தைப் பொறுத்தவரை அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எனும் நான்கு பண்புகளும் ஒவ்வொரு நல்ல பெண்ணும் கொண்டிருக்க வேண்டிய தகுதிகளாகக் கருதப்படுகின்றன. எங்கள் படம் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எனும் தலைப்பின் வழியே ஒரு பெண்ணை எது நல்லவள் ஆக்குகிறது எனும் கேள்வியை ஒரு பெண்ணின் பார்வையில் கேட்கிறது". என்று கூறியிருந்தார்.

    பெரிதாக புரட்சி செய்யப்போகிறார்களோ அல்லது புதுமைப்பெண்ணாக காட்ட எதையாவது செய்யப்போகிறார்களோ என்கிற கருத்துடன் சென்றால் சத்தியமாக கடைசி வரை குழப்பத்திலேயே வைத்து அனுப்பிவிட்டார் இயக்குநர். கதாநாயகி தோழியுடன் சேர்ந்து செய்யும் செயல் பற்றி என்ன சொல்ல வருகிறார், நான்கு குணங்களில் எதை வைத்து பெண்களை சமூகம் பார்க்கிறது என்பது பற்றி ஏதாவது மெசேஜ் சொல்வார் என்று பார்த்தால் படக்குன்னு படம் முடிந்துவிடுகிறது.

    Akshara Haasan’s Direct OTT release Achcham Madam Naanam Payirppu movie Review

    காலையில் கொட்டாவி விட்டப்படி எழுந்திருக்கிறார் அக்‌ஷரா ஹாசன். படமும் மெதுவாக எழ முயற்சிக்கிறது. ஆனால் முயற்சித்தும் முடியவில்லை. தூங்கி எழுந்து பல் துலக்குவதை எல்லாம் முழு நீளமாக காட்சியாக புதுமை என்கிற பெயரில் வைத்தால் எப்படி வேகமாக நகரும். வழக்கமான சின்ன குடும்பம். அம்மா மால்குடி சுபா சங்கீதம் கற்றுத்தருபவர், இடையிடையே அழுகிறார் ஏன் என்று தெரியவில்லை. பாட்டி உஷா உதூப் சங்கீதம் கற்றுத்தருகிறார். அப்பா சுரேஷ் மேனன் மொத்தமே 3 சீன் வருகிறார், அதில் 2 சீன் மகளுடன் உணவருந்துகிறார், ஒருதடவை டிவி பார்க்கிறார்.

    மகள் அக்‌ஷராவுக்கும் குடும்பத்துக்கும் ஒட்டவே இல்லை வெகு தூரம் என்பதுபோல் காட்டுகிறார்கள், மற்றபடி அக்‌ஷரா என்ன செய்கிறார் படிக்கிறாரா? வேலைக்கு போகிறாரா? எதுவும் தெரியவில்லை. இடையில் அவ்வப்போது நாயைக்கூப்பிட்டு வாக்கிங் போகிறார். பாய்ஃபிரண்ட் கிரிக்கெட்டரை லவ் பண்ணுகிறார். அக்‌ஷராவுடன் பேச நேரமில்லாமல் நெட்பிராக்டீஸ் செய்துக்கொண்டே காதலிக்கிறார் காதலன்.

    இரண்டு தோழிகள் ஒருவர் அல்ட்ரா மாடர்ன் ( உன்னை மாதிரி 6 மணிக்கு கரண்ட் போனவுடன் சேர்ந்து அஞ்சு பத்து பிள்ளை பெறுகிற ரகமா? என கல்யாண வாழ்க்கையை கேள்வி கேட்கும் ரகம்) பகீரங்கமாக தோழிக்கு டேட்டிங் பற்றி சொல்லி காண்டமும் வாங்கி கொடுத்து அதை பயன்படுத்துவதற்கு முன் எப்படி சோதித்து பார்க்கவேண்டும் என்றும் சொல்லிக்கொடுக்கும் ( இந்தக்காட்சி வரும்போது பிள்ளைகள் யாராவது என்னன்னு கேட்டால் கம்பெனி பொறுப்பல்ல) தோழி. இன்னொரு தோழி அவ்வப்போது இதெல்லாம் தப்புன்னு சொல்லிவிட்டு போய்விடுவார்.

    தன் காதலனுடன் டேட்டிங் போனாரா? அப்புறம் என்ன நடந்தது? என்பதே மீதிக்கதை. இதில் தலைப்பு பற்றி இயக்குநர் சொன்னாரேன்னு ஏதும் மெசேஜ் உள்ளதான்னு யாரோ கேட்பதுபோல் தெரிகிறது. படம் பார்த்தால் உங்களுக்கே மெசேஜ் புரியும். கடைசியில் அக்‌ஷரா சோலோ டான்ஸ் ஒன்று ஆடுகிறார். மீன் குஞ்சுக்கு இப்போதெல்லாம் நீந்த தெரிவதில்லை. இதை திரைப்படமாக பார்ப்பதா, குறும்படமா? ஆந்தாலஜி வகை படமா? படம் பார்த்தவர்கள் சொல்லுங்கள்.

    மற்றபடி ஒளிப்பதிவாளராக ஷ்ரேயா தேவ் ட்யூப் மெனக்கிட்டது தெரிகிறது. படமாக்கியுள்ள விதம் அற்புதமாக உள்ளது. இசை சுஷா காதுக்கு இனிமையாக உள்ளது. திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் இயக்குநர் ராஜா ராமமூர்த்தி.

    RRR Movie Review : சுதந்திர போராட்டம் பின்னணியில் ஒரு மார்வெல் ஜிம்மிக்ஸ்.. ஆர்.ஆர்.ஆர் விமர்சனம்!RRR Movie Review : சுதந்திர போராட்டம் பின்னணியில் ஒரு மார்வெல் ஜிம்மிக்ஸ்.. ஆர்.ஆர்.ஆர் விமர்சனம்!

    English summary
    Akshara Haasan’s Direct OTT release movie Achcham Madam Naanam Payirppu Review is here. This movie streaming in Amazon Prime.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X