Darlings Review: கொட்டுற தேளோட கொடுக்க புடுங்கினா போதுமே.. கொலை செய்யணுமா? டார்லிங்ஸ் விமர்சனம்!

நடிகர்கள்: ஆலியா பட், விஜய் வர்மா, ஷெஃபாலி ஷா

இசை: விஷால் பரத்வாஜ், பிரசாந்த் பிள்ளை

இயக்கம்: ஜஸ்மித் கே ரீன்

ஓடிடி: நெட்பிளிக்ஸ்

Rating:
3.0/5

மும்பை: ஒரு பெண்ணை திருமணம் செய்து விட்டாலே அவள் நமக்கு அடிமை என்கிற எண்ணம் ஆண்களுக்கு வந்து விடுகிறது.

என் பொண்டாட்டியை நான் அடிக்கிறேன், அதை கேட்க நீ யாருன்னு சமாதானம் செய்ய வருவோரிடமே எகிறும் ஆண் புத்தியை அந்த பெண்ணே எட்டிக் கொண்டு மிதித்தால் எப்படி இருக்கும் என்கிற பழிக்கு பழி வாங்கும் படம் தான் டார்லிங்ஸ்.

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஆலியா பட், விஜய் வர்மா, ஷெஃபாலி ஷா மற்றும் ரோஷன் மேத்யூ நடிப்பில் வெளியாகி உள்ள டொமஸ்டிக் வயலென்ஸ் படமான டார்லிங்ஸ் படத்தின் விமர்சனத்தை விரிவாக இங்கே பார்ப்போம்..

என்ன கதை

என்ன கதை

ரயில்வேயில் டிக்கெட் கலெக்டர் வேலை கிடைத்தும் உயர் அதிகாரிகளின் டார்ச்சரால் கக்கூஸ் கழுவும் ஹம்சா ஷேக் (விஜய் வர்மா) அந்த கோபத்தை வீட்டில் இருக்கும் தனது காதல் மனைவி பத்ருனிஷாவிடம் (ஆலியா பட்) கொட்ட, 3 ஆண்டுகளாக கணவனிடம் அடிபட்டு மிதிப்பட்டு ஒன்றாக வாழ்ந்து வரும் பத்ரு, பத்திரகாளியாக மாறி தனது அம்மாவுடன் இணைந்து கொண்டு கணவனை கட்டி வைத்து தன்னை எப்படியெல்லாம் டார்ச்சர் செய்தானோ அப்படியெல்லாம் டார்ச்சர் செய்வது தான் டார்லிங்ஸ் படத்தின் கதை.

ஆலியா பட் அசத்தல்

ஆலியா பட் அசத்தல்

முதல் பாதியில் கணவர் என்ன அடித்தாலும், இரவு நேரத்தில் அதை வாங்கிக் கொண்டு அடுத்த நாள் அவன் வேலைக்கு செல்லும் போது ஆம்லேட் போட்டுக் கொடுப்பதும், உலகத்திலேயே பெஸ்ட் ஆம்லேட் என பாராட்டி விட்டு, சின்னதாக கணவன் ரொமான்ஸ் செய்ததும் அப்படியே அவன் பேச்சில் மயங்கி விடும் டிப்பிக்கல் இந்திய மனைவியாக நடித்து அசத்தி உள்ளார்.

இயக்குநரின் கோபம்

இயக்குநரின் கோபம்

அப்படி அம்மாஞ்சியாக இருக்கும் அரக்கியாக மாறி பழி வாங்க நினைத்தால் புருஷன்களின் கதி என்னவாகும் என்பதை பயமுறுத்தும் தொனியில் பக்காவாக படம் எடுத்து இருக்கிறார் பெண் இயக்குநர் ஜஸ்மீத் கே. ரீன். படம் முடிந்து கடைசியாக ஆலியா பட் தனியாக அமர்ந்து பார்க்கும் தியேட்டரில் ஓடும் படத்தின் கிரெடிட்ஸில் வரும் பெண்களை அடிப்பது உடல்நலத்திற்கு கேடு என்கிற கார்டு இயக்குநரின் கோபத்தை தெளிவாக வெளிப்படுத்துகிறது.

இப்படியொரு மாமியாரா

இப்படியொரு மாமியாரா

ஆலியா பட்டை விட படத்தில் அதிகம் ஸ்கோர் செய்வது சீனியர் நடிகை ஷெஃபாலி ஷா தான். மருமகனிடம் மூக்கில் அடிவாங்கிய பின்னர், அவனை தீர்த்துக் கட்ட மகளுக்கு உதவும் காட்சிகள். கேரம் போர்ட் ஆடும் போது, மருமகன் கை போர்ட்டில் பட்டு விட்டது என அடிக்கும் இடம், கடைசியாக அந்த ரயில் டிராக்கில் மருமகனை கட்டிப் போட்டு விட்டு கொல்ல செய்யும் ஏற்பாடு என இப்படியொரு மாமியார் இருப்பாரா? என பயமுறுத்துகிறது.

பிளஸ்

பிளஸ்

ஆலியா பட், விஜய் வர்மா மற்றும் ஷெஃபாலி ஷா என இந்த மூவரை சுற்றியே கதை நகர்ந்தாலும், படம் பார்க்கும் போது எந்தவொரு போரும் அடிக்காததே படத்திற்கு பெரிய பிளஸ். டார்க் காமெடி படம் என்று பார்க்கும் ரசிகர்களுக்கு டார்க் டிராஜெடி படமாக இயக்குநர் ஏன் முடித்தார் என்பது தெரியவில்லை. ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் என அனைத்துமே பிளஸ் தான். அதிலும், அந்த தவளை மற்றும் தேள் கதை தான் படமே!

மைனஸ்

மைனஸ்

ஆனால், கொட்டுற தேளின் கொடுக்கை பிடுங்கினாலே போதுமே, ஏன் கொலை செய்ய வேண்டும் என்கிற கேள்வி ஏன் இப்படியொரு படத்தை இயக்குநர் வெறிகொண்டு எடுத்து இருக்கிறார் என்பது வரை நீள்கிறது. இந்த படத்தின் மூலம் இயக்குநர் தவறான பாதையை காட்டுகிறார் என்பது தெளிவாக தெரிகிறது. கடைசியில் ஆலியா பட்டை மீண்டும் தவளை ஆக மாற்றி விடுவது போல செய்து விட்டு, ஹீரோவை காலி செய்வது மொத்த படத்தையும் டோட்டலாக காலி செய்து விடுகிறது. ஆலியா பட் அம்மாவும் இப்படித்தான் தனது கணவரை போட்டுத் தள்ளினார் என்பது, திடீரென ரோஷன் மேத்யூவுக்கு ஆலியா பட்டின் அம்மா லிப் லாக் அடிப்பது போன்ற காட்சிகள் தேவையற்றவை. டார்லிங்ஸ் - டொமஸ்டிக் வயலென்ஸ் யார் செய்தாலும் தவறு தான்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X