ஆலியா பட்டின் கங்குபாய் கத்தியவாடி படம் எப்படி இருக்கு? டிசாஸ்டரா.. பிளாக்பஸ்டரா?

மும்பை: பாலிவுட்டின் முன்னணி இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன் நடித்துள்ள கங்குபாய் கத்தியவாடி திரைப்படம் இன்று வெளியானது.

தொடர்ந்து பாலிவுட் படங்கள் சொதப்பி வரும் நிலையில், கங்குபாய் திரைப்படம் அதில் இருந்து வித்தியாசப்பட்டதா என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

கடைசியாக ஆலியா பட் நடிப்பில் வெளியான சடாக் 2 திரைப்படம் டிசாஸ்டர் ஆன நிலையில், இந்த படம் டிசாஸ்டரா? பிளாக்பஸ்டரா? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், படத்தை பார்த்த ரசிகர்களின் விமர்சனங்களை இங்கே பார்ப்போம்..

ஃபர்ஸ்ட் ஹாஃப் ஓகே

ஃபர்ஸ்ட் ஹாஃப் ஓகே

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ஆலியா பட் மும்பையின் ரெட் லைட் ஏரியாவில் உள்ள பெண்களுக்காக டானாக மாறிய கங்குபாயின் பயோபிக்கில் நடித்துள்ளார். ஆலியா பட் அந்த கதாபாத்திரத்திற்கு சற்றும் பொருந்தவில்லை என்கிற விமர்சனங்கள் ஒரு பக்கம் எழுந்து வரும் நிலையில், ஃபர்ஸ்ட் ஹாஃப் நல்லாதான் இருந்தது. இரண்டாம் பாதி தான் பார்க்க முடியவில்லை என இந்த ரசிகர் விமர்சித்துள்ளார்.

பாசிட்டிவ் விமர்சனங்கள்

பாசிட்டிவ் விமர்சனங்கள்

ரொம்பவே டஃப் ஆன கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் நடிகை ஆலியா பட், அவர் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது என்றும் படத்திற்கு பல பேர் பாசிட்டிவ் விமர்சனங்களை சொல்லி வருகின்றனர் என்றும் ஆலியா பட்டின் ரசிகர்கள் சந்தோஷமடைந்துள்ளனர்.

செம ஆட்டிட்யூட்

செம ஆட்டிட்யூட்

கங்குபாயாக திரையில் ஒவ்வொரு காட்சிகளிலும் நடிகை ஆலியா பட் தனது ஆட்டிட்யூடால் மிரட்டி எடுத்து இருக்கிறார். இந்த கதாபாத்திரம் அவருக்கு பொருந்தாது என ஏகப்பட்ட பேர் சொன்ன நிலையில், அதையெல்லாம் பொய்யாக்கி காட்டி உள்ளார். இந்த ஆண்டு அனைத்து விருதுகளும் ஆலியா பட்டுக்கு குவியும் என்று அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

டிசாஸ்டர்

டிசாஸ்டர்

முதல் பாதி நல்லா இருந்தது போல இடைவேளைக்கு பிறகு படம் நன்றாக இருந்திருந்தால் நிச்சயம் பெரிய வெற்றியை பெற்றிருக்கும். ஆலியா பட்டுக்கு பதிலாக பிரியங்கா சோப்ரா, வித்யா பாலன் அல்லது தபு ஆகிய வேற யாரையாவது இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்திருந்தாலே படம் ஹிட் ஆகியிருக்கும் என பல பாலிவுட் ரசிகர்களும் தொடர்ந்து ஆலியா பட்டுக்கு எதிரான அதிருப்தி அலையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X