For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  Alita review: ஒரு எந்திர மனுஷியின் அதிரடி சாகசங்கள்... அலிடா தி பேட்டில் ஏஞ்சல்! விமர்சனம்

  |

  Rating:
  4.5/5

  சென்னை: ஒரு எந்திர மனுஷியின் அதிரடி சாகசங்கள் நிறைந்த, விஷுவல் விருந்தே அலிடா: தி பேட்டில் ஏஞ்சல் திரைப்படம்.

  பொதுவாக ஹாலிவுட் படங்களை மூன்று பிரிவுகளுக்குள் அடக்கிவிடலாம். வேற்றுகிரகவாசிகள் பூமிக்குள் நுழைந்து செய்யும் அட்டூழியங்களை தடுக்கப் போராடும் மனிதர்கள், பேட்மேன், ஸ்பைடர் மேன் போன்று காமிக் சூப்பர் ஹீரோ படங்கள் மற்றும் போர் படங்கள். இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து செய்த கலவை தான் இந்த அலிடா. இம்முறை ஒரு சுட்டிப் பெண்ணை கதையின் நாயகியாக்கி அதிர வைத்திருக்கிறார்கள்.

  Alita: The battle angel movie review

  கதை நிகழ்வது 2563ம் வருடம். பூமியில் நிகழ்ந்த அழிவுப் போரில் தப்பி பிழைத்த மனிதர்கள் சிலர் இரும்பு நகரத்தில் வாழ்ந்து வருகின்றனர். அங்கு வாழ்வதற்கு கோட்பாடுகள் அதிகம். அந்த கோட்பாடுகளை விதிப்பது ஷாலோம் எனும் மற்றொரு நகரில் வாழும் நோவா எனும் சர்வாதிகாரி. இந்நிலையில், ஒரு குப்பை தொட்டியில் இருந்து ஒரு எந்திர மனுஷியை கண்டெடுக்கிறார் சைபர் மருத்துவர் ஒருவர். அவர் மூலம் உயிர் பெறுகிறாள் எந்திர மனுஷியான அலிடா. இயல்பிலேயே போர் குணம் படைத்த அலிடா, தான் யார் என்பதை அறிய முற்படுகிறார். அப்போது யூகோ எனும் மனித வாலிபனுடன் காதலில் விழுகிறாள். நோவா அவளை கொல்ல முயல்கிறாள். எந்திர பெண்ணின் காதல் என்ன ஆகிறது, நோவாமிடம் இருந்து அலிடா எப்படி தப்பிக்கிறாள் என்பது தான் படத்தின் கதை.

  ஒரு பேராவுக்குள் அடக்கிவிடும் கதை தான். முழுக்க முழுக்க கற்பனையான ஒரு கதை. ஆனால் அதில் நம்பக தன்மையை ஏற்படுத்தி, இரண்டரை மணி நேரம் நம்மை அலிடாவின் உலகத்துக்கு அழைத்து சென்ற படக்குழுவை எத்தனை முறை வேண்டுமானாலும் பாராட்டலாம். கற்பனைக்கே எட்டாத பல விஷயங்களை படத்தில் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் எதையும் புறக்கணிக்க முடியவில்லை.

  Alita: The battle angel movie review

  அலிடாவை உருவாக்கியவிதம், அவளுடைய சண்டைகள், சாகசங்கள், மோட்டார் பால் விளையாட்டு என அனைத்துமே பிரமிக்க வைக்கிறது. ஒரு இடத்தில் கூட இது கிராபிக்ஸ் என்று சொல்ல முடியாத அளவுக்கு தத்ரூபதாக உருவாக்கி இருக்கிறார்கள் அலிடாவை. ஒரு 2.0 வருவதற்கே நமக்கு இங்கு மூச்சு முட்டுது. அலிடா ரேஞ்சுக்கு எல்லாம் ஒரு படம் வரணும்னா.... ஹும்னு பெருமூச்சு தான் விடணும்.

  Alita: The battle angel movie review

  மனிதனுக்கும் எந்திரத்துக்குமான காதலை மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். அலிடா தனது இதயத்தை வெளியில் எடுத்து காதலனிடம் நீட்டும் அந்த காட்சி, "இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதே" மொமண்ட். உண்மையிலேயே பிரமிப்பாக இருக்கிறது.

  Alita: The battle angel movie review

  படம் முழுக்க விஷுவல் விருந்து தான். குறிப்பாக மோட்டார் பால் போட்டி காட்சியை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு தட்டாது. தான் ஒரு அசாதரமாண இயக்குனர் மட்டுமல்ல, தயாரிபாளரும் கூட தான் என்பதை நிரூப்பித்திருக்கிறார் ஜேம்ஸ் கேமரூம்.

  Alita: The battle angel movie review

  வெறுமனே விஷுவலை வைத்து மட்டும் விளையாடாமல், படத்தில் ஒரு மெல்லிய காதல், தந்தை பாசம், தாய் பாசம், போராட்ட குணம் நிறைந்த செவ்வாய் கிரகவாசியான அலிடாவின் தேடல் என படத்தில் ரசிக்கக் கூடிய விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன.

  Alita: The battle angel movie review

  சண்டைக்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்கள், யூகோவின் வாகனம், ஷாலோமுக்கு செல்லும் வழி, பவுண்டி ஹண்டர்ஸ், எந்திர மனிதர்கள், எந்திர நாய்கள் என படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து விஷயங்களுமே நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகின்றன.

  Alita: The battle angel movie review

  கற்பனைக்கு எட்டாத, வாழ்வில் நடக்க முடியாத நிறைய விஷயங்களை மிக அழகாக சாத்தியப்படுத்துகிறாள் இந்த போர் தேவதை அலிடா.

  English summary
  James Cameron's Alita : The Battle angel is a science fiction movie with lots of enaging items in it.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X