Alpha X Review: ஆலியா பட் ‘ஆல்பா’ அட்டு ஃப்ளாப்பா.. என்னடா ஒரு ஸ்டார் ரேட்டிங் எல்லாம் வருது!
மும்பை: யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ஆலியா பட், ஷர்வாரி நடிப்பில் இன்று (ஜூலை 3) அடுத்த துரந்தர் ரேஞ்சுக்கு பில்டப் உடன் வெளியான ஆல்பா (Alpha) திரைப்படத்தை பார்த்து பாலிவுட் ரசிகர்கள் ஆளவிடுங்கடா சாமி என தியேட்டரை விட்டுத் தெறித்து ஓடி வந்தது தான் மிச்சம் என்கின்றனர்.
பல பாலிவுட் படங்களுக்கு பிஆர் டீமே தோற்கும் அளவுக்கு 4 ஸ்டார், 5 ஸ்டார் ரேட்டிங் கொடுக்கும் தரன் ஆதர்ஷ், சுமித் கடேல் போன்ற விமர்சகர்களே இந்த படத்துக்கு 1 ஸ்டார் ரேட்டிங் போடும் அளவுக்கு ஆலியா பட்டின் ஆல்பா அட்டு ஃப்ளாப்பா என ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.

லோகேஷ் கனகராஜின் LCU ரேஞ்சுக்கு பாலிவுட்டில் YRF யூனிவர்ஸ் உருவாக்கிய நிலையில், அதன் ஒரு அங்கமாக வெளியாகி உள்ள ஆல்ஃபா படத்தின் எக்ஸ் தள விமர்சனங்களை இங்கே பார்க்கலாம் வாங்க..
கிரிஞ்ச் ஃபெஸ்ட்: ஆலியா பட் நடிப்பில் இப்படியொரு கிரிஞ்ச் ஃபெஸ்ட் படத்தை வாழ்நாளில் பார்ப்பேன் என கொஞ்சமும் நினைக்கவில்லை. அந்தளவுக்கு படம் சூரமொக்கையாக உள்ளது. பாபி தியோல் சூப்பர் சோல்ஜர்களை உருவாக்கும் ஆல்பா அமைப்பை உருவாக்குகிறார். ஆனால், அது அரசாங்கத்தால் தடை செய்யப்படுகிறது. ஆனாலும், அவர் உருவாக்கிய ஆலியா பட், ஷர்வாரி உள்ளிட்ட போர் வீராங்கனைகளை வைத்து ரகசியமாக அந்த அமைப்பை நடத்த அதன் பின் என்ன நடக்கிறது என்கிற கதையை சொதப்பலான திரைக்கதை மற்றும் ரொம்பவே சுமாரான மேக்கிங் மற்றும் பல ஹாலிவுட் படங்களின் காப்பியுடன் எடுத்து வைத்துள்ளார் இயக்குநர் ரவைல். இந்த படத்துக்கு 100 கோடி பட்ஜெட் செலவு செய்தது சுத்த வேஸ்ட் என சுமித் கடேல் கழுவி ஊற்றியுள்ளார்.
ஒன்றரை ஸ்டார்: தரன் ஆதர்ஷ் கொஞ்சம் தாராளம் காட்டி ஆல்பா படத்துக்கு ஒன்றரை ஸ்டார் ரேட்டிங் கொடுத்துள்ளார். மேலும், ஒரே வார்த்தையில் விமர்சித்து வரும் தரன் ஆதர்ஷ் 'Weak' என பதிவிட்டு ஒட்டுமொத்த சோலியையும் முடித்துள்ளார். ஸ்பை யூனிவர்ஸில் இப்படியொரு தட்டையான படம் வெளியாகும் என எதிர்பார்க்கவில்லை என்றும் ஆலியா பட், பாபி தியோல் உள்ளிட்டவர்களின் கால் ஷீட்டையும் பெரிய பட்ஜெட்டையும் டைரக்டராக சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை என விளாசி வருகின்றனர். படத்தை பார்த்த பாலிவுட் ரசிகர்களும் ஆலியா பட் இதற்கு மேல் ஆக்ஷன் படங்களை தேர்வு செய்ய வேண்டாம் என்று கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications