twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Cadaver Review :அடுத்தடுத்து கொலை..விறுவிறுப்பு..அமலா பாலின் “கடாவர்“ படம் எப்படி இருக்கு?

    |

    நடிகர்கள்: அமலா பால், ஹரிஷ் உத்தமன்

    இயக்கம்: அனூப். எஸ். பணிக்கர்

    இசை: ரஞ்சின் ராஜ்

    Rating:
    3.0/5

    சென்னை : ஆடை திரைப்படத்திற்கு பிறகு அமலா பாலின் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் கடாவர்.

    அறிமுக இயக்குநர் அனூப். எஸ். பணிக்கர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தில் அமலா பாலுடன் நடிகர்கள் ஹரிஷ் உத்தமன், திரிகுன், வினோத் சாகர், அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    டிஸ்னி பிளஷ் ஹாட் ஸ்டாரில் நேரடியாக வெளியாகி உள்ள கடாவர் திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை விரிவாக பார்க்கலாமா?

    டிக்கெட் கட்டணம் உயர்வு, 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடியில் ரிலீஸ்: தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கைடிக்கெட் கட்டணம் உயர்வு, 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடியில் ரிலீஸ்: தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை

    கடாவர் கதை

    கடாவர் கதை

    த்ரில்லிங், அடுத்தடுத்து நடக்கும் கொலைகள் என கடாவர் படத்தின் தொடக்கமே சுவாரசியத்தை அதிகரித்துள்ளது. பிரபல மருத்துவரான சலீம் ரஹ்மானை ஒரு மர்ம மனிதன் காரோடு வைத்து எரித்து கொலை செய்து விடுகிறான். இந்த கொலைக்கும் சிறையில் இருக்கும் வெற்றி (திரிகுன்)க்கும் தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவருகிறது. ஆனால், சிறையில் இருக்கும் வெற்றியால் எப்படி கொலை செய்ய முடியும்? வெற்றிக்கு வெளியில் இருந்து உதவும் அந்த மர்ம கொலைகாரன் யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது தான் படத்தின் மீதிக்கதை?

    விறுவிறுப்பான

    விறுவிறுப்பான

    அறிமுக இயக்குநர் அனூப் படத்தில் எந்த இடத்திலும் தோய்வு இல்லாமல் அடுத்தடுத்து ட்விஸ்ட் வைத்து படத்தை விறுவிறுப்பாக கொண்டு சென்று இருக்கிறார். போலீஸ் தடயவியல் நிபுணரான பத்ரா தங்கவேல் (அமலா பால்), உதவி ஆணையர் விஷாலுடன் (ஹரிஷ் உத்தமன்) இணைந்து கொலைக்கான காரணத்தையும் கொலைகாரனையும் தேடி அலைந்து வருகின்றனர்.

    கம்பேக் கொடுத்த அமலா பால்

    கம்பேக் கொடுத்த அமலா பால்

    அமலா பால் டாக்டர் பத்ரா கதாபாத்திரத்தில் மிரட்டி உள்ளார். அமலா பாலின் ஹேர் ஸ்டைலில் மட்டும் மாற்றம் இல்லை ஒட்டுமொத்தமாக வேறுவிதமான நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்துள்ளார் அமலா பால். பிணக்குவியலுக்கு இடையே எந்தவிதமான சலனமும் இல்லாமல் சாப்பிடும் காட்சி உண்மையில் மிரட்டல்தான். கடாவர் திரைப்படம் நிச்யம் அமலா பாலுக்கு கம்பேக் கொடுக்கும் திரைப்படமாக அமைந்துள்ளது.

    திகிலூட்டும் கதை

    இறந்த உடல்கள், சவக்கிடங்கு, கொடூரக் கொலைகள் என கண்களை விரியவைத்து வியப்பில் ஆழ்த்தியது. முதல் பாதியில் அடுத்தடுத்து கொலை, கொலைக்கான காரணம் புரியாமல் திணறும் போலீஸ் என கதையை மிகவும் அழகாக வடிவமைத்திருந்தார் அபிலாஷ் பிள்ளை. கதைக்கு ஈடு கொடுக்கும் வகையில், ரஞ்சின் ராஜின் பின்னணி இசை திகிலூட்டியது. ஒட்டுமொத்தமாக சொல்லப்போனால் படத்தின் ஸ்கின் பிளே, அரவிந்த் சிங் ஒளிப்பதிவு என அனைத்தும் ரசிக்கும் படி அமைந்து படத்திற்கு பிளஸாக அமைந்துவிட்டன.

    சூப்பர் கிளைமாக்ஸ்

    சூப்பர் கிளைமாக்ஸ்

    வெற்றியின் மனைவியாக வரும் அதுல்யா ரவி சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், தனது கேரக்டருக்கு என்ன தேவையோ அதைவெளிப்படுத்தி இருந்தார். வெற்றியின் வாழ்க்கையில் நடத்த சோகம்,கொலைக்கான காரணத்தை கிளைமாக்ஸில் சொன்னவிதம் சிம்ளி சூப்பர்.

    இதுதான் மைனஸ்

    இதுதான் மைனஸ்

    படம் பாராட்டும் வகையில் இருந்தாலும், வெற்றி அதுல்யா ரவியின் காதல் பிளாஷ் பேக், ரித்விக்காவின் பிளாஷ் பேக் என அடிக்கடி பிளாஷ் பேக்குள் இருப்பது போல ஒரு தோற்றத்தை உருவாக்கியது இதில் மட்டும் இயக்குநர் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். இருப்பினும் இப்படி ஒரு கதையை துணிந்த தயாரித்துள்ள அமலா பாலுக்கு வாழ்த்துக்கள்.

    English summary
    Amala Paul‘s Cadaver Movie Review in tamil, Cadaver thrillig movie
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X